டபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அண்ணாதுரை' - படம் எப்படி #AnnaduraiReview

By Vignesh Selvaraj

Recommended Video

டபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அண்ணாதுரை' - படம் எப்படி- வீடியோ

விஜய் ஆண்டனி நடிக்க, ஜி.சீனிவாசன் என்பவர் இயக்கியிருக்கும் படம் 'அண்ணாதுரை'. படத்திற்கு இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் விஜய் ஆண்டனியே செயல்பட்டிருக்கிறார். தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அண்ணாதுரை இங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறாரா எனப் பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அண்ணாதுரை'. மீசை இல்லைன்னா இந்திரன்.. மீசை இருந்தா இந்திரன் பாணியில் இங்கே தாடி இருந்தா அண்ணாதுரை, தாடி இல்லைன்னா தம்பிதுரை. கூடுதலாக அண்ணாதுரை கையில் காதலியின் பெயரை பச்சை குத்தியிருப்பார். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும், இன்டர்வெல்லுக்குப் பிறகு இருவருமே தாடி வைத்திருப்பார்கள் என்றாலும், இருவரையும் அடையாளம் காண்பதில் பெரிய சிரமம் இருக்காது.

publish on review section please

அண்ணாதுரை காதலி தன் கண்முன்னே விபத்தில் சிக்கி இறந்த துக்கத்தில் முழுநேரக் குடிகாரர் ஆனவர். குடிபோதையில், அண்ணாதுரை தெரியாமல் செய்யும் தவறு ஒரு குடும்பத்தையே எப்படி தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது என்பதும் படத்தின் ஒன்லைன்களில் ஒன்று. ஆம், படம் அதை மட்டுமே நோக்கி இல்லாமல் இன்டர்வெல் வரை தரதரவென நம்மையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நடக்கிறார்கள்.

publish on review section please

குடிகாரன் என்றாலும், நல்லவன் என்பதால் அண்ணாதுரையை ஒருதலையாகக் காதலிக்கிறார் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஜூவல் மேரி. ஆனால், திருமணத்தில் விருப்பமின்றிக் குடித்துவிட்டுத் திரிகிறார் அண்ணாதுரை. குடிப்பதைத் தவிர வேறு எந்தக் கெட்டபழக்கமும்(!) இல்லாதவர் அண்ணாதுரை. யார் வம்புக்கும் போகாதவருக்கு நண்பனுக்காக ஜாமீன் கையெழுத்துப் போடும் சூழல் வருகிறது. அது எப்படி அவரைச் சிக்கவக்கிறது, அவரது அப்பா நளினிகாந்துக்கும், வில்லன் சேரன் ராஜுக்கும் இடையேயான முன்விரோதம் என ஆங்காங்கே திரைக்கதையில் சில முடிச்சுகள்.

publish on review section please

தம்பிதுரை பள்ளிக்கூடத்தில் பி.டி மாஸ்டர். அவருக்கும் உறவினரின் மகளான டயானாவுக்கும் நிச்சயம் செய்யப்படுகிறது. இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளைக் காணச் சகிக்கவில்லை என்பதை உணர்ந்ததால் அதிகமாக வைக்கவில்லை போலிருக்கிறது. பாடல் காட்சிகளில் கூட சண்டைக்குப் போவது போலவே ஸ்டெப் வைக்கிறார் விஜய் ஆண்டனி. ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தாலும் லேசாவாவது அசையணும் பாஸு!

publish on review section please

விஜய் ஆண்டனி வழக்கம்போல் அதே நடிப்பு.. அதே பாவனை. சத்தம்போட்டுக் கூடப் பேசத் தெரியாதவராய் வருபவர் ஒரு கட்டத்தில் பத்துப் பேரை மொத்தமாகத் தெறிக்க விடுகிறார். சில சண்டைக் காட்சிகளைத் தாங்கும் சக்தி நமக்கு இல்லை என்பது தெரிந்தோ என்னவோ ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே விட்டுவிட்டு மீதத்தை கத்தரித்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் எடிட்டர் விஜய் ஆண்டனி.

