Bakasuran Review: செல்போனால் வரும் பிரச்சனை.. செல்வராகவன் நடித்த பகாசூரன் விமர்சனம் இதோ!

நடிகர்கள்: செல்வராகவன், நட்டி நட்ராஜ்
இசை: சாம் சிஎஸ்
இயக்கம்: மோகன் ஜி

Rating:
2.5/5
Star Cast: செல்வராகவன், நட்டி நட்ராஜ்
Director: மோகன் ஜி

சென்னை: திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களில் இருந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் பெரும் முன்னேற்றம் இந்த படத்தில் காணப்படுகிறது.

பகாசூரன் படத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜுக்கு சிறப்பான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் பகாசூரனை பீம சேனன் ஒழித்தது போல இந்த படத்தில் பீம சேனனாக வரும் செல்வராகவன் எந்த பகாசூரனை ஒழிக்கிறார் என்கிற கதையுடன் வெளியாகி உள்ள பகாசூரன் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

யார் பகாசூரன்

யார் பகாசூரன்

செல்போனால் என்ன எல்லாம் பிரச்சனைகள் வருகின்றன என்பதை கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே படம் காமெடியாக சொன்ன நிலையில், அந்த செல்போன் தான் பகாசூரனே என க்ரைம் த்ரில்லராக சொல்லி உள்ள படம் தான் இந்த பகாசூரன். ஆன்லைன் மூலம் இளம் பெண்களும், இளைஞர்களும் எப்படி தவறான வழிகளுக்கு செல்கின்றனர் என்றும் காதல் வலை வீசி இளம் பெண்களை எப்படி சிக்க வைக்கின்றனர் என பகாசூரன் படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி.

செல்வராகவன் நடிப்பு சிறப்பு

செல்வராகவன் நடிப்பு சிறப்பு

சாணிக் காயிதம், பீஸ்ட், நானே வருவேன் என கடந்த ஆண்டு நடிகர் அவதாரம் எடுத்த செல்வராகவன் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார். செல்வராகவன் தனது மகளை பறிகொடுத்து விட்டு அதற்கு பழி வாங்க கொலைகள் செய்யும் போது அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் மற்றும் அப்பாவியாக கிராமத்தில் இருந்த போது அவரது நடிப்பு என வெரைட்டி காட்டி நடித்து கலக்கி உள்ளார்.

நட்டி நட்ராஜ்

நட்டி நட்ராஜ்

ஓய்வு பெற்ற ராணுவ வீரராக வரும் நட்டி நட்ராஜ் செல்வராகவன் செய்யும் கொலைகளை கண்டுபிடிக்கும் நபராக நடித்து தனக்கு கொடுத்த போர்ஷனை கச்சிதமாக செய்துள்ளார். ஆனால், இத்தனை கொலைகள் நடக்கும் கதையில் போலீசுக்கான வேலை காணாமல் போவது தான் கேள்வியை எழுப்புகிறது.

பகாசூரனின் பலம்

பகாசூரனின் பலம்

உங்க குழந்தைங்க என்ன போனில் பார்க்கிறாங்க, யாருடன் பேசுறாங்க என்பதை கண்காணிக்க வேண்டும் என்கிற கருத்தை சொல்ல இப்படி ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. நடிகர்கள் தேர்வு, படத்தின் மேக்கிங் என முந்தைய படங்களை விட இந்த படத்தில் அவரது உழைப்பு அதிகரித்துள்ளது தெரிகிறது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க வேண்டும் என்கிற அவரது நல்ல நோக்கம் நிச்சயம் படத்திற்கு பிளஸ் ஆக அமைகிறது. சாம் சிஎஸ் இசையில் பிஜிஎம் வொர்க்கவுட் ஆகி உள்ளது.

பகாசூரனின் பலவீனம்

பகாசூரனின் பலவீனம்

டெக்னாலஜி கிரைம் த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு விறுவிறுப்பாக ராட்சசன் படத்தை போல மிரட்டியிருக்க வேண்டிய களத்தில் மாடு ஓட்டி மெதுவாக செல்வது போல உள்ள மேக்கிங் படத்தை பலவீனமடைய செய்கிறது. நறுக்கென்று இருந்திருக்க வேண்டிய வசனங்கள் எல்லாம் பல இடங்களில் நமத்துப் போன பட்டாசாக மாறியது படத்திற்கு பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த பகாசூரன் பக்கா சூரன் இல்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X