Bade Miyaan Chote Miyan Review: அக்ஷய் குமாருக்கு ’படே மியான் சோட்டே மியான்’ கை கொடுத்ததா?
மும்பை: அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மானுஷி சில்லர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஈகைத் திருநாளை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கும் படே மியான் சோட்டே மியான் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.
பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து நானும் கான் நடிகர்களுக்கு டஃப் கொடுப்பேன் என அடம்பிடித்து வரும் அக்ஷய் குமார் கடந்த சில ஆண்டுகளாக நடித்த அரை டஜன் படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

அஜய் தேவ்கன் எல்லாம் மாஸ் காட்டி வரும் நிலையில், அஜய் தேவ்கன் நடித்துள்ள மைதான் படத்துக்கு போட்டியாக வெளியாகியிருக்கும் அக்ஷய் குமாரின் படே மியான் சோட்டே மியான் படத்தின் ரிசல்ட் குறித்து ரசிகர்கள் என்ன சொல்றாங்க என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..
கார்ப்பரேட் புக்கிங் மோசடி: அக்ஷய் குமார் நடித்துள்ள படே மியான் சோட்டே மியான் படம் புக் மை ஷோவில் ஹவுஸ்ஃபுல் என காட்டுகிறது. ஆனால், தியேட்டருக்கு வந்தால் ஒரு சிலரை தவிர யாருமே இல்லை என நெட்டிசன்கள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு அக்ஷய் குமாரும் கார்ப்பரேட் புக்கிங்கில் இறங்கி விட்டாரா? என கலாய்த்து வருகின்றனர்.

ஆக்ஷன் கிங் அக்ஷய் குமார்: படே மியான் சோட்டே மியான் படத்தை இப்போதுதான் பார்த்து விட்டு வந்தேன். அக்ஷய் குமார் ஒரு 5,6 ஆக்ஷன் காட்சிகளில் வெறித்தனம் காட்டி நடித்திருக்கிறார். கிளைமேக்ஸ் ஸ்டன்ட் காட்சிகள் எல்லாம் வேற ரகம். ஆக்ஷன் பிரியர்களுக்கான செம ட்ரீட் இந்த படம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

தியேட்டர்கள் தெறிக்குது: அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடித்துள்ள இந்த படத்துக்கு வில்லனாக பிருத்விராஜ் நடித்துள்ளார். சலார் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அவருக்கு வெயிட்டான நெகட்டிவ் கதாபாத்திரம். ஆடுஜீவிதம் படத்தில் நடித்து அசத்திய பிருத்விராஜ் படே மியான் சோட்டே மியான் படத்திலும் தூள் கிளப்பியிருக்கிறார். அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் வரும் ஓப்பனிங் சீனுக்கே தியேட்டர்கள் தெறிக்குது என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

தலைவலி: பிருத்விராஜ் வரும் காட்சிகளும், இடைவேளையை தவிர ஒட்டுமொத்த படமும் தலைவலி தான் என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை வைத்துள்ளார். அதே பழைய கதையை இந்த முறையும் அக்ஷய் குமார் கொண்டு வந்து வெறுப்பேற்றுகிறார். பெரிதாக படத்தில் ஒன்றுமில்லை என நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். படே மியான் சோட்டே மியான் படத்துக்கு சோஷியல் மீடியாவில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications











