ஹிஜாப் போட மறுக்கும் பெண்.. இஸ்லாமியர் மீது வன்மத்தை கக்கும் படமா? குறும்பட விமர்சனம்!
சென்னை: இயக்குனர் ஷாஜியா இக்பால் இயக்கத்தில், சனா பதான், ஷீபா சத்தா. சாரா ஹாஷ்மி ஆகியோர் நடிப்பில் வெளியான குறும்படம் தான் 'Bebaak'. இந்த திரைப்படத்தில் இஸ்லாமிய பெண் பர்தா அணிவதை விரும்பாமல், உடை அணிவது என் விருப்பம், என் உரிமை என்கிற சிந்தனையுடன் வாழும் ஒரு கல்லூரி பெண். இதனால், கல்லூரிக்கு மார்டன் உடையில் செல்கிறாள். ஆனால், காலம் அவளை எப்படி மாற்றியது என்பது தான் இந்த படத்தின் கதை.
படத்தின் ஹீரோயினான சாரா ஹாஷ்மி ஒரு ஏழ்மையாக இஸ்லாமியாக குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கல்லூரியில் ஆர்கிடெக் படித்து வருகிறாள். பீஸ் கட்டுவதற்கு கூட வசதி இல்லாத சூழ்நிலையில், அப்பா மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறது. இந்த நேரத்தில் தான் சாரா ஹாஷ்மிக்கு கல்லூரிக்கு பீஸ் கட்ட வேண்டி வருகிறது. வீட்டில் பணம் இல்லாததால், அப்பா, இஸ்லாமியர்களுக்கான அசோசியேஷனில் சென்று, உன்னுடைய மார்க்கை காட்டி உதவி கேட்களால் என்று சொல்கிறார்.

குறும்படம்: இதையடுத்து, சாரா ஹாஷ்மி தனது தந்தையுடன் இஸ்லாமிய அசோசியேஷனுக்கு வழக்கம் போல சுடிதார் அணிந்து செல்கிறார். அங்கு விளையாடிக்கொண்டு இருந்த பர்தா அணிந்து வந்த சிறுமி ஓடி வந்து, அக்கா நீங்க ஏன் பர்தா அணியவில்லை. பர்தா அணியவில்லை என்றால், பேய் பிடித்துவிடும் என அம்மா சொன்னாங்க, உங்களுக்கும் பேய் பிடிக்கும், அதோ இருக்காங்களே என் தோழி ஷமீராவிற்கும் பேய் பிடிக்க போகுது. இவளும் பர்தா போடவே மாட்டா என்கிறாள். அப்போது, சிறுமி ஷமீரா, சாரா ஹாஷ்மிவிடம், அக்கா உண்மையிலேயே ஹிஜாப் போடவில்லை என்றால் பேய் பிடிக்குமா என கேட்க அவள் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறாள்.
ஹிஜாப் என்பது கவசம்: பின் இஸ்லாமிய அசோசியேஷனுக்கு உள்ளே சாரா ஹாஷ்மி, செல்ல அவளை பார்த்த மேனேஜர் நீ இஸ்லாமிய பெண்ணா? ஏன் ஹிஜாப் அணியவில்லை, துப்பாட்டாவையும் சரியா நீ போடவில்லை. இஸ்லாமிய பெண்களுக்கு பர்தா என்பது ஒரு கவசம், ஒரு பாதுகாப்பு. ஜீன்ஸ் அணிந்த பெண், பர்தா அணிந்த பெண் இருவரும் ரோட்டில் செல்லும் போது. ஆண்களின் பார்வை ஜீன்ஸ் அணிந்த பெண் மீது தான் விழும், நீ அவர்களின் தவறான எண்ணத்தை துண்டுகிறாய் என்கிறார். இதைக் கேட்டுக்கொண்டு இருந்த சாரா ஹாஷ்மி, அந்த பையன் யாரிடம் தவறாக நடந்து கொண்டாலும் அது அந்த பையனின் தவறு தான். அதுமட்டுமில்லாமல், ஒரு பெண் எதிரில் வரும் போது, ஆண் தன்னுடைய பார்வை உயர்த்தி அவர்களை பார்க்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, பெண் இப்படி உடை அணிவதால் தான் அவன் தவறாக பார்க்கிறான் என்று சொல்லக்கூடாது என்கிறாள்.

இஸ்லாமிய அசோசியேஷன்: இதையடுத்து, மேனேஜர், வங்கி செக் புத்தகத்தில் இந்த பெண்ணுக்கு தேவையான பணத்தை எழுதி அதில் கையெழுத்துபோட்டுவிட்டு, இஸ்லாமிய புத்தகம் ஒன்றை கொடுத்து இந்த புத்தகத்தை நாளை படித்துவிட்டு வா, அதில் இருந்து நான் கேள்வி கேட்கிறேன். அதன் பிறகு செக் தருகிறேன் என்று சொல்கிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும், சாரா ஹாம்பி, கல்லூரி படிப்பை தொடர பண வேண்டுமே என்ன செய்வது என யோசித்துவிட்டு மறுநாள் காலை, உடல் முழுவதையும் மறைத்துக்கொண்டு, ஹிஜாப், பர்தா அணிந்து கொண்டு, இஸ்லாமிய அசோசியேஷனுக்கு செல்கிறாள்.
பேய் பிடிக்குமா: இவளை பார்த்த மேனேஜர், பரவா இல்லையே ஒரே நாளில் இத்தனை மாற்றமா என கேட்டுவிட்டு. அந்த புத்தகத்தில் பெண்கள் ஏன் ஹிஜாப் அணி வேண்டும், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார். எல்லா கேள்விக்கும் சாரா ஹாம்பி சரியாக பதில் சொல்லிவிட மேனேஜர் வெகுவாக பாராட்டுகிறார். கொஞ்ச நேரம் வெளியில் இரு, செக் தருகிறேன் என்று சொல்ல, சாரா ஹாம்பி வெளியில் காத்து இருக்கிறார். அப்போது, அங்கு, பல சிறுமிகள் ஹிஜாப் அணிந்து விளையாடிக்கொண்டு இருக்க, ஒரே ஒரு சிறுமி மட்டும் அதாவது, சிறுமி ஷமீரா, சாரா ஹாம்பியை பார்த்துவிட்டு, ஹிஜாப் அணியவில்லை என்றால் உண்மையில் பேய் பிடிக்கும் போல அதான் அக்காவும் போட்டு இருக்கிறார்கள் என பயத்தோடு பார்க்கிறாள்.
வன்மத்தை கங்கும் படமா: அந்த சிறுமியின் பார்வையில் அனைத்தையும் புரிந்து கொண்ட சாரா ஹாம்பி பர்தாவை மேஜர் மீது கழட்டி வைத்துவிட்டு அங்கிருந்து செல்கிறாள். இதை தூரத்தில் இருந்து பார்த்த சிறுமி ஷமீரா மீண்டும் மகிழ்ச்சியாக விளையாடுவது தான் இந்த குறும்படத்தின் கதை. இந்த குறும்படம் ஓடிடியில் அமேசான் பிரைமில் உள்ளது. இந்த படத்தை பார்த்த பலர், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்றும், இஸ்லாமியர் மீது வன்மத்தை கங்கும் படம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











