Just In
- 10 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 10 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 10 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 10 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அவனே ஸ்ரீமன் நாராயணா பக்தர்களுக்கு அருள் வழங்கிவிட்டார்
புதையலை தேடி ஒரு பயணம், அப்பாவின் ஆசையை நிறைவேற்ற போராடும் இரண்டு மகன்கள். அதில் எல்லா படங்களை போல வில்லன்கள், புதையலை எடுத்தார்களா ? அப்பாவின் ஆசையை நிறைவேற்றினார்களா ? என்பதை பல டிவிஸ்ட் உடன் சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் அவனே ஸ்ரீமன் நாராயணா.
அமராவதி என்னும் ஒரு கற்பனை ஊரில் இக்கதை நடக்கிறது.அங்கு பல ஆண்டுகளாக உள்ள புதையல் காணாமல் போகிறது. அதனை தன் இரு மகன்களை வைத்து கண்டுபிடித்து தனது அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் இரு மகன்கள்.
இதனை தெரிந்து கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு படும்பாடு தான் இக்கதையை காமெடிகள் மற்றும் பல ஆக்ஷன் உடன் நமக்கு விருந்தாக அமைந்துள்ளது.
படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த மூன்று வருடமாக படத்தை எடுத்ததற்கு காரணம் படம் பார்க்கும் பொழுதே தெரிகிறது. ரக்ஷித் செட்டியின் நடிப்பு அவரின் முந்தைய படங்களை போல இதிலும் அபூர்வம். சான்வி ஸ்ரீவத்சவா
திரைபடங்களில் வரும் ரெகுலர் ஹீரோயின்கள் என்ன செய்வார்களோ அதனை சிறப்பாகச் செய்துள்ளார்.
படத்திற்கு மிக பெரிய பலம் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தான். இது ஒரு கவ்பாய் திரைப்படம் என்பதால் பைரேட்ஸ் ஆப் கரேபியன் படத்தை போல தோற்றம் உள்ளது. அந்த சாயல் படங்களை போல படத்தில் வரும் தீம் மியூசிக் அனைவரையும் கவர்ந்தது.
மற்றும் பாடல்கள் சற்று இறுக்கமான சூழல் ஏற்படுத்துகிறது.
ரக்ஷித் செட்டி நடிப்பு மட்டும் இல்லாமல் படத்தில் திரைக்கதை மற்றும் பல துறைகளை கவனித்துக் கொண்டார், இதற்கு இவருக்கு மிக பெரிய பாராட்டுக்கள். தமிழில் லாரன்ஸ் நடித்த இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் சாயலில் உள்ளது அவனே ஸ்ரீமன் நாராயணா. படத்தில் மிகவும் சொதப்புவது படத்தின் நீளம் தான் , மிகவும் அதிகம் மூன்று மணி நேரம்.
கன்னட திரையுலகில் இருந்து வந்த பேன் இந்தியா படமான கே.ஜி.எப்
பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த திரையுலகில் இருந்து அது போன்ற பல படங்கள் வருவதற்கு ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது.
இது போன்ற கதையை தேர்ந்தேடுத்து அதில் திரைக்கதைக்கு உதவி நடித்த ரக்ஷித் செட்டியின் செயல் பாராட்ட பட வேண்டியது. கன்னட ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது அங்கு பெரும் வெற்றியும் பெற்றுள்ளது. தமிழில் இங்கு உள்ள ரசிகர்கள் இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் என்று எடுத்த படம் நீளம் தான் பிரச்சினை .
இந்த படத்தில் இப்படி சில பிரச்சனைகள் இருந்தாலும் படத்துடைய கலர் டோன் மற்றும் சீ ஜீ வேலைப்பாடுகள் அற்புதமாக செய்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் என்னதான்டா அந்த புதையலில் இருக்கு என்ற சுவாரஸ்யத்தை குறை இல்லாமல் செய்துள்ளார்கள் .
ஒட்டு மொத்தத்தில் அவனே ஸ்ரீமன் நாராயணா பக்தர்களுக்கு அருள் வழங்கிவிட்டார்.