Angikaaram Public Review - அங்கீகாரம் பப்ளிக் விமர்சனம்.. படம் பார்த்தவர்கள் சொல்வது இதுதான்

சென்னை: தென்பாதியான் இயக்கத்தில் கேஜேஆர், சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் அங்கீகாரம். விளையாட்டு துறையில் நடக்கும் அரசியல் தந்திரங்கள் உள்ளிட்ட விஷயங்களை இந்தப் படம் பேசியிருக்கிறது. இன்று வெளியான படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.

பா. இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தென்பாதியான். அவர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் அங்கீகாரம். விளையாட்டு துறையில் இருக்கும் சாதிய ஒடுக்கும்றையும், அரசியல் தகிடுதத்தங்களையும் தோலூரித்து காட்டியிருக்கிறது இந்தப் படம். செலிபிரிட்டிகள் ஏற்கனவே படத்தை பார்த்து கொண்டாடிய சூழலில் இன்று ரிலீஸான படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.

Angikaaram Movie Public Review - Audiences Praise the Sports Drama
Photo Credit:

பப்ளிக் விமர்சனம்: படம் பார்த்த ரசிகை ஒருவர் கூறுகையில், "படம் சூப்பராக இருந்தது. விளையாட்டை பற்றித்தான் முழு படமும். வேறு எதையும் படத்தில் பேசவில்லை. எங்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இந்தப் படத்தில் காண்பித்தது மாதிரி அரசு முழு ஒத்துழைப்பை வழங்கினால் எங்கள் பிள்ளைகளும் ஸ்போர்ட்ஸில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். என் மகன்கூட ஸ்போர்ட்ஸில்தான் இருக்கிறான்" என்றார். அவரது மகனும், 'தனக்கும் படம் பிடிக்கவே செய்திருக்கிறது' என பாராட்டினார்.

Also Read
ரச்சிதா பக்கத்தில் உட்கார்ந்ததும்.. பைங்கிளிகள்தான் போங்க.. ஆர்.வி.உதயகுமார் இப்படி சொல்றாரே
ரச்சிதா பக்கத்தில் உட்கார்ந்ததும்.. பைங்கிளிகள்தான் போங்க.. ஆர்.வி.உதயகுமார் இப்படி சொல்றாரே

ரசிகர் விமர்சனம்: அவர்களை தொடர்ந்து இன்னொரு ரசிகர் பேசுகையில், "விளையாட்டு வீரர்களுக்குத்தான் இந்தப் படம். இங்கே கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் அங்கீகாரம் தருகிறார்கள். மற்ற எந்த விளையாட்டுக்கும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. விளையாட்டு வீரர்களை மதிப்பதில்லை, அவர்களுக்கான நிதி கொடுப்பதில்லை. அதையெல்லாம் இந்தப் படத்தில் ஓபனாகவே சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓபனாக பேசி இதுவரை நான் பார்த்ததே இல்லை. இது ரியல் ஸ்டோரிதான். படம் நன்றாகவே இருக்கிறது" என்றார்.

சூப்பராக இருக்கிறது: அந்த ரசிகரை தொடர்ந்து பேசிய இன்னொருவர், "ஸ்போர்ட்ஸ் பற்றிய படம்தான் இது. சூப்பராக இருக்கிறது. எப்படி மெடல் வாங்குகிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் போராட்டங்களை யாருமே பார்ப்பதில்லை. அதனை படத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற எந்த விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை சொல்லியிருக்கிறார்கள்" என்று புகழ்ந்திருக்கிறார்.

மேலும் இன்னொருவரோ, "படம் நன்றாகத்தான் இருந்தது. விளையாட்டில் நடக்கும் அரசியல் பற்றித்தான் பெரிதாக பேசியிருக்கிறார்கள். இங்கே பல இடங்களில் க்ரவுண்ட் இல்லை. அதனால் பலரும் வேறு வழிகளுக்கு மாறிவிடுகிறார்கள். விளையாட்டு துறையில் ஊழல் இருக்கிறது. இது நல்ல படம்தான். ஹீரோ நன்றாக செய்திருக்கிறார். அவரது உடற்கட்டு நன்றாக இருக்கிறது. ஆனால் அது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. தடகள வீரர் ஃபீல் எனக்கு கிடைக்கவில்லை. மற்றபடி ஓகேதான்" என்றார்.

சிறுமி சொன்னது: படம் பார்த்த சிறுமி பேசுகையில், "விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. கிரிக்கெட் மட்டுமில்லை மற்ற விளையாட்டுக்களையும் ஸ்போர்ட்டாக பார்க்க வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது பாதி சூப்பராக இருந்தது. அனைத்து சீன்களுமே பிடித்திருந்தது. அந்த கோர்ட் சீனும் அருமையாக இருந்தது . கடைசியில் ஹீரோ வெல்வார் என்று பார்த்தேன். ஆனால் அவர் வெல்லவில்லை" என்றார். இப்படி, படம் பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகிறார்கள். இதனால் படக்குழு செம ஹேப்பியில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X