Bigil Twitter Review: விஜய் - அட்லீ கூட்டணி ஹாட்ரிக் ஹிட் அடிக்குமா?.. பிகில் டிவிட்டர் விமர்சனம்!

பிகில் படத்தில் விஜய்யின் நடிப்பு சூப்பராக இருக்கிறது என்றும், அட்லீயின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என்றும் டிவிட்டரில் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

விஜய் ரசிகர்களுக்கு அட்லியின் பட்டாசு வேற லெவல் | Bigil Biggest blockbuster in cinema history

சென்னை: பிகில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். கடந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிகில் படம் இன்று ரிலீசாகியுள்ள நிலையில், அதிகாலை சிறப்பு காட்சி பார்த்த ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

பிளாக்பஸ்டர் படம்

"முதல் பாதி படம் மிகச்சிறப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதி உணர்வுப்பூர்வமாகவும், சூப்பரான காட்சியமைப்புகளாகவும் இருக்கிறது. அட்லீயின் திரைக்கதை அருமை. விஜய்க்கு இந்த படம் மீண்டும் ஒரு பெரிய வசூலைக் கொடுக்கும்", என இவர் தெரிவித்துள்ளார்.

அருமையான படம்

"பிகில் ஒரு அருமையான படம். விஜய்யின் அசாத்தியமான நடிப்பை பார்த்து அசந்துவிட்டேன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர் என்பதை விஜய் மீண்டும் நிரூபித்துள்ளார். அட்லீக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்", என இவர் பாராட்டியுள்ளார்.

விஜய் கவர்கிறார்

"கேங்ஸ்டராகவும், அன்பான தந்தையாகவும் நடித்து விஜய் கவர்கிறார். முதல்பாதியில் ராயப்பனாகவும், இரண்டாம் பாதியில் கோச் மைக்கேலாகவும் கலக்குகிறார். இரண்டாம் பாதியில் நிறைய புட்பால் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை வைத்து பார்வையாளர்களை திரையில் இருந்து கண் அகலாதப்படி அட்லீ திரைக்கதையை அமைத்துள்ளார்", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வார்த்தை - வெறித்தனம்

"பிகில் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் வெறித்தனம். தீபாவளிக்கு பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறார். விஜய் நடிப்பு சூப்பர். எல்லோருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். அருமையான செய்தியும் படத்தில் உள்ளது. பார்வையாளர்களுக்கு தீபாவளி டிரீட்", என இவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த படத்தில் பார்க்கலாம்

"அடுத்தமுறை சிறப்பாக செய்யுங்கள் அட்லீ. விஜய்க்கும் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்", என எளிமையாக பதிவிட்டுள்ளார் இவர். ஆக இவர் சொல்வதை பார்த்தால் படம் சுமார் தான் என புரிகிறது.

ஏமாற்றமளிக்கிறது

" கேங்ஸ்டர் பார்வையில் இருந்து சொல்லப்பட்டுள்ள இந்த விளையாட்டு படம் ஏமாற்றமளிக்கிறது. அட்லீ படங்களிலேயே இது தான் சுமார். மோசமான திரைக்கதை. புட்பால் காட்சிகள் எல்லாம் மோசம். ராயப்பனின் கதாபாத்திரமும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் அருமை. மற்றப்படி எதிர்பார்ப்பில் பாதியைக்கூட பூர்த்தி செய்யவில்லை", என இவர் விமர்சித்துள்ளார்.

சுமாரான படம்

"சுமாரான படம். திரைக்கதை மிகவும் மெல்ல நகர்கிறது. விஜய் ரசிகர்களுக்கு கூட இந்த படம் பிடிக்காது. படுமோசமாக உள்ளது. இந்த படத்தை ஏன் எடுத்தார்கள் என்பதே தெரியவில்லை", என இவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X