ஹீரோவுக்கு நடிக்கவே தெரியல.. செம மொக்க லாஜிக்.. 'ஆட்டி' படத்தை வறுத்தெடுத்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: கோலிவுட்டில் வெளியாகும் படங்களை எந்தவித தாட்சண்யமும் பார்க்காமல் ஓப்பனாக விமர்சனம் செய்வதில் பயில்வான் ரங்கநாதன் எப்போதுமே கில்லாடி. அந்த வகையில், இயக்குநர் கிட்டு இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன் நடிப்பில் செந்தில்குமார், காதல் சுகுமார், கரன் சக்கரவர்த்தி, சௌந்தர், அபி நட்சத்திர உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஆட்டி'. இந்த படத்தை பயில்வான் கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பயيلவான் ரங்கநாதன் விமர்சனம்: யாருமே இல்லாத ஒரு மலை கிராமத்துக்கு இன்ஸ்பெக்டராகப் போகிறார் இசக்கி கார்வண்ணன். ஒரு கேஸ் கூட வராத இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்குடா போலீஸ் இருக்குன்னு அவர் அலசி ஆராய்ந்து பார்க்கும் போதுதான், அங்கே பிரவீன் பழனிச்சாமி என்கிற ஆசிரியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அந்த மலை கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் அபி நட்சத்திரா ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவரை அந்த பிரவீன் பழனிச்சாமி பாலியல் பலாத்காரம் செய்கிறார். அந்த மலை கிராமத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்களை வேட்டையாட, ஆறு பேர் கொண்ட ஒரு முகமூடி கும்பல் கிளம்புகிறது. அவர்கள் அந்த பிரவீன் பழனிச்சாமியையும் கொலை செய்கிறார்கள். இதுதான் கதைக்களம்.

முகபாவனைனா என்னன்னு தெரியுமா: படத்தின் ஹீரோ இசக்கி கார்வண்ணனுக்குச் சுத்தமாக நடிக்கவே தெரியவில்லை. முகத்தில் எந்தவிதமான ரியாக்ஷனும் இல்லை. ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் போது, அதற்காக முறையாகப் பயிற்சி எடுக்க வேண்டாமா? முகத்தில் பாவனைகளை வெளிப்படுத்த வேண்டாமா? பாவனை என்றால் என்னவென்றே தெரியாமல் இசக்கி கார்வண்ணன் கேமரா முன்னாடி வந்து நின்றிருக்கிறார்.
படத்தில் ஆட்டி படப்பிடிப்பு நடந்த அந்த மலைப்பிரதேசம், இயற்கை எழிலோடு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. ஒளிப்பதிவும், இசையும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆனால், படத்தில் கதையும் புரியவில்லை, இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்றும் தெரியவில்லை. எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் படம் பாட்டுக்குச் சென்று கொண்டே இருக்கிறது என்று விளாசியுள்ளார்.

நான் பட்ட கொடுமையை நீங்களும் படணுமா?: விமர்சனத்தின் இறுதியாகத் தனது பாணியில் நக்கலடித்த பயில்வான், ஆட்டி படத்தைப் பார்த்து தியேட்டரில் நான் அழுது, துடிதுடித்து அனுபவித்த கொடுமையை நீங்களும் நேரில் போய் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்... தாராளமாக தியேட்டருக்குப் போய் ஆட்டி படத்தைப் பார்க்கலாம் என்று மரண கலாய் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications