twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bhoomi Review: எப்படி இருக்கிறது, ஜெயம் ரவியின் விவசாய 'பூமி'?

    By
    |

    Rating:
    2.5/5
    Star Cast: ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதா ரவி
    Director: லக்ஷ்மன்

    நம் மண்ணையும் விவசாயத்தையும் அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தை விரட்டியடிக்கும் பூமிநாதனின் கதைதான், பூமி.

    சிறு வயதிலேயே சாட்டிலைட் செய்த மாணவன் ஜெயம் ரவி, நாசா ஸ்காலர்ஷிப்பில் படித்து அங்கேயே வேலைக்குச் சேர்கிறார். செவ்வாய்க் கிரகத்தில் தாவரங்களை வளர்க்க முயற்சிக்கும் ஆராய்ச்சியில் முக்கிய விஞ்ஞானியாக இருக்கிறார். இதற்கிடையே அவருக்கு கிடைக்கும் விடுமுறையில் சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்ப நினைக்கிறார்.

    ஊரில் விவசாயிகள் துயரம் கண்டு ஆவேசம் கொள்ளும் பூமி, மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இந்த மண்ணை சிதைக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்க்கிறார். அந்த நிறுவன உரிமையாளருக்கும் பூமிக்கும் நடக்கும் மோதல்தான் படம்.

    சோதித்து இருக்கிறார்கள்

    சோதித்து இருக்கிறார்கள்

    ஏற்கனவே கார்பரேட்டை எதிர்க்கும் பல படங்களை பார்த்திருப்பதால், என்ன நடக்கும் என்பதை முதலிலேயே யூகிக்க முடிகிறது. இருந்தாலும் சுவாரஸ்யமான திரைக்கதையால், இன்னும் அழகாகக் கையாண்டிருந்தால், ரசனையான அனுபவத்தை இந்தப் படம் தந்திருக்கும். ஆனால், கதையை சொன்ன விதத்தில்தான் நிறையவே சோதித்து இருக்கிறார்கள்.

    நடிப்பில் குறையில்லை

    நடிப்பில் குறையில்லை

    நாசா விஞ்ஞானியாகவும் விவசாயியாகவும் ஜெயம் ரவி நடிப்பில் குறையில்லை. விவசாயி தம்பி ராமையா தீக்கிரையாகி உயிர்விடும்போது தடுக்க முடியாமல் தவிப்பது, பொய்பேசும் அரசியல்வாதி கண்டு பொங்குவது, கார்ப்பரேட் முதலாளியால் தனது திட்டம் நொறுங்கும்போது ஒன்றும் செய்ய முடியாமல் துடிப்பது, பிறகு அவரிடம் சவால் விடுவது என தன் கேரக்டரை நியாயப்படுத்தி இருக்கிறார்.

    வாய்ப்பே இல்லை

    வாய்ப்பே இல்லை

    நிதி அகர்வாலுக்கு அதிக வாய்ப்பில்லை. அதிகம் என்ன, வாய்ப்பே இல்லை. சும்மா வந்து நின்று இந்த படத்துல நானும் இருக்கேன் என்று சொல்லாமல் சொல்கிறார். சில காட்சிகளில் கூட்டத்துடன்தான் நிற்கிறார். விவசாயி தம்பி ராமையா, அமைச்சர் ராதாரவி, கலெக்டராக ஜான் விஜய், வட்டாட்சியர் மாரிமுத்து, நண்பன் சதீஷ், அம்மா சரண்யா பொன்வண்ணன் என நிறைய பேர் இருக்கிறார்கள்.

    ரொம்பவே ஓவர்

    ரொம்பவே ஓவர்

    இமான் இசையில், தமிழன் என்று சொல்லடா கவனிக்க வைக்கிறது. பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. டட்லியின் ஒளிப்பதிவு படத்தை அழகாக நகர்த்திச் செல்கிறது. வில்லன், ரோனித் ராய், ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது, உங்க கவர்ன்மென்டே என் பாக்கெட்ல என்று வசனம் பேசி முறைப்பது என பல படங்களில் வில்லன்கள் செய்த அதே வேலையை இதிலும் செய்கிறார். கோர்ட்டில் நின்று கொண்டு நீதிபதிக்கு எதிராக அவர் உறுமுவது எல்லாம், கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர், இயக்குனர் சார்.

    முளைக்காத விதை

    முளைக்காத விதை

    பல காட்சிகளில் நாடகத்தனம். ஒரு பக்கம் தமிழன் என்று சொல்லடா, மறுபக்கம் வந்தே மாதரம் என தமிழ் பக்தி, தேசபக்தியை மிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளில் இருக்கும் செயற்கை வாசனை எரிச்சலை தருகிறது. விவசாயத்துக்கு எதிரான கார்பரேட் நிறுவனங்கள் என்ற லைனை கையில் எடுத்த இயக்குனர், அதை அவசரத்தில் விதைத்ததால், முளைக்காத விதையாகி இருக்கிறது.

    English summary
    Jeyam ravi's Bhoomi intends to be a geopolitical drama about the daunting challenges faced by the agriculture sector in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X