Aquaman 2 Review: ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்துறாங்களே.. டிசி கதை ஓவரா.. ஆக்வாமேன் ட்விட்டர் விமர்சனம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் வான் இயக்கத்தில் ஜேசன் மோமோ, ஆம்பர் ஹெர்ட், நிக்கோல் கிட்மேன், மைக்கேல் கீட்டன், பேட்ரிக் வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள ஆக்வாமேன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

தமிழில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் ரிலீஸ் சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த வருஷம் மார்வெல் படங்களை தான் மண்ணைப் போட்டு புதைத்து விட்டார்கள் என்றால் டிசி படங்களையும் ரசிகர்கள் தண்ணீரில் மூழ்கடித்து விட்டனர்.

Aquaman 2 Twitter Review: Fans upset with this new DC show

குறைந்து போனதா சூப்பர் ஹீரோக்களின் மவுசு?: ஓப்பன்ஹெய்மர், பார்பி, மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட சில படங்கள் தான் இந்த ஆண்டு பாலிவுட்டில் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலை கொடுத்துள்ளன. சூப்பர் ஹீரோ படம் வெளியானாலே வசூல் வேட்டை நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு வெளியான பல சூப்பர் ஹீரோக்கள் படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளன. தீபாவளிக்கு வெளியான மார்வெல்ஸ் திரைப்படம் எல்லாம் சிஜிக்கு செலவு பண்ண பணம் தான் வேஸ்ட் என கிண்டலடித்து வருகின்றனர்.

ஹீரோவே சொதப்பல்: ஆக்வாமேன் முதல் பாகத்தில் ஜேசன் மோமோவை பார்த்து பிரம்மித்துப் போன ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகத்தில் அவரது நடிப்பை கொஞ்சமும் ரசிக்கவில்லை என்றே விமர்சனங்கள் குவிகின்றன. ஹீரோவை மாற்றியிருந்தால் ஒருவேளை படம் தப்பித்து இருக்கும் என்றும் அண்ணன் தம்பி கதையை இன்னும் எத்தனை சூப்பர்ஹீரோ படத்துக்கு வச்சு ஓட்டுவீங்க என ஓட்டி வருகின்றனர்.

ஆம்பர் ஹெர்ட்டுக்கு எதிர்ப்பு: ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் குடும்ப வழக்கில் ஆம்பர் ஹெர்ட் தோல்வியடைந்த நிலையில், ஹாலிவுட் ரசிகர்கள் அவரை முற்றிலுமாக ஒதுக்கி வருகின்றனர். இந்த படத்தில் ஹீரோயினாக ஆம்பர் ஹெர்ட் நடித்துள்ள நிலையில், அசிங்க அசிங்கமாக நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஆளே இல்லாத ஆக்வாமேன் 2: உலகளவில் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் புறகணித்து வருகின்றனர் என்றும் விரும்பிப் போய் பார்த்தால் கூட படம் பெரிதாக கவரவில்லை. கரப்பான்பூச்சி தான் வில்லனா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X