குடிகார அண்ணாதுரை ஜூவல் மேரியின் காதலை ஏற்றுக்கொண்டு திருந்தி வாழ நினைக்கும்போது, எதிர்பாராவிதமாக ஒரு கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறார். ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து அவர் வெளியே வருவதற்குள் தனது குடும்பத்தில் என்னென்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதுதான் இன்டர்வெல்லில் தொடங்கும் கதை.

publish on review section please

தனது அறியாமையால், சிறையிலிருந்து வெளியே வருவதற்குள் தனது பூர்வீக ஜவுளிக் கடையை இழந்து விடுகிறார் அண்ணாதுரை. சூழ்நிலையால் தம்பிதுரை ரௌடியாக உருவெடுக்கிறார். தன்னால், தனது குடும்பம் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் தானே அதைத் தீர்த்து வைக்க முயல்கிறார். அதற்காக அவர் எடுத்த ஆயுதம் என்ன என்பது கிளைமாக்ஸ்.

டயானா, ஜூவல் மேரி, மகிமா என படத்தில் மூன்று நாயகிகள். மெனக்கெடாமல் ஆட்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எஸ்தர் கேரக்டரில் கலங்க வைக்கும் பாத்திரம் படத்தில் காட்டப்படவில்லை. அண்ணாதுரையின் நண்பனாக காளி வெங்கட். கனம் மிக்க காட்சிகளில் கண்ணீர் ததும்ப நடித்திருக்கிறார். வில்லன்களாக சேரன் ராஜ், மொட்ட ராஜா குமார் ஆகியோரும் மிரட்டியிருக்கிறார்கள். ராதாரவிக்கு கெஸ்ட் ரோல் போல ஒரு வில்லன் பாத்திரம்.

publish on review section please

கதைக்குத் தேவையான காட்சிகளை பிசிறில்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தில்ராஜ். 'இ.எம்.ஐ யாகிப் போன ஜி.எஸ்.டி' பாடலில் செட் மற்றும் விஷுவல் கிராஃபிக்ஸ் வொர்க் ரசிக்க வைக்கிறது. இந்தப் படத்திற்கு எடிட்டராகவும் செயல்பட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. முதல்முறை எடிட் செய்வதைப் போல எந்த அமெச்சூர் தனத்தையும் குறிப்பிடமுடியவில்லை. அடுத்தடுத்த படங்களுக்கும் அவரே தொடரலாம். எடிட்டிங்கில் ஏமாற்றாதவர் பின்னணி இசையில் பயங்கரமாக மிரட்டவில்லை என்பது பலவீனம்.

publish on review section please

நடிப்பில் விஜய் ஆண்டனியிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. தனக்கு ஏற்ற கதைகளாகப் பிடிப்பதன் மூலம் தப்பித்துக் கொள்கிறார். டபுள் ஆக்‌ஷனில் நடித்தாலும் இரண்டு கேரக்டர்களுக்கும் பேச்சிலும், மேனரிசத்திலும் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்னும் மெருகேற்றிக் கொண்டால் எப்படிப்பட்ட கதையிலும் பட்டையைக் கிளப்பலாம்.

publish on review section please

பிண்ணிப் பிண்ணி திரைக்கதையை ஒழுங்கின்றிக் கொண்டுபோவது எங்கேயோ வைத்த குறி எதிர்ப்பக்கம் நிற்கும் இயக்குனரையே தாக்கியிருக்கிறது. டபுள் ஆக்‌ஷன் கான்செப்ட்டில், நல்ல மெசேஜ் சொல்லும் கதையைப் பிடித்தவர் திரைக்கதையை நன்றாகச் செதுக்கியிருந்தால் அண்ணாதுரைக்கு இரட்டை விரல் காட்டியிருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X