Mr X Bayilwan Review : ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படம் எப்படி இருக்கு? பயில்வான் விமர்சனம்!

சென்னை: இயக்குனர் மது ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஒரு ஸ்பை திரில்லர் படம் தான் Mr X. படம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஸ்பை-ஆக்ஷன் வகை படங்கள் அரிதாக வந்தாலும், அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் படம் தான் மிஸ்டர் எக்ஸ். Mr. X. இந்த படம் மகாபலிபுரத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டை மையமாக வைத்து நகர்கிறது. 20 நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ளும் இந்த முக்கியமான மாநாட்டை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிடுகின்றனர். இந்த குழுவின் தலைவராக கௌதம் கார்த்திக் மிரட்டலான வில்லன் வேடத்தில் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து, ஆர்யா தலைமையிலான உளவுத்துறை குழு இந்த அச்சுறுத்தலை தடுக்க போராடுகிறது.

Mr X Review  Arya  Mr X
Photo Credit:

பயில்வான் ரங்கநாதன்: ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதைப்போல ஆர்யாவுக்கு ரஷ்யாவுக்கு செல்லும் அவசர உத்தரவு வருகிறது. அங்கு சிக்கி இருக்கும் சரத்குமார் மற்றும் இந்தியாவின் அணு ஆயுத பொருட்களை மீட்டு வர வேண்டும் என்பது தான் அவரது மிஷன். இதன் மூலம் படம் சர்வதேச ஸ்பை த்ரில்லர் திசையில் செல்கிறது. ஆர்யா இந்த படத்தில் சிக்ஸ்-பேக் உடலுடன் காட்சியளித்து கவனம் ஈர்த்தாலும், உளவுத்துறை அதிகாரிக்கு தேவையான body language சற்றே குறைவாகவே தெரிகிறது. ஆனால் காதல் காட்சிகளில் அவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் கதை: இதே நேரத்தில், இதுவரை ஹீரோவாக மட்டுமே பார்த்த கௌதம் கார்த்திக் இந்த படத்தில் வில்லனாக புதிய பரிமாணத்தில் கவர்ந்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கு இனி அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். மற்றொரு முக்கியமான நடிகையான மஞ்சுவாரியர் ஒரு அட்டகாசமான நடிகை அவர்களுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அவரை படத்தில் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். இயக்குனர் ஆக்ஷன் மற்றும் ஸ்பை எலெமெண்ட்ஸ்களை கொண்டு வந்திருந்தாலும், பல காட்சிகள் ஏற்கனவே பல படத்தில் பார்த்த உணர்வை தருகின்றன. திரைக்கதையில் புதுமை குறைவாக இருந்தது படத்தின் படத்திற்கு சற்று பலவீனத்தை தருகிறது. ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு "மிஸ்டர் எக்ஸ்" ஒரு முறை பார்க்கக்கூடிய படம் என பயில்வான் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

Read more about: arya ஆர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X