Baby John Review: தேறியதா தெறி இந்தி ரீமேக்.. அட்லீ போட்ட காசு லாபத்தை தருமா?.. பேபி ஜான் விமர்சனம்!

ரேட்டிங்:

Rating:
2.5/5

நடிகர்கள்: வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி
இசை: தமன்
இயக்கம்: காலீஸ்

மும்பை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான தெறி படம் வெளியாகும் போதே இது விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் ரீமேக் என்றும் பாட்ஷா படத்தின் சீனெல்லாம் இருக்கே என ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல்களை குவித்தனர். தெறி வெளியாகி பல வருடங்கள் தேய்ந்த நிலையில், அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதை தயாரித்திருக்கிறார் அட்லீ.

இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் சல்மான் கான் கேமியோவாக நட்சத்திர பட்டாளமே அணிவகுத்துள்ள பேபி ஜான் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

baby john  atlee

பாலிவுட்டில் அட்லீக்கு எதிராக சதி நடப்பதாகவும் அதிக திரையரங்குகள் இந்த படத்துக்கு ஒதுக்கப்படவில்லை என்றெல்லாம் சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில், அதிக திரையரங்குகள் ஒதுக்கும் அளவுக்கு பேபி ஜான் படம் வொர்த்தாக உள்ளதா? என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

பேபி ஜான் கதை: அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் நடித்த தெறி படத்தை பார்த்த அனைவருக்குமே பேபி ஜான் படத்தின் கதை என்ன என்று தெரிந்திருக்கும். இருந்தாலும், இந்தி ரீமேக்கில் இயக்குநர் காலீஸ் என்ன பண்ணி வைத்திருக்கிறார் என்பது குறித்து இங்கே பார்ப்போம். தனது மகள் குஷி (ஸாரா ஸியானா) உடன் தனியாக வசித்து வரும் ஜான் (வருண் தவான்) பள்ளியில் மகளை விட்டு வரும் போது டீச்சர் (வாமிகா கபி) உடன் நட்பு ஏற்படுகிறது. டீச்சர் ஒருதலையாக ஜானை ரொமான்ஸ் செய்கிறார். அப்பாவியாக எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கும் ஜான் ஒரு கட்டத்தில் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு எதிரிகளை பந்தாடும் காட்சியில் அவர் யார் என்கிற ஃபிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது.

baby john  atlee

சத்யா வர்மா எனும் அதிரடி போலீஸ்காரராக ஃபிளாஷ்பேக்கில் காட்டப்படும் வருண் தவானை மீரா (கீர்த்தி சுரேஷ்) காதலிக்கிறார். மோதலில் ஆரம்பித்து காதல் தொடங்க திருமணம் ஆகிறது. ஒரு பக்கம் குடும்ப வாழ்க்கையில் ஜாலியாக இருக்கும் வருண் தவான் அமைச்சர் ஜாக்கி ஷெராஃபின் மகனை கொன்று விட அதன் காரணமாக தனது அம்மா மற்றும் மனைவி மீராவை இழக்கிறார். மனைவிக்கு செய்துக் கொடுத்த சத்தியம் காரணமாக வேறு ஒரு ஊரில் அமைதியான ஜானாக வாழ்ந்து வரும் அவர் மீண்டும் எப்படி அமைச்சரை பழிவாங்குகிறார் என்பது தான் பேபி ஜான் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: விஜய்யின் தெறி படம் அளவுக்கு இந்த படம் பாலிவுட் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான். தெறி படத்தின் இந்தி டப்பிங்கையே பல பாலிவுட் ரசிகர்கள் பார்த்துள்ள நிலையில், அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் அடுத்த வெர்ஷனாகவே ரசிகர்களுக்கு இந்த பேபி ஜான் கனெக்ட் ஆகும் எனத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை மசாலா நெடியை அதிகம் தூவி இருக்கிறார் காலீஸ். புஷ்பா 2 படத்தை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மாஸ் மசாலா படம் வொர்க்கவுட் ஆகும் நினைத்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை. சல்மான் கான் வரும் கேமியோ காட்சி ரசிகர்களின் டிக்கெட் காசுக்கு ஆறுதல் கொடுக்கிறது.

baby john  atlee

பிளஸ்: கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ள நிலையில், அவர் கொஞ்ச நேரம் ஃபிளாஷ்பேக்கில் வந்தாலும் அவரது அழகான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார். தமன் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் தூள் கிளப்பி வரும் நிலையில், படத்தில் பின்னணி இசையும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் ரசிகர்களுக்கு விருந்துதான். ஜாக்கி ஷெராஃப் தமிழில் மகேந்திரன் அண்டர்பிளே செய்து பண்ண வில்லத்தனத்தை அவரது ஸ்டைலில் ஆக்ரோஷமாகவே செய்திருக்கிறார்.

மைனஸ்: வருண் தவான் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில், பல இடங்களில் அவரால் ஃபோக்கஸ் செய்ய முடியவில்லை என்றும் விஜய்யின் ஸ்டார்டம் அளவுக்கு அவரது கேரக்டர் ஸ்ட்ராங்காக திரையாக்கம் செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. வாமிகா கபியின் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஒட்டவில்லை. அவர் வீணடிக்கப்பட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் மசாலா என்டர்டெயினர் விரும்பிகளுக்கு ஒரு கமர்ஷியல் ட்ரீட்டாக இந்த படம் இருக்கும். ஆனால், தெறி படத்தை பார்த்தவர்கள் தம்பி அந்தப் பக்கம் போக வேண்டாம் என்கிற அலர்ட் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X