Anbe Diana X Review - அன்பே டயானா எக்ஸ் விமர்சனம்.. பாரி இளவழகன் சூப்பர் படம் கொடுத்தாரா இல்லையா?
சென்னை: பாரி இளவழகன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அன்பே டயானா. இதில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வரும் 17ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தி பதிவு செய்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக மாறியிருக்கிறார் பாரி இளவழகன். அவர் இயக்கிய முதல் படமான ஜமா சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் அப்போதைக்கு அடையாளம் பெற்ற முகங்கள் என்றால் இளையராஜாவும், சேத்தனும்தான். கதையின் மீது அதீத நம்பிக்கை வைத்து தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி அந்தப் படத்தை எடுத்திருந்தார் பாரி. படம் பார்த்த அனைவரும் பிரமிப்பில் வாயடைத்து போனார்கள்.

அன்பே டயானா: இப்போது அவர் அன்பே டயானா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதிலும் அவர்தான் ஹீரோ. அவருடன் ரம்யா ரங்கநாதன், ரோஜா, உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பரிதாபங்கள் கோபியும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். கண்டிப்பாக இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து பாரியின் மார்க்கெட்டை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ் விமர்சனம்: படமானது வரும் 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். படம் பார்த்த ராஜசேகர் என்பவர், "இயக்குநர் பாரி இளவழகன் பெரம்பூரையே படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார். அந்த உலகத்துக்குள் நம்மை அழைத்து சென்றார். ஷாலிமார் ரெஸ்டாரண்ட், உள்ளூர் ஸ்நாக்ஸ் கடைகள், தேவாலயங்கள், தெலுங்கு சாதி பெருமை பேரும் அம்மா கதாபாத்திரம், பெங்களூரு நண்பர் போன்ற விஷயங்கள் எல்லாம் படத்துக்கு தனித்துவத்தை கொடுக்கின்றன.
அதெல்லாம் சிறப்பு: தமிழ் சினிமாவில் வடசென்னையை பெரும்பாலும் இருண்ட கோணத்தில் காட்டி வந்த நிலைமையில் இந்தப் படத்தில் எல்லா இடங்களும் புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வழக்கமான காதல் மோதல் களத்தையே புதிதாக இயக்குநர் உணர வைக்கிறார். பரிதாபங்கள் கோபி மிகப்பெரிய பலமாக இருக்கிறார்" என குறிப்பிட்டிருக்கிறார்.
மனதை வருடம் படம்: சுகுமார் என்பவர், "மனதை வருடம் படம். சிறப்பான முதல் பாதியை தொடர்ந்து அசத்தலான இ ரண்டாவது பாதி. காதல், காமெடி, உறவுகள், குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் சரியான அளவில் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். கதைதான் கிங் என்பதை மீண்டும் நிரூபிக்கும் படம். இரண்டாவது பாதியின் திரைக்கதை மிக சிறப்பு. வசனங்களும், காட்சிகளும் தரமானவை. சேத்தனின் நடிப்பு படத்தின் பெரிய பலம்.
ரோஜாவின் கம்பேக்: ரோஜா மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரது நடிப்பு தீப்பொறி போல் இருக்கிறது பாரியின் கதாபாத்திரம் அனைவரும் தொடர்புப்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆங்கிலோ -இந்திய பெண்ணாக ரம்யா அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். கோபி மற்றும் ஹீரோயினின் தந்தை கேரக்டரும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. மனதுக்கு இதமாகவும், முழுமையாக ரசிக்க வைக்கும்படியும் இருக்கும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்" என தெரிவித்திருக்கிறார்.
கலகலப்பான அனுபவம்: அன்பே டயானாவுக்கு 3.5 மதிப்பெண் கொடுக்கலாம். மிகவும் ரசிக்க வைக்கும், இலகுவான காதல் நகைச்சுவை திரைப்படம். வழக்கமான கதைக்களத்தில் பயணித்தாலும் போதுமான அளவு நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் நாடகத்தன்மையுடன் ஆச்சரியப்படுத்துகிறது. கதைக்களத்தின் பின்னணியாக பெரம்பூர் அமைந்திருப்பது புத்துணர்ச்சி ஊட்டுகிறது. கடைசி 30 நிமிடங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கலகலப்பான அனுபவமாக அமைந்திருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். இப்படி படம் பார்த்தவர்கள் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
