Animal Review: அப்பாவுக்காக மிருகமாகும் ரன்பீர் கபூர்.. சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் விமர்சனம்!

Rating:
3.5/5

நடிகர்கள்: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர்
இசை: விஷால் மிஸ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், மனன் பரத்வாஜ், ஜாம்ப், ஸ்ரேயாஸ் புரானிக், அசிம் கெம்சன்
ரன் டைம்: 3 மணி நேரம் 21 நிமிடங்கள்
இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா

சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இன்று உலகம் முழுவதும் அனிமல் திரைப்படம் வெளியாகி உள்ளது. ராவான அடல்ட் தீம் படமாக இந்த படம் உருவாகி உள்ள நிலையில், A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என மாஸ் மசாலா படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பு ரியலாகவே படத்தின் டைட்டிலுக்கு நீதி செய்யும் வகையில் மிருகத்தனமாகவே இருக்கிறது. ஆனால், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் எங்கே மாஸ் காட்டினார், எங்கே கோட்டை விட்டார் என்கிற முழு விமர்சனத்தையும் இங்கே காணலாம் வாங்க..

Animal Review in Tamil: Ranbir Kapoor performance only saves the film

அனிமல் பட கதை: ரன்விஜய் சிங் பல்பீர் (ரன்பீர் கபூர்) மிகப்பெரிய தொழிலதிபரின் மகன். ஆனால், அவனுக்கு அவனது அப்பாவின் பாசம் சிறு வயதில் இருந்தே கிடைக்கவில்லை. ஆனாலும், அப்பா புள்ளையாகவே வளர்ந்து வரும் அவன், ஒரு கட்டத்தில் அப்பாவை கொல்ல நடந்த சதியில் குண்டடி பட்டு தப்பிக்கிறார். இதற்கு மேல் அப்பா பல்பீர் சிங்கை (அனில் கபூர்) காப்பாற்ற எந்த எல்லைக்கும் வேண்டுமானால் செல்லும் ஹீரோவின் கதையாக இந்த அனிமல் உள்ளது. இடையே நாயகி கீதாஞ்சலி (ராஷ்மிகா மந்தனா) உடன் காதல் மற்றும் வில்லன் பாபி தியோல் உடன் சண்டை என 3 மணி நேரம் 21 நிமிடங்கள் இந்த படம் நீள்கிறது.

ரன்பீர் கபூர் பர்ஃபார்மன்ஸ்: அனிமல் என்கிற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு காட்சியிலும் ரன்பீர் கபூர் அமுல் பேபியில் இருந்து அனிமல் ஆவது வரை பிரிந்து மேய்ந்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா சந்தீப் ரெட்டி வங்கா ஹீரோயினை போல காதல், பாசம், கவர்ச்சி காட்டி கலக்கி உள்ளார். அனில் கபூர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மிரட்ட வில்லன் பாபி தியோல் முரட்டுத்தனம் காட்டுகிறார்.

Animal Review in Tamil: Ranbir Kapoor performance only saves the film

பிளஸ்: ஏகப்பட்ட இசையமைப்பாளர்களை பயன்படுத்தி சந்தீப் ரெட்டி வங்கா ஒவ்வொரு பாடலையும் ரசிக்கும் படியும் மெய் சிலிர்க்கும் படியும் கொடுத்துள்ளார். அதிலும், ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பிளஸ். இடைவேளைக்கு முன்பாக வரும் ப்ரீ இன்டர்வெல் காட்சி ஒன்றே போதும் கொடுக்கும் காசுக்கான திருப்தியை கொடுத்து விடும். அதே போல கடைசி கிளைமேக்ஸ் காட்சியில் ரன்பீர் கபூர் பேசும் அந்த கான்வெர்சேஷன் போர்ஷனும் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது.

மைனஸ்: முதல் பாதி பட்டாசாக இருக்கும் நிலையில், இரண்டாம் பாதியின் நீளமும் தேவையில்லாத சந்தீப் ரெட்டி வங்காவின் கிறுக்குத்தனமான காட்சிகளும் ரசிக்கும்படியில்லை. கதை ஒன்றும் புதிது இல்லை. அதே போல திரைக்கதையும் கடைசி வரை யூகிக்கும் விதமாகவே உள்ளது. ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைக்க இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தடுமாறியிருப்பது படத்தின் பலவீனம். ரன்பீர் கபூரின் அனிமல் ஆக்டிங்கையும் வித்தியாசமான திரை அனுபவத்தையும் பார்க்க விரும்பவர்களுக்கு இந்த அனிமல் அட்டகாசம். ஆனால், வெகுஜன மக்கள் கொண்டாடுவார்களா? என்றால் அதற்கு வாய்ப்பு ரொம்பவே கம்மி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X