Ananthan Kaadu Review: ஜெய்சங்கர் படம் போல இருக்கு.. ’அனந்தன் காடு’ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்திரன்ஸ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 25ம் தேதி வெளியான படம் தான் அனந்தன் காடு. ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான மிஸ்டர் எக்ஸ் படமும் அவருக்கு வெற்றியைக் கொடுக்காமல் தொடர் தோல்வி பட்டியலில் அமர வைத்தது. இந்நிலையில், இந்த அனந்தன் காடு படமாவது ஆர்யாவுக்கு கம்பேக் படமாக அமையுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாய்ப்பில்லை ராஜா என ப்ளூ சட்டை மாறன் ரோஸ்ட் செய்துள்ளார்.

இந்த வாரமும் கடந்த வாரத்தை போல 6 முதல் 8 புதிய படங்கள் வெளியாகி உள்ளன. அதில், ஒரு சில படங்களை தவிர பல படங்களின் பெயர்கள் கூட மக்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் தெரியாத அளவுக்குத்தான் படங்கள் வெளியாகும் சூழல் நிலவி வருகிறது.

Arya s Ananthan Kaadu Movie Roasted in Blue Sattai Maran Review

கடந்த வாரம் வெளியான நூறு சாமி படமே பெரியளவில் கல்லா கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படத்துக்கு இப்படியொரு நெகட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: நூறு சாமி படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தாலும், ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தையும் கழுவி ஊற்றியிருந்தார். சசி ஒரு நல்ல கதையை எடுத்துக் கொண்டு அதை சொதப்பலான திரைக்கதை போல உருவாக்கி கெடுத்து விட்டார் என்று போட்டு உடைத்தார்.

இந்நிலையில், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அனந்தன் காடு திரைப்படத்தில் இலங்கை போராளிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் சண்டையை மையப்படுத்திய போராட்ட படமாக உருவாகியுள்ளது. ஆனால், அதற்கு ஒரு நியாயமும் செய்யாமல் ஜெய் சங்கர் படங்கள் போல ஜிகினா வேலை பார்த்து ஏமாற்றியுள்ளனர் என வறுத்தெடுத்துள்ளார்.

ஆர்யாவுக்கு அடுத்த ஃப்ளாப்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவான இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். காலேஜ் டேஸ், காஞ்சி, தியான் உள்ளிட்ட மலையாள படங்களை இயக்கிய இவர் கடைசியாக ஆர்ஜே பாலாஜியை வைத்து ரன் பேபி ரன் என தமிழில் ஒரு படத்தை இயக்கினார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதனை தொடர்ந்து ஆர்யாவை வைத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக்கியுள்ள அனந்தன் காடு படமும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் ஆர்யாவுக்கு அடுத்த ஃப்ளாப் என்றும் கூறுகின்றனர்.

கம்மாட்டிப்பாடம் உள்ளிட்ட மலையாளப் படங்களின் வாடையே அதிகம் வீசுகிறது என்றும் இது ஒரு படமாகவே இல்லை என்றும் ப்ளூ சட்டை மாறன் டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X