twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமர்சனம்: வயதான தாய் தந்தைக்கு இதுதான் கதியா? தாங்க முடியாத வலி சொல்லும் 'பாரம்'

    By
    |

    Rating:
    3.5/5

    நடிகர்கள்: கே.ராஜூ, சுகுமார் சண்முகம், சுபா.முத்துக்குமார்

    இயக்குனர்: பிரியா கிருஷ்ணசாமி

    சென்னை: உடல் நிலை முடியாமல் ஓய்ந்துபோன தந்தையை, ஓரமாக வைக்கும் மகன், ஊர் வழக்கப்படி எடுக்கும் அந்த அபாய, அதிர்ச்சி முடிவுதான், பாரம்!

    Recommended Video

    SWITZERLANDக்கு போய் ஒப்பாரி சொல்லி கொடுத்தேன் | BAARAM TEAM INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

    வாட்ச்மேன் வேலைப் பார்த்துக்கொண்டு தனது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார் வயதான கருப்பசாமி.

    நாட்டு வைத்தியம்

    நாட்டு வைத்தியம்

    நேரம் கிடைக்கும்போது அவர் செல்வது, தங்கை வீட்டுக்கு. மருமகன்கள் அவரை தாங்கிப் பிடிக்கிறார்கள். ஒருநாள் வேலைக்குப் போன இடத்தில் விபத்தில் சிக்குகிறார். இடுப்பு உடைந்துவிடுகிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள். ரெடியாகிறார்கள் மருமகன்கள்.

    கருப்பசாமி இறக்கிறார்

    கருப்பசாமி இறக்கிறார்

    ஊருக்கு அழைத்துச் சென்று நாட்டு வைத்தியம் பார்க்கிறேன் என்கிறார், கருப்பசாமியின் மகன் செந்தில். அதன்படியே செய்கிறார். ஒரு நாள் திடீரென மருமகனுக்குத் தகவல் வருகிறது, கருப்பசாமி இறந்துவிட்டார் என்று. வேகமாக வருகிறார்கள். வந்தபின் தான் தெரிகிறது, அவர் கொல்லப் பட்டிருக்கிறார் என்பது. எப்படி ஏன் என்பதுதான் இந்த 90 நிமிடப் படத்தின் கதை.

    கருணை கொலை

    கருணை கொலை

    முதியோர்களைத் தலைக்கூத்தல் முறையை பயன்படுத்தி கருணை கொலை செய்யும் வழக்கம் சில கிராமங்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வயதானவர்களின் தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, இளநீர் கொடுத்துகொண்டே இருந்தால் அதிகபட்சமாக இரண்டு, மூன்று நாட்களில் அந்த முதியவர் இறந்துவிடுவாராம். இந்தக் கருணை கொலை முறையை அதிர்ச்சியோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி.

    அத்தனை யதார்த்தம்

    அத்தனை யதார்த்தம்

    கருப்பசாமியாக வரும் கே.ராஜு, (பேராசிரியராம்), பக்கத்துத் தெருவில், ஏதோ அபார்ட்மென்ட் வாசலில் இருக்கும் வாட்ச்மேனை அப்படியே ஞாகப்படுத்துகிறார். இடுப்பை பிடித்தபடி, வார்த்தை வராமல் மெதுவாக முனங்கும்போது, அந்த வலியை நமக்கும் கடத்தி விடுகிறார் எளிதாக. கருப்பசாமியின் சகோதரியாக வரும், ஜெயலட்சுமியின் நடிப்பில் அத்தனை யதார்த்தம்.

    சமூக செயற்பாட்டாளர்

    சமூக செயற்பாட்டாளர்

    ஒரே பார்வையில் வெறுப்பை கக்கும் கருப்பசாமியின் மகன் சு.பா.முத்துக்குமார், சமூக செயற்பாட்டாளராக வரும் சுகுமார் சண்முகம், மருமகன்கள் சமராஜா, பிரேம்நாத் என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே ஆச்சரியம். புதுமுகங்கள் என்றால் நம்பவே முடியாத அளவுக்கு நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். வேத் நாயரின் பின்னணி இசையும் ஜெயந்தின் ஒளிப்பதிவும் கதைக்குப் பலமாக இருக்கின்றன. பட்ஜெட்டுக்கு ஏற்ற சின்ன சின்ன குறைகளும் இல்லாமலும் இல்லை.

    தலைக்கூத்தல்

    தலைக்கூத்தல்

    இதே கதையை மையமாக வைத்து கே.டி.என்கிற கருப்புத்துரை என்றொரு படம் வந்திருந்தாலும் அதில் இருந்த அழகும் கதைச் சொல்லும் முறையும் இதில் மிஸ்சிங். முதல் பாதிவரை கதையாகச் செல்லும் படம், பின் பாதியில் கலைக்கூத்தல், அப்படின்னா என்று விளக்கும்போது டாக்கு டிராமாவாக மாறிவிடுகிறது. தலைக்கூத்தல் முறையின் அடுத்தக் கட்டமாக விஷ ஊசி போட்டுக்கொல்கிறார்கள் என்பதில் நம்பகத்தன்மை குறைந்து விடுகிறது.

    இருந்தாலும் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கதையை எடுத்திருக்கும் இயக்குனரை தாராளமாகப் பாராட்டலாம்.

    English summary
    An old security met with an accident, his unloving son chooses mercy killing over medical treatment. What happens when the murder gets exposed?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X