Don't Miss!
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- News
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
Bheemla Nayak Review: அய்யப்பனும் கோஷியும் படம் அளவுக்கு ரசிகர்களை திருப்தி செய்ததா பீம்லா நாயக்?
ஹைதராபாத்: பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் பீம்லா நாயக்.
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தெலுங்கு ரசிகர்களை திருப்திப் படுத்த ஏகப்பட்ட மாஸ், மசாலா காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், அதெல்லாம் படத்திற்கு பலம் சேர்த்ததா? இல்லையா? என மக்கள் தெரிவித்துள்ள ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.
கவர்மெண்ட் சரியில்ல, சிஸ்டம் சரியில்லையா? ரஜினிக்கு பதில் சொல்கிறாரா அஜித்.. கிளம்பிய விவாதம்!

நேர்மையான ரீமேக்கா
மறைந்த இயக்குநர் சாச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் முன் வந்தனர். இந்நிலையில், டோலிவுட்டில் சாகர் கே சந்திரா இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிப்பில் உருவான அந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. திரைக்கதையில் அதிக மாற்றங்களை செய்யாமல் சில ஆக்ஷன் காட்சிகளை மாஸாக வைத்து மட்டும் இந்த படத்தை உருவாக்கி உள்ள நிலையில், படம் விறுவிறுப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தமனின் இசை படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.

பிளாக்பஸ்டர்
முதல் பாதியில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து செம ஸ்லோவாக கொண்டு சென்ற இயக்குநர், இரண்டாம் பாதியில் ராணா மற்றும் பவன் கல்யாண் இருவருக்கும் இடையேயான மோதல் காட்சிகளை அனல் தெறிக்க விட்டுள்ளார். இந்த படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் என இந்த ரசிகர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஏவரேஜ்
பீம்லா நாயக் முதல் பாதி செம போராக சென்று பொறுமையை சோதிக்கிறது. ஏவரேஜான ஃபர்ஸ்ட் ஹாஃப் தான். ஆனால், இரண்டாம் பாதி பிளாக்பஸ்டர் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும், 5க்கு 3.75 என ரேட்டிங் எல்லாம் கொடுத்துள்ளார்.

சொதப்பிட்டாங்க
அய்யப்பணும் கோஷியும் படத்தில் அய்யப்பன் நாயர் மற்றும் கோஷி இருவருமே ஹீரோக்களாகவே காட்டியிருப்பார்கள். ஆனால், பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாணை ஹீரோவாகவும் ராணாவை வில்லனாகவும் மாற்றி விட்டார்கள்.இந்த அற்புதமான காட்சியை பீம்லா நாயக்கில் எதிர்பார்த்து செல்ல வேண்டாம் என இவர் பதிவிட்டுள்ளார்.

மாஸ் இன்ட்ரோ
அய்யப்பனும் கோஷியும் படத்தில் இன்ட்ரோ காட்சி சாதாரணமாகத் தான் இருக்கும். ஆனால், பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாணின் இன்ட்ரோ அப்படி சாதாரணமாக வைத்தால் ரசிகர்கள் ஏற்பார்களா? என நினைத்து டார்ச் லைட் உடன் செம மாஸாக நடந்து வந்து ராணா டகுபதியை பளார்.. பளார்.. என அடிக்கும் விதமாக இருக்கும் மாஸ் இன்ட்ரோ காட்சியை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

பார்க்கலாம்
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல மலையாளத்தில் நல்ல திரைக்கதையுடன் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் ரீமேக்கான பீம்லா நாயக் படத்தை ரசிகர்கள் தாராளமாக தியேட்டரில் போய் பார்க்கலாம். அகண்டா படத்திற்கு பிறகு தமன் சும்மா பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.