Don't Miss!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னடா இங்கேயும் புல்லட் துப்பாக்கிக்கே வருது.. அமலா பாலின் புது வெப்சீரிஸ் ட்விட்டர் விமர்சனம்!
ஹைதராபாத்: தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகள் ஒவ்வொருவராக வெப்சீரிஸ் பக்கம் சென்று வெளுத்து வாங்கி வருகின்றனர்.
நடிகை காஜல் அகர்வால், தமன்னா, சமந்தாவை தொடர்ந்து நடிகை அமலா பால் நடித்துள்ள தெலுங்கு வெப்சீரிஸ் நேற்று இரவு ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது.
டெனெட், மாநாடு படம் போல இந்த வெப்சீரிஸில் டைம் லூப் கான்செப்ட் விளையாடி உள்ளது. இதன் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காண்போம்.
குடி எடமாயித்தே.. இன்று இரவு ஓடிடியில் ரிலீஸாகும் அமலா பாலின் வெப்சீரிஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு!

அமலா பால் வெப்சீரிஸ்
லூசியா மற்றும் யூடர்ன் படங்களை இயக்கிய இயக்குநர் பவண் குமார் இயக்கத்தில் பக்காவாக உருவாகி உள்ள குடி எடமாயித்தே வெப்சீரிஸில் நடிகை அமலா பால் போலீஸ் அதிகாரி துர்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால், தமன்னா, சமந்தாவை தொடர்ந்து இவரும் வெப்சீரிஸ் பக்கம் வந்துள்ளார்.

ஒடிடி புதிதல்ல
ஆனால், நடிகை அமலா பாலுக்கு ஒடிடி தளம் ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே நெட்பிளிக்ஸில் பிட்ட கதலு ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்துள்ளார் அமலா பால். பாலிவுட்டிலும் சில வெப்சீரிஸ்களில் ஒப்பந்தமாகி உள்ளார். கவர்ச்சியை குறைத்து விட்டு இந்த வெப்சீரிஸில் அமலா பால் நடித்து இருப்பது பாராட்டுக்குரியது.

டைம் லூப்
ஒரே நாள் பிப்ரவரி 29ம் தேதி நடக்கும் ஒரு விபத்தால் டைம் லூப் எனும் கால சுழற்ச்சிக்குள் சிக்கித் தவிக்கும் அமலா பாலும் ராகுல் விஜய்யும் சந்திக்கும் பிரச்சனைகளும், அதில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகப் போகிறாங்க என்கிற தீர்வும் தான் இந்த வெப்சீரிஸின் கதை. 8 எபிசோடுகளில் இந்த வெப்சீரிஸை பக்காவாக இயக்கி உள்ளார் பவண் குமார்.

மைண்ட் பிளோயிங்
சமீபத்தில் வெளியான சயின்ஸ் ஃபிக்ஷன் வெப்சீரிஸ்களிலேயே வேற லெவல் மைண்ட் பிளோயிங்காக குடி எடமாயித்தே இருப்பதாக இந்த வெப்சீரிஸை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அமலா பாலின் நடிப்பு அசத்தலாக உள்ளதாம்.

ஒரே மூச்சில்
முதலில் 4 எபிசோடுகளையும், மறுநாள் 4 எபிசோடுகளையும் பார்க்கலாம் என்றே நினைத்தேன். ஆனால், அமலா பாலின் இந்த டைம் லூப் வெப்சீரிஸ் என் எண்ணத்தையே மாற்றி விட்டது. ஒரே மூச்சில் அமர்ந்து முழுமையாக பார்த்து முடித்து விட்டேன். 5க்கு 4 மார்க் என மார்க்கையும் போட்டுள்ளார்.

சீட் எட்ஜ் த்ரில்லர்
டெனெட், மாநாடு டீசர் எல்லாம் பார்த்த ரசிகர்களுக்கு இந்த வெப்சீரிஸ் நிச்சயம் மிரட்டும் வண்ணமாக இருக்கும் என்றும், பக்காவான திரைக்கதையுடன் தரமான மேக்கிங்கில் உருவாகி உள்ள சீட் எட்ஜ் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் என அமலா பாலின் வெப்சீரிஸுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.