twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமிதாப்பின் JHUND Review: எளிய மக்களுக்கு வாய்ப்புக்கொடுத்து பாருங்கள்...ஆணித்தரமாக சொல்லும் படம்

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள் : அமிதாப், அங்குஷ் கேதம் கதை, இயக்கம் : நாக்ராஜ் மஞ்சுலே, தயாரிப்பு : மீனு அரோரா

    இசை : அஜே-அடுல்

    ரேட்டிங் 3/ 5

    சென்னை: உச்ச நட்சத்திரங்கள் வன்முறை, வழக்கமான மசாலா பாணியில் நடிக்க இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த அமிதாப் வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடித்துக் கலக்குகிறார்.

    ஃபுட்பால் கோச்சாக ஜுன்ட் படத்தில் அமிதாப் வாழ்ந்துள்ளார். ஜுன்ட் படம் எளிய மக்களின் வாழ்க்கையை பேசுகிறது.

    பான் இந்தியா பற்றி கோலிவுட், டோலிவுட், சாண்டில்வுட் சிந்திக்கும் நேரத்தில் சேரிப்பகுதி சிறுவர்கள் உரிமைப்பற்றி சிந்தித்து எடுக்கப்பட்ட படம் ஜுன்ட்.

    என்னடா நடக்குது இங்க...அண்ணாச்சி பட அப்டேட் போட்டா சூர்யா ஃபேன்ஸ் ரீட்வீட் பண்ணுறாங்க என்னடா நடக்குது இங்க...அண்ணாச்சி பட அப்டேட் போட்டா சூர்யா ஃபேன்ஸ் ரீட்வீட் பண்ணுறாங்க

    பான் இந்தியா பட ஆதிக்கம்

    பான் இந்தியா பட ஆதிக்கம்

    தென்னிந்தியாவில் பான் இந்திய மொழிகள் என்று பல படங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரை வசூலை பார்த்து வருகின்றன. அதேநேரம் பாலிவுட் திரை உலகம் சரியான படங்கள் வெளிவராமல் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில் பாலிவுட் மானத்தைக் காக்கும் வகையில் அமிதாப் பச்சன் நடிப்பில் 'ஜுன்ட்' (JHUND) திரைப்படம் வெளியாகியுள்ளது.

    சேரிப்பகுதி சிறுவர்களைப்பற்றி சிந்த நிஜ கோச்

    சேரிப்பகுதி சிறுவர்களைப்பற்றி சிந்த நிஜ கோச்

    சேரிப்பகுதி சிறுவர்களைப்பற்றி சிந்தித்த நிஜ கோச் அந்த வகையில் அவருடைய பட வரிசையில் சிறப்பான படமாக 'ஜுன்ட்' (JHUND) அமைந்துள்ளது. சேரிப்பகுதி சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றி கால்பந்து விளையாட்டு மூலம் அவர்களை உலகறிய செய்த விஜய் பர்சே என்கிற ஃபுட்பால் கோச் ஒருவரின் நிஜ வாழ்க்கையை கொண்டு அமைக்கப்பட்ட பயோபிக் படம் தான் 'ஜுன்ட்' (JHUND) . இந்த படத்தில் விஜய் புட்பால் கோச் விஜய்யின் பாத்திரத்தில் நடித்துள்ளார் அமிதாபச்சன். இந்தப்படம் தற்போது OTT-ல் ஜி-5 தளத்தில் வெளியாகியுள்ளது.

    ஒரிஜினல் மனிதரின் பயோபிக் பிக்சர்

    ஒரிஜினல் மனிதரின் பயோபிக் பிக்சர்

    சேரியில் வசிக்கும் சிறுவர்களை தயார் செய்து உலக அளவில் வீடற்றோர் புட்பால் (Homeless Soccer) போட்டிக்கு அழைத்துச் சென்று சென்றவர்தான் விஜய் பர்சே (அமிதாப்) அவருடைய போராட்ட வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிக சிறப்பான படங்களில் ஒன்று எனலாம். படத்தின் கதை இதுதான், கல்லூரி ஒன்றில் ஃபுட்பால் கோச்சாக இருக்கும் விஜய் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள சேரிப் பகுதியில் இளைஞர்கள், சிறுவர்கள் சிலர் திருடுவது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது என்பதையெல்லாம் பார்க்கிறார்.

    சிறுவர்களை திருத்த போராடும் அமிதாப்

    சிறுவர்களை திருத்த போராடும் அமிதாப்

    ஒருநாள் அங்குள்ள இளைஞர் இடையே நடக்கும் சண்டையை விலக்கி விடும் அவர், அந்த இளைஞர்கள் பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து காலால் உதைத்து விளையாடுவதை பார்த்து அவர்களை திருத்த முடிவெடுக்கிறார். மறுநாள் அவர்களுக்கு ஃபுட்பால் ஒன்றை கொடுத்து அரை மணி நேரம் விளையாடினால் 500 ரூபாய் தருவதாக கூறுகிறார். பணத்துக்காக விளையாட தயாராகும் அந்த இளைஞர்கள் ஓரிரு வாரங்களில் புட்பால் விளையாட்டில் ஆர்வமாகி விடுகின்றனர்.

