இந்த பூனையும் பால் குடிக்குமா?.. சின்ன வீடாக நடித்த லாஸ்லியா.. ஜென்டில்வுமன் பயில்வான் விமர்சனம்!

By Staff

சென்னை: லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணா நடிப்பில் இந்த வாரம் வெளியான ஜென்டில்வுமன் திரைப்படத்தை பார்த்த பயில்வான் ரங்கநாதன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என வாழ்ந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.

கணவன் தப்பு செய்தால் மனைவி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள். கொலையும் செய்வாள் பத்தினி என்கிற ரீதியில் இந்த படத்தை இயக்குநர் ஜோஸ்னா சேதுராமன் இயக்கி மிரட்டியிருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

Bayilvan Ranganathan gives positive review to Gentlewoman movie

கடந்த மாதம் காதலர் தினத்துக்கு காதல் என்பது பொதுவுடைமை படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்த லிஜோமோல் ஜோஸ் இந்த படத்தில் சிறப்பான குடும்பப் பெண்ணாக நடித்து பிராயச்சித்தம் தேடியுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.

இந்த பூனையும் பால் குடிக்குமா?: மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்த ஹரி கிருஷ்ணன் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஜென்டில்வுமன் படத்தில் அவருக்கு லிஜோமோல் ஜோஸ் மற்றும் லாஸ்லியா என 2 ஜோடிகள் கிடைக்கும் அளவுக்கு மனுஷன் மச்சக்காரனாக மாறியுள்ளார். லிஜோமோல் ஜோஸ் மாதிரி மனைவி இருக்கும் போது இவருக்கு லாஸ்லியா போல சின்ன வீடு எதுக்கு என்றும் அப்பாவியாக பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி வரும் ஹரி கிருஷ்ணாவின் சுயரூபம் தெரியும் போது இந்த பூனையும் பால் குடிக்குமா என நினைக்க வைத்துவிட்டார் என பயில்வான் கூறியுள்ளார்.

சின்னவீடு லாஸ்லியா: தனது கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் லிஜோமோல் ஜோஸ். ஒரு கட்டத்தில் தனது வீட்டுக்கு வரும் தங்கைக்கு பாலியல் தொல்லை கணவன் கொடுப்பது தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் கணவரை நோட்டமிட அவருக்கு சின்னவீடாக லாஸ்லியா இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அவர் ஜென்டில்வுமனாக இருந்தாரா பத்ரகாளியாக மாறினாரா என்பது தான் கதை எனக் கூறியுள்ளார்.

லிஜோமோல் ஜோஸ் தான் படமே: தனது கணவன் தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதை அறிந்த பின்னர் அவனை தொட விடாமல் தள்ளிப் போகும் காட்சியிலும், கோபத்தில் அடித்துவிட கணவன் இறந்து போகிறான். அதன் பின்னர், அதை மறைக்க என்னவெல்லாம் செய்கிறார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 6 மாதத்தில் கள்ளக் காதலியான லாஸ்லியாவை திருமணம் செய்துக் கொள்கிறேன் என அவரையும் ஆசைக்காட்டி ஏமாற்றி வாழ்ந்து வந்த ஹரி கிருஷ்ணா காணாமல் போக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து அதற்கு பின் வரும் தேவையற்ற சிக்கல்களை எப்படி லிஜோமோல் ஜோஸ் உடன் இணைந்து சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் கதை எனக் கூறியுள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனம்: லிஜோமோல் ஜோஸ் இந்த படத்தையே தனது தோள்களில் சுமந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் ஜென்டில்வுமன் படத்தை பாராட்டி பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். லாஸ்லியாவுக்கும் இந்த படம் நல்லா நடிக்க பல வாய்ப்புகளை கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தனியாக இருக்கும் பெண்களுக்கு காவலாளிகள் கூட காவலாக இருக்கமாட்டார்கள் என்பதையும் சமூகத்தின் அவலங்களையும் இயக்குநர் தோலூரித்துக் காட்டியுள்ளார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X