Mathagam review: அதர்வா,மணிகண்டன் நடித்த மத்தகம் வெப் தொடர் எப்படி இருக்கு? முதல் எபிசோடு விமர்சனம்!
மத்தகம் வெப் தொடர்
இயக்குனர் :பிரசாத் முருகேசன்
நடிகர்கள் : அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல்,
ஓடிடி:டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்
அதர்வாவின் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப்தொடர் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
ஐந்து எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் 40நிமிஷத்திற்கு மேல் உள்ளது.

மத்தகம்: இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த தொடரில் அதர்வா உயர் போலீஸ் அதிகாரியாக அஷ்வாத் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஜெய்பீம் புகழ் மணிகண்டன் நிழல் உலக தாதா படாளம் சேகர் என்கிற கதாபாத்திரத்தில் முதல் முதலாக வில்லனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல்,கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் என ஏராளமானோர் இத் தொடரில் நடித்துள்ளனர்.
முதல் எபிசோடு: நீண்ட நாட்களுக்குப்பிறகு அதர்வாவை மிடுக்கான போலீஸ் உடையில் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியாக அதர்வா தலைமையில் சென்னையில் அங்காங்கே இரவு நேர வாகன சோதனை நடக்கிறது. அப்போது, காட்டுப்பாட்டை இழந்த வாகனம் அங்கிருந்த தடுப்புவேலியில் மோதி நிற்கிறது.

சங்கு கணேஷ்:அந்த வாகனத்தில் இருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அந்த வாகனத்தில் இருந்த நபர், போலீசாரால் பல நாட்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளி சங்கு கணேஷ் என்பதும், நாளை இரவு நடக்கும் படாளம் சேகரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு மொத்த ரௌடிகளும் கலந்து கொள்ள இருப்பது தெரியவருகிறது.
படாளம் சேகர்: தமிழ்நாட்டில் பல கொடூர குற்றங்களை செய்து மும்பைக்கு தப்பிச்சென்று நிழல் உலக தாதாவாக மாறி, பல கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த படாளம் சேகர் இரண்டு வருடத்திற்கு முன்பே கார் விபத்தில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், படாளம் சேகர் திரைமறைவில் இருந்துகொண்டு பிறந்தநாள் விழாவிற்கு, ஒட்டுமொத்த ரௌடிகளையும் திரட்டி மிகப்பெரிய நாசவேலை செய்ய திட்டமிடுகிறான்.

கிரைம் திரில்லர்: வர மறுக்கும் ரௌடிகளுக்கு சாவு பயத்தை காட்டி பார்ட்டிக்கு வரவைக்கிறான் படாளம் சேகர். பிறந்த நாளுக்கு கேக் சாப்பிடக் கூப்டேனு நினைச்சியா.... இந்த நாட்டையே கேக்கா வெட்டப்போறேன் என்று மணிகண்டன் பேசியதோடு முதல் எபிசோடு முடிவடைகிறது. இறந்துவிட்டதாக கருதப்பட்ட படாளம் சேகர் உயிரோடு இருப்பது எப்படி? பிறந்த நாள் விழாவில் எப்படி என்ன நடக்கப்போகிறது என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.
வில்லன்: ஜெய்பீம் படத்தில் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் வாழ்ந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த மணிகண்டன், மத்தகம் வெப் தொடரில் படாளம் சேகர் என்கிற தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிரட்டிவிடும் மணிகண்டன் இதில் வில்லனாக நடித்து ஸ்கோரை பெற்றுவிட்டார். அதே போல அதரவா, நேர்மையான காவல் அதிகாரியாகயும், ஒரு சரராசரி குடும்ப தலைவனாகவும் சிறந்த நடிப்பை தந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











