Review :எந்த வயதிலும் காதல் வரும்! அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க விமர்சனம் !
நடிகர்கள்
சந்திரா ஹாசன்,
ஷீலா
டெல்லி கணேஷ்
காத்தாடி ராமமூர்த்தி
இசை: செல்வ குமார்
இயக்கம் : ஸ்டீபன்
சென்னை : இளமையில் மட்டும் தான் காதல் வருமா? முதுமையிலும் காதல் வரும் என்று புரியவைத்த படம் தான் "அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க" திரைபடம் .
குழந்தைகளை கண்ணுக்கு கண்ணாக ,பாசம் காட்டி வளர்க்கும் பெற்றோருக்கு வயசான காலத்தில் அவர்கள் கொடுத்த பாசத்தில் பாதியாவது கிடைக்கிறதா? என்று பார்த்தால் அது சந்தேகம் தான்.
அந்த எதார்த்தத்தை நிதர்சனம் கலந்த அழகான கதையாக காட்டி இருக்கும் படம் தான் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க.
காதல் ஜோடி
சந்திர ஹாசன்,ஷீலா,இளவரசு,டெல்லி கணேஷ்,காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் முக்கியமான தாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்தில் இருக்கும் வசனங்கள் மனதை நெருடவைக்கிறது .ஆனால் படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் ஏதும் நினைத்த அளவுக்கு இல்லாமல் படத்தின் வேகத்தை குறைப்பதாக இருக்கிறது .
பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா
அப்பத்தாவாக வருகிறார் பாண்டியன் ஸ்டோர்சில் நடித்த லட்சுமி அம்மா.அந்த நாடகத்தில் அவர் இறந்த நேரத்தில்,அவர் நடித்த இந்த படம் வெளிவர பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு ஒரே குஷி தான்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுக்கிறார் லட்சுமி அம்மா.சந்திர ஹாசன் ,ஷீலா நடிப்பு அற்புதம் .டி வி புகழ் ஜெயச்சந்திரன் செய்யும் காமெடி நல்ல முயற்சி .சில இடங்களில் சலிப்பு தட்டினாலும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது .
நினைவுக்கு வரும் பவர் பாண்டி
பல கதாபாத்திரங்கள் இருந்தும்,முக்கியமான கதாபாத்திரங்கள் தவிர வேறு யாருக்கும் படத்தில் அதிக வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.படத்தில் சில காட்சிகள் தனுஷ் நடித்து வெளிவந்த பவர்பாண்டி படத்தை நினைவு படுத்துகிறது.சோனி லைவில் வெளிவந்து இருக்கும் இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்
கடுப்பான குடும்பத்தினர்
அப்பத்தாவையும் வயதான தாத்தாவையும் கண்டுபிடிக்காமல் விட மாட்டோம் என்று அவர்களது குடும்பத்தார் நினைத்து கொண்டு இருக்க, அப்பத்தாவையும் காதலரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவர்களது நண்பர்களும் முடிவெடுக்கின்றனர்.
சுவாரஸ்யமான பாசம்
இளமை காதலை ஏற்றுக்கொள்ளும் குடும்பங்கள் பெருகி வரும் நேரத்தில்,முதியவர்களின் காதலை ஏற்றுக்கொள்கிறார்களா என்று பார்த்தால் அது சந்தேகம் தான்,அந்த வயதான காதலை மையப்படுத்தி கதை உள்ளதால்,அவர்கள் நிலமை என்ன? கடைசியில் என்ன நடக்கிறது என்பது தான் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க படத்தின் மீதி கதை.பார்க்க மனதிற்கு படம் இதமாக உள்ளது. குடும்பத்துடன் பாசமிகு இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம் .


Click it and Unblock the Notifications











