Don't Miss!
- News
கொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல்
- Finance
அஜர்பைஜான் நாட்டில் தடம் பதிக்கும் கௌதம் அதானி..!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Oh My Dog Review : ரசிகர்களை கவர்ந்ததா சிம்பா?...ஓ மை டாக் எப்படி இருக்கு? விமர்சனம்
நடிகர்கள் : அர்னவ் விஜய், அருண் விஜய், மஹிமா நம்பியார், விஜயக்குமார், வினய் ராய், மனோபாலா
இயக்கம் : சரோவ் ஷண்முகம்
ரேட்டிங் : 4/5
சென்னை : விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் லேட்டஸ்ட் வரவாக இணைந்துள்ளது ஓ மை டாக். குழந்தைகளை கவருவதற்காக, அவர்களின் உலகத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுத்துள்ளார்கள்.
விஜயக்குமார், அவரது மகன் அருண் விஜய், பேரன் அர்னவ் விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றாக நடிக்க வைத்துள்ளனர். டைரக்டர் சரோவ் ஷண்முகம் எழுதி, இயக்கிய படம் ஓ மை டாக். சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ நேரடியாக ஏப்ரல் 20ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பு விவரிக்க முடியாத உணர்வு… காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு !

சிம்பிளான வில்லன் இன்ட்ரோ
நாயையும், அதன் திறமைகளையும் சுற்றி தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை படத்தின் துவக்கத்திலேயே காட்டி விடுகிறார்கள். டாக் ஷோவுடன் ஆரம்பமாகிறது படம். டாக் ஷோவில் தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் வெல்வதாகவும், அடுத்து 6 வது முறையாக வென்றால் அது உலக சாதனையாக இருக்கும், அதை நிச்சயம் செய்ய உள்ளதாக சபதத்துடன் ஆரம்பமே வில்லன் இன்ட்ரோ கொடுக்கிறார் வினய். நாய்களை பராமரிப்பவராக இருந்தாலும் அதிலும் வில்லத்தனத்தை காட்டுகிறார்.

பழைய சினிமா ஸ்டைல்
பிறவியிலேயே கண் பார்வை இல்லாததால் பிறந்து ஒரு மாதமே ஆன நாய்க்குட்டியை கொன்று விடும் படி தனது கோமாளி அல்லக்கைகளிடம் கொடுக்கிறார். வழக்கமான பழைய தமிழ் சினிமாக்களில் வரும் அதே இரட்டையர் கோமாளி அடியாட்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஓடும் அந்த நாய்க்குட்டி சேற்றில் மாட்டிக் கொள்ள, அதற்கு உதவி செய்கிறான் சிறுவன் அர்ஜுனாக வரும் அர்னவ்.

அர்னவின் அசத்தல்
புதுமுகமான அர்னவிற்கும் ஒரு இன்ட்ரோ கொடுக்கிறார்கள். பயங்கர குறும்புதனம், மற்றவர்களுக்கு உதவும் குணம். வீட்டு கடனை அடைக்க முடியாமல் போராடும் மிடில் கிளாஸ் குடும்ப தலைவனாக அருண் விஜய். அவரின் அப்பாவாக விஜயக்குமார், மனைவியாக மகிமா நம்பியார். மோப்ப சக்தியால் அர்னவை தேடி வருகிறது. அதை வீட்டிற்கு தெரியாமல் வளர்க்கிறான். பள்ளிக்கு எடுத்து வந்து நண்பர்களிடம் அறிமுகம் செய்கிறான் அர்ஜுன். அங்கு தனது ஃபிண்ட் சொல்லி தான் அந்த நாய்க்கு கண் தெரியாது என்பதை தெரிந்து கொள்கிறான்.

இது தான் படத்தின் கதை
நாய்க்குட்டியின் கண்ணை சரி செய்ய தனது நண்பர்களுடன் சேர்ந்து போராடுகிறான் அர்ஜுன். அதே சமயம், அர்ஜுனிடம் இருக்கும் நாய்க்குட்டியை கொலை செய்ய துரத்துகிறார்கள் வில்லனின் அல்லக்கைகள். நாய்க்குட்டி சிம்பாவிற்கும், அர்ஜுனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. சிம்பாவிற்கு கண் ஆப்பரேஷன் நடக்கிறதா, அது டாக் ஷோவில் வெற்றி பெறுகிறதா, வில்லன் வினய்யை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை. இதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.

குழந்தைகளை கவர்ந்த படம்
பள்ளி சிறுவர்களின் உலகம் எப்படி உள்ளது, அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்டி உள்ளார்கள். சில இடங்களில் பழைய தமிழ் சினிமாவில் வருவதை போல் சின்ன குழந்தைகள் பெரிய சூப்பர் ஹீரோ ரேஞ்சில் ஜேம்ஸ் பாண்ட் வேலை செய்து பல உண்மைகளை கண்டுபிடிப்பது, வயதிற்கு மீறிய செய்கைகளை செய்வது போன்ற விஷயங்களை பாலிஷ் போட்டு கொடுத்ததை போல் தோன்றினாலும் குழந்தைகள் ரசிக்கும் படி படத்தை எடுத்துள்ளார். விடுமுறை சமயத்தில் குழந்தைகளை மகிழ்விக்கவும், குடும்ப ஆடியன்சையும் கவரும் நோக்கத்துடன் படத்தை எடுத்து, ரிலீஸ் செய்துள்ளார்கள்.

ரசிகர்களின் ரேட்டிங் என்ன
முதல் படத்திலேயே தனது இயல்பான, துறுதுறுப்பான நடிப்பில் அனைவரின் பாராட்டையும் பெற்று விட்டார் அர்னவ். நிஜமான மிடில் கிளாஸ் தந்தையாக அருண் விஜய்யும், மனைவியாக மஹிமாவும் , அப்பாவாக விஜயக்குமாரும் வாழ்ந்துள்ளார்கள் என்றே சொல்லலாம். வினய், இதில் வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி உள்ளார். ரசிகர்கள் இந்த படத்திற்கு 5 க்கு 4 ரேட்டிங் கொடுத்துள்ளார்கள்.