    கேலி கிண்டல்கள்

    கேலி கிண்டல்கள்

    பின்னர் அவர்களை டீம் பிரித்து எப்படி ஆட வேண்டும் என்று அவர் சொல்லித் தருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் மாற்றங்களை சுவாரஸ்யமாக காட்சி அமைத்து உள்ளார் இயக்குனர் அமிதாப் இந்த முயற்சிக்கு அது அங்கே கிண்டல்கள் கேலிகள் வந்தாலும் அவர் தனது முயற்சியில் தளராமல் இருக்கிறார் அவரது மனைவி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் மறுபுறம் அமிதாப்பின் செயல் பொறுக்காமல் மகன் வெளிநாட்டுக்கு படிக்க செல்கிறார்.

    அமிதாப் வைக்கும் கோரிக்கை

    அமிதாப் வைக்கும் கோரிக்கை

    அமிதாப் கல்லூரியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறார். பக்கத்தியில் சேரியில் உள்ள இளைஞர்களுக்கும், கல்லூரியில் உள்ள டீமுக்கும் ஒரு நட்பு ரீதியான ஃபுட்பால் மேட்ச் நடத்த வேண்டுமென்பதே அது. சேரியில் உள்ளவர்களை மோசமாக கருதும் மற்றொரு எதிர்க்கிறார், கல்லூரி முதல்வர் அதை அனுமதிக்க மறுக்கிறார். பின்னர் ஓய்வுபெறும் தனக்கு ஒரு பரிசாக இதை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் அமிதாப்.

    டங்கல் போன்று கால்பந்து போட்டி

    டங்கல் போன்று கால்பந்து போட்டி

    குறிப்பிட்ட நாளில் கால்பந்து போட்டி நடக்கிறது மெக்சிகோ இளைஞர்கள் போன்று கழுத்தில் பட்டை செயின், கூலிங்கிளாஸ், ஜாக்கெட், ஜீன் உடை அணிந்து ஸ்டைலாக வரும் சேரிப்பகுதி இளைஞர்கள் முதலில் ஃபுட்பால் பற்றிய தீவிரம் இல்லாமல் 5 கோல்கள் வாங்கிய நிலையில், ஆஃப் டைமில் அமிதாப் கோபமாக பேச அதை உணர்ந்து தங்கள் ஆடைகளை, கூலிங்கிளாஸ், செயின் உள்ளிட்டவற்றை கழற்றி வைத்துவிட்டு வழக்கமாக தாங்கள் விளையாடும் பாணியில் ஆடி அவர்களும் 5 கோல் அடிக்க மேட்ச் பரபரப்பாகிறது.

    விறுவிறுப்பாக மாறும் கதை

    விறுவிறுப்பாக மாறும் கதை

    பெனால்டிக் ஷூட் முறையில் நடக்கும் போட்டியில் சேரிப்பகுதி இளைஞர்கள் வெல்கிறார்கள். இது அவர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை தருகிறது. அமிதாப்பை நம்ப ஆரம்பிக்கின்றனர். கல்லூரியிலும் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்கின்றனர். சேரிப்பகுதி குழுவில் தலைவனாக நடித்திருக்கும் அங்குஷ் கேதாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் கல்லூரியில் படிக்கும் பணக்கார பெண்ணுக்கும் ஏற்படும் காதலை அழகாக காட்டியிருக்கிறார் கேமராமேன்.

    இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினை

    இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினை

    இந்த முயற்சியில் வெற்றி பெற்ற அமிதாப் ஏன் இதை விரிவுபடுத்த கூடாது என்று கல்லூரி முதல்வரிடம் பர்மிஷன் வாங்கி நாடு முழுவதும் உள்ள சேரிப் பகுதியில் உள்ள இளைஞர்களை திரட்டி நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஒன்றை நடத்துகிறார். இதற்கிடையே மோதல் ஒன்றில் ஈடுபட்ட கதாநாயகன் டான் அங்குஷ் போலீஸ் வழக்கில் சிக்குகிறார். அவரை மீட்டு ஒழுங்காக இருக்கும் படி கூறுகிறார் அமிதாப். குழுவில் இருந்த ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து நிலக்கரியை திருடும்பொழுது கீழே விழுந்து மரணம் அடைய மொத்தமாக அனைவரும் துவண்டு போகின்றனர்.

    தந்தைக்கு உதவும் மகன்

    தந்தைக்கு உதவும் மகன்

    அதன்பின்னர் ஒழுங்காக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அமிதாப் அனைவரையும் ஒழுங்குப்படுத்துகிறார். பயிற்சி எடுக்க வைக்கிறார் இதன் பின்னர் அமிதாப்பின் செயலைப் பார்த்து வெளிநாட்டில் படிக்கும் அவரது மகன் அமிதாப்புக்கு உதவ மும்பை திரும்புகிறார். அமிதாப் உலக அளவில் வீடற்றோர் கால்பந்து போட்டியில் சேரிப்பகுதி, கிராமப்பகுதி இளைஞர்களை தேர்வு பெற வைக்கும் அமிதாப்பின் முயற்சிக்கு உதவுகிறார்.

    மீதிப்படம் இதுதான்

    மீதிப்படம் இதுதான்

    இந்தியாவில் இருந்து ஒரு குழுவை தயார் செய்து அழைத்து வருமாறு உலக ஃபுட்பால் அமைப்பிடமிருந்து அழைப்பானை பெறுகிறார் அமிதாப்பின் மகன். அதை வைத்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறப்பான வீரர்களை தேர்வு செய்கிறார் அதில் அவருக்கு ஏற்படும் கஷ்டம் வீரர்கள் எவ்வாறு தயாராகி செல்கிறார்கள் போட்டிக்கு சென்றார்களா? கதாநாயகன் வழக்கில் சிக்கியதால் போட்டிக்கு செல்ல முடிந்ததா? என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் வகையில் மீதி படம் நகர்கிறது.

    கால்பந்து போட்டி போல் நகரும் படம்

    கால்பந்து போட்டி போல் நகரும் படம்

    படம் ஆரம்பித்ததிலிருந்து கால்பந்து போட்டி போல் விறுவிறுப்புடன் செல்கிறது. படத்தில் முக்கிய அம்சமே சின்ன சின்ன காட்சிகளில் கதையின் அம்சத்தை நகர்த்துவது. களத்தில் சேரிப்பகுதி சிறுவர்களாக நடித்துள்ள ஒவ்வொருவரும் அற்புதமாக இயல்பாக நடித்துள்ளனர். கால்பந்து போட்டியில் ஜெயித்த பின்பு தங்களுடைய வாழ்க்கை நிலை பற்றி ஒவ்வொருவரும் சொல்வதாக அமைந்துள்ள காட்சியில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

    சேரிப்பகுதி சிறுவர்களுக்கான உரிமை

    சேரிப்பகுதி சிறுவர்களுக்கான உரிமை

    பாஸ்போர்ட் கிடைக்காமல் வழக்கு காரணமாக தவிக்கும் கதாநாயகனுக்கு உதவ நீதிமன்றத்தில் வாதாடும் அமிதாப்பச்சன் வைக்கும் வாதம் மிக அற்புதமாக உள்ளது. இன்றைய சமுதாய நிலையை, வறுமை காரணமாக விளிம்பு நிலையில் வாழும் சேரிப்பகுதி குழந்தைகளை நாம் பார்க்கும் பார்வையும், அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் அழகாக சுட்டிக்காட்டுகிறார்.

    அமிதாப்பின் கோர்ட் காட்சி

    அமிதாப்பின் கோர்ட் காட்சி

    சேரிப் பகுதியில் உள்ள குழந்தைகளை நாம் எவ்வாறு புறக்கணிக்கிறோம் அவர்களை எவ்வாறு குற்றவாளிகளாக நாமும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறோம் சட்டத்தின் கதவுகள் அவர்களுக்கு எப்படி மூடப்படுகிறது. அவர்களை சுற்றி கட்டப்பட்டுள்ள உயரமான சுவர்களைத் தாண்டி சட்டத்தை நோக்கி அவர்கள் வர முடியாத சூழ்நிலை எவ்வாறெல்லாம் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் என்பதை மிக அழகாக அமிதாப்பச்சன் மூலமாக வாதமாக வைக்கப்படும் அந்தக் காட்சி ஒரு சிறப்பான ஒன்று.

    படத்தின் மையக்கரு இதுதான்

    படத்தின் மையக்கரு இதுதான்

    இளம் வயதில் குற்றம் புரிபவர்கள் வாழ்க்கை பின்னர் குற்றமே வாழ்க்கையாக மாறிவிடும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். வாய்ப்பு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் சாதிப்பார்கள் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. இதுபோன்ற பல படங்கள் வந்திருந்தாலும் அமிதாப் தன்னுடைய திறமையான நடிப்பால் இந்த படத்தை மேலும் மிளிர வைக்கிறார். கிராமத்திலிருக்கும் ஏழைப் பெண் ஒருவர் பாஸ்போர்ட் பெற போராடும் காட்சி மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு கேரக்டரும் தனித்தனியாக நமக்கு சலிப்பில்லாமல் காட்டுவதற்கு இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும்.

    சபாஷ் அமிதாப்

    சபாஷ் அமிதாப்

    படம் முழுவதும் ஒரு புட்பால் மேட்ச் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அமிதாப்பின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு மைல்கல் எனலாம். நாம் இன்றும் தென்னிந்திய நடிகர்கள், உச்ச நடிகர்கள், மூத்த நடிகர்கள் பலரும் நடிக்க தயங்குகிற விஷயத்தை மிக எளிதாக அமிதாப் கையாண்டு வருவது பாராட்டத்தக்கது.

    English summary
    Amitabh Bachchan starrer 'Jhund' beautifully exposes the denial of rights to children growing up in slums
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X