சிவகார்த்திகேயனின் டாக்டரை மிஞ்சியதா ஆர்யாவின் அரண்மனை 3? ஆயுத பூஜை ரிலீஸ் படம் எப்படி இருக்கு?

சென்னை: இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை 3 திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அரண்மனை 3ம் பாகம் எப்படி இருக்கிறது என படத்தை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டாக்டர் திரைப்படத்தை இந்த படம் பீட் பண்ணியதா? அல்லது பின் வாங்கியதா? என்பதை இங்கே பார்ப்போம்.

ஆயுத பூஜை ரிலீஸ்

ஆயுத பூஜை ரிலீஸ்

சுந்தர். சி இயக்கி நடித்திருக்கும் அரண்மனை 3 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகி உள்ளது. ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளனர். ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ள பேய் படம் பேய் ஹிட் கொடுக்குமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சார்பட்டாவில் இருந்து ஸ்ட்ரெய்ட்டா

சார்பட்டாவில் இருந்து ஸ்ட்ரெய்ட்டா

அரண்மனை படத்தின் கடந்த இரு பாகங்களை விட இந்த முறை பிரம்மாண்ட செட்கள் போடப்பட்டு நடிகர்களை மாற்றி காட்சியளவில் அட்டகாசம் செய்துள்ளனர். சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்து அப்படியே ஸ்ட்ரெய்ட்டா ஆர்யா இந்த படத்தில் நடிக்க வந்ததால் நடமாடும் ஜிம்மாக இருக்காரு என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

Recommended Video

Aranmanai 3 Audience Opinion | Sundar C | Arya | Raashi Khanna | Andrea
மூன்றாம் பாகம் செம

மூன்றாம் பாகம் செம

அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை விட மூன்றாம் பாகம் சிறப்பாகவே உள்ளது. சிஜி, விஷுவல் எஃபெக்ட்ஸ் எல்லாம் தரமாக உள்ளது. ஆர்யாவின் உழைப்பு இந்த படத்திற்கு பெருமளவில் உதவியாக உள்ளது. ஃபிளாஷ்பேக் கதைகள் மற்ற இரு பாகங்களையும் விட இதில் செம என்றும் விவேக் மற்றும் யோகி பாபு காமெடி நல்ல வொர்க்கவுட் ஆகி உள்ளதாகவும் இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

டாக்டருக்கு நல்ல நேரம்

டாக்டருக்கு நல்ல நேரம்

எதிர்பார்த்த அளவுக்கு அரண்மனை 3 படம் இல்லை என்றும் காமெடி சுத்தமாக எடுபடவில்லை என்றும் நெகட்டிவ் விமர்சனங்களும் இந்த படத்திற்கு எழுந்துள்ளன. இந்நிலையில், அரண்மனை 3 படத்தின் சோலியும் முடிஞ்சிடுச்சு போல எனக்கூறிவிட்டு டாக்டருக்கு நல்ல நேரம் தான் என கமெண்ட் செய்துள்ளார்.

டாக்டர் தான் மாஸ்

டாக்டர் தான் மாஸ்

ஆர்யாவின் அரண்மனை 3 படத்தை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல சுந்தர். சி இந்த படத்தையும் மொக்கையா எடுத்து வச்சிருக்காரு.. கடந்த வாரம் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் தீபாவளி வரை எந்தவொரு தடையுமின்றி தியேட்டர்களில் கலெக்‌ஷனை அள்ளும் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் அரண்மனை 3ஐ கழுவி ஊற்றி டாக்டரை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X