Label Review: ஜெய் நடித்த லேபில் விமர்சனம்.. 4வது எபிசோடு எப்படி இருக்கு?.. பார்க்கலாமா? வேண்டாமா?
நடிகர்கள்: ஜெய், மாஸ்டர் மகேந்திரன், தன்யா ஹோப்
இசை: சாம் சி.எஸ்
இயக்கம்: அருண்ராஜா காமராஜ்
ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
சென்னை: கனா, நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லேபில் படம் கடந்த வாரம் முதல் 3 எபிசோடுகளை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை அடுத்த எபிசோடை வெளியிட்டுள்ளனர்.
முதல் 3 எபிசோடுகளும் தீயாக இருந்த நிலையில், 4வது எபிசோடு எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

முதல் மூன்று எபிசோடுகளின் கதை: வடசென்னை பகுதியில் தப்பு செய்றது ஒரு கும்பல் என்றால் தப்பு செய்யாதவர்களுக்கும் அதே லேபில் குத்தப்பட்டு அவர்களையும் தவறான மனநிலையில் பார்க்கும் அவலம் இருப்பதாகவும் அந்த நிலையை மாற்ற வேண்டும் என நினைத்து போராடி வருகிறார். நன்றாக படித்து வழக்கறிஞராக மாறும் நாயகன் அந்த ஏரியாவில் பாதிக்கப்படும் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் வாதாடி வருகிறார்.
இன்னொரு பக்கம் பெரிய சம்பவத்தை செய்து விட்டு லேபிலாக வேண்டும் என நினைத்து பாதாளத்தையே மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவனது கூட்டாளி போட்டுத் தள்ளிவிட 3 எபிசோடுகளும் பரபரப்பாக நிறைவடைந்தது.
4வது எபிசோடு கதை: இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான 4வது எபிசோடில் பாதாளத்தை போட சொன்ன ஸ்கெட்ச் மிஸ் ஆகி அவனை வேற இடத்தில் போட்டதால் அருண்குமார் போலீஸ் இருக்கும் பகுதி அது என்றும் அவன் ரொம்பவே மோசமானவன். அவனிடம் சிக்கினால் கண்டம் தான் என மூத்த வழக்கறிஞர் சுரேஷ் சக்கரவர்த்தி அந்த இருவரையும் கை கழுவுகிறார். வேறு யாராவது ஒரு வழக்கறிஞரை வைத்து சரண் அடைந்து விடுங்கள் எனக் கூற இந்த இருவரும் தங்களை சரண்டர் செய்வதற்கு பல வக்கீல்களிடம் பேசுகின்றனர்.
ஆனால், பாதாளத்தை போட்ட இவர்களுக்காக வாதாட எந்தவொரு வழக்கறிஞரும் முன் வரவில்லை. கடைசியில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது யாரு? இனிமேல் அவருக்கு என்ன ஆகப் போகிறது என்பதுடன் 4வது எபிசோடை முடித்துள்ளனர்.
பார்க்கலாமா? வேண்டாமா?: 4வது எபிசோடை பொறுத்தவரையில் பெரியளவில் கதை நகரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு சின்ன விஷயத்தை வைத்துக் கொண்டு ஒரு எபிசோடை ஓட்டியுள்ளனர். எபிசோடின் கிளைமேக்ஸ் செம மாஸாக இருந்த நிலையில், அதனை கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால், ஆரம்பத்தில் ஹீரோ, ஹீரோயினுக்கு வரும் காதல் மற்றும் பாடல் காட்சி எல்லாம் பொறுமையை சோதிக்கின்றன. அடுத்த வாரம் எபிசோடு இந்த எபிசோடைவிட நல்லா இருந்தால் தான் இந்த வெப்சீரிஸ் வெற்றி பெறும்.


Click it and Unblock the Notifications











