Akhanda 2 X Review: அட்டகாசமா?.. ஆளவிடுங்கடா சாமியா?.. பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படம் எப்படி இருக்கு?

சென்னை: போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஆதி, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அகண்டா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி விட்டது. கடந்த வாரம் டிசம்பர் 5ம் தேதி அகண்டா 2 திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நிதி சிக்கல் காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டது.

நந்தமுரி பாலகிருஷ்ணா தாமாகவே முன் வந்து படத்தின் பிரச்னைகளை தீர்த்து வைத்த நிலையில், ஒரே வாரத்தில் படம் மீண்டும் திரையரங்குகளில் காத்திருந்த ரசிகர்களுக்காக வெளியாகி உள்ளது. (தமிழ் படங்களும் இந்த மாதமே அப்படி வெளியானால் சரி).

Balakrishna s Akhanda 2 X Review in Tamil  Sequel gets mixed reviews
Photo Credit:

அகண்டா முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி வெளியானது. அந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது. அகண்டா படத்தை ரீமேக் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தால் சூப்பராக இருக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் விரும்பினர். இந்நிலையில், அகண்டா 2 திரைப்படம் போட்ட பில்டப்புக்கெல்லாம் வொர்த்தா என்பது குறித்து படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஃபர்ஸ்ட் ஹாஃபே பிளாக்பஸ்டர்: பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி உள்ள அகண்டா 2 திரைப்படத்தின் முதல் பாதியே பிளாக்பஸ்டர் படத்தை பார்த்த அனுபவத்தை தருகிறது. இடைவேளைக்கு முன்பாக வரும் வசனம் எல்லாம் மெண்டல் மாஸ், பாலய்யாவின் ரேம்பேஜ் தெறிக்கவிடுகிறது. முதல் பாதி ரொம்பவே சூப்பராக உள்ளது, இதே போல 2வது பாதியும் இருந்தால் படம் இண்டஸ்ட்ரி ஹிட் தான் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

நோ பிசிக்ஸ்.. நோ லாஜிக்: அகண்டா முதல் பாகத்தில் அகோரியாக பாலகிருஷ்ணா அசுர தாண்டவம் ஆடியிருப்பார். அந்த படத்திலும், நோ பிசிக்ஸ், நோ லாஜிக் ஒன்லி பாலய்யா மேஜிக் தான் இருந்திருக்கும். அதே போலத்தான் இந்த படத்திலும் பாலய்யா மேஜிக் கொஞ்சம் ஓவர்டோஸாகவே சென்று விட்டது என்றும் ஆனால், படத்தை பார்க்க ஜாலியாகத்தான் உள்ளது என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

60 பிளஸ் வயசுல என்னம்மா ஆடுறாரு: நானெல்லாம் 25 வயசுலையே நடக்க முடியாம கஷ்டப்படுறேன், இந்த மனுஷன் 60 வயசுல என்னம்மா டான்ஸ் ஆடுறாரு என அகண்டா 2 படத்தில் பாலகிருஷ்ணா சம்யுக்தாவுடன் ஆட்டம் போடும் பாடல் காட்சிகளை ஷேர் செய்து புகழ்ந்துள்ளார்.

வெங்கி விமர்சனம்: அகண்டா 2 படத்தில் சில காட்சிகள் மட்டுமே நல்லா இருக்கு. போயபதி - பாலய்யா காம்பினேஷன் இந்த முறை ரொம்பவே சொதப்பிவிட்டது. பல இடங்களில் படம் ரசிகர்களை ஏமாற்றி கடுப்பாக்கி விடுகிறது. இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங் வெறும் 2.25 தான் என விமர்சகர் வெங்கி விமர்சித்துள்ளார். அகண்டா படம் அளவுக்கு அகண்டா 2 இல்லை என்றும் இந்த மாதம் வேற பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில், தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X