Bholaa Shankar Twitter Review: சிரஞ்சீவி எப்போதான் கம்பேக் கொடுப்பாரோ.. போலா சங்கர் எப்படி இருக்கு?

ஹைதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் தொடர்ந்து வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்து வந்தாலும் எந்த படமும் அவருக்கு ஹிட் படமாக அமையவில்லை. சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, காட்ஃபாதர் படங்கள் சொதப்பிய நிலையில், இந்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியான வால்டர் வீரய்யா படமும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஜெயிலர் படத்துடன் போட்டியாக இன்று வெளியான போலா சங்கர் திரைப்படத்திற்கு ஆந்திராவிலேயே டிக்கெட் புக்கிங் மோசமாக இருந்த நிலையில், இன்று வெளியான படம் அதை விட மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் குவிந்துள்ளன.

Bholaa Shankar Twitter Review: Mega Star fans upset over the cringe drama

தமிழில் அஜித் நடித்து வெளியான வேதாளம் படமே பாட்ஷா படத்தின் காப்பி என சொல்லப்பட்ட நிலையில், அந்த படத்தை பல வருடங்கள் கழித்து சிரஞ்சீவிக்கு இயக்கி இயக்குநர் மெஹர் ரமேஷ் வச்சு செய்திருக்கிறார்.

பச்சை நிறமே.. பச்சை நிறமே: ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய நிலையில், முதல் நாளே சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்துக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆந்திராவிலேயே பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் பச்சை நிறத்தில் காட்சியளிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Bholaa Shankar Twitter Review: Mega Star fans upset over the cringe drama

க்ரிஞ்ச் மகேஷ்: அஜித்தின் வேதாளம் படத்தில் இருந்த சில க்ரிஞ்சான காட்சிகளை தூக்கிவிட்டு இந்த படத்தை செய்துள்ளோம் என செம சீன் போட்டு வந்த இயக்குநர் மெஹர் ரமேஷ் போலா சங்கர் படத்தையே க்ரிஞ்சாக எடுத்து வைத்துள்ளார் என நெட்டிசன்கள் அடித்து துவம்சம் செய்து வருகின்றனர்.

மோசமான மொக்கைப் படம்: போலா சங்கர் படத்துக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் போனோம்.. ஆனால், படம் அதை விட மோசமாக இருக்கிறது என மெகா ஸ்டார் ரசிகர்களே இயக்குநரை கழுவி ஊற்றி வருகின்றனர். வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடலும் அஜித்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸும் அதிர வைத்தது. ஆனால், சிரஞ்சீவி என்ன தான் படத்தை காப்பாற்ற முடிந்தாலும், இயக்குநரின் சொதப்பலான மேக்கிங்கால் படம் பார்க்கவே முடியவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

Bholaa Shankar Twitter Review: Mega Star fans upset over the cringe drama

கீர்த்தி சுரேஷின் அடுத்த சம்பவம்: அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்தின் ரிசல்ட் பற்றி ரஜினியே பேசிவிட்டார். இந்நிலையில், அடுத்ததாக சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில், இந்த படமும் சொதப்பல் என்றே பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், கீர்த்தி சுரேஷ் தனக்கு கொடுத்த தங்கை போர்ஷனை தமிழில் லக்‌ஷ்மி மேனன் பண்ணதை விட சிறப்பாகவே செய்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Bholaa Shankar Twitter Review: Mega Star fans upset over the cringe drama

தமன்னாவுக்கு டபுள் சொதப்பல்: ஜெயிலர் படம் வசூல் வேட்டை நடத்தினாலும், காவாலா பாடலில் கூட தமன்னாவை ரசிக்க முடியாதபடி அவருக்கான போர்ஷனை நெல்சன் சொதப்பலாக மாற்றிய நிலையில், போலா சங்கரில் ஹீரோயினாக நடித்த நிலையிலும் தமன்னாவுக்கு ஸ்கோப் இல்லை என பங்கம் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X