ரத்தினமாக ஜொலிக்கும் விக்ராந்துக்கு ஒரு ஹிட் பார்சல்: பக்ரீத் ட்விட்டர் விமர்சனம்

By Siva

Recommended Video

Bakrid Sneak Peek:பக்ரீத் படத்தின் கதை Vikranth|Jagadeesan Subu

சென்னை: விக்ராந்த் நடிப்பில் வெளியாகியுள்ள பக்ரீத் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்.

நண்பர்கள் துணையுடன் திரையுலகில் முன்னுக்கு வர போராடிக் கொண்டிருக்கிறார் விக்ராந்த். ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த் நடித்த பக்ரீத் படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு ஒட்டகத்தின் மீது பாசம் வைத்துள்ள விவசாயியாக நடித்து அசத்தியுள்ளார் விக்ராந்த்.

படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

விக்ராந்த்

பக்ரீத் படத்தை விக்ராந்த் தனது தோள்களில் தாங்கியுள்ளார். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். அதிலும் குறிப்பாக விலங்குகளை நேசிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

பாராட்டு

பக்ரீத் படத்தில் விக்ராந்த் நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவரும் சரி, அந்த குட்டிப் பாப்பாவும் சரி நடிப்பில் அசத்திவிட்டார்கள். #BakridFromToday #Bakrid

மகிழ்ச்சி

பக்ரீத் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்துள்ளது. தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரும் விக்ராந்தை பாராட்டுகிறார்கள். இந்த பாராட்டுக்காகத் தான் அவர் பொறுமையுடன் காத்திருந்தார். அவர் நம்பிக்கையுடன் காத்திருந்தது வீண் போகவில்லை. வாழ்த்துக்கள் விக்ராந்த். இனி உங்களுக்கு நல்ல காலம் தான்.

விஜய் ரசிகர்கள்

பக்ரீத் படம் பார்த்த விஜய் ரசிகர்கள் விக்ராந்தை மனதார வாழ்த்தியுள்ளனர். விக்ராந்த் ரத்தினமாகவே ஜொலித்துள்ளார். அவர் ஒட்டகம் சாரா மீது காட்டும் பாசத்தை பார்க்க புல்லரிக்கிறது. இது போன்ற படங்கள் அடிக்கடி வெளியாக வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X