Birthmark Review: பர்த்மார்க் விமர்சனம்.. ஒரு மனைவிக்கு அவளது அன்பு கணவனே வில்லனா மாறுனா?

Rating:
3.0/5
Star Cast: ஷபீர் கல்லரக்கல், மிர்ணா
Director: விக்ரம் ஸ்ரீதரன்

நடிகர்கள்: ஷபீர் கல்லரக்கல், மிர்ணா

இசை: விஷால் சந்திரசேகர்

நேரம்: 1 மணி நேரம் 57 நிமிடங்கள்

இயக்கம்: விக்ரம் ஸ்ரீதரன்

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய ஷபீர் கல்லரக்கல் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் செட்டாணி கதாபாத்திரத்திலும் மிரட்டி இருந்தார். இந்நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ள பர்த்மார்க் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அவருக்கு ஜோடியாக கர்ப்பிணிப் பெண்ணாக இந்த படத்தில் நடிகை மிர்ணா நடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக இவர் நடித்திருப்பார்.

படத்தின் டிரெய்லரே மிரட்டலாக இருந்தது. ஷபீர் கல்லரக்கல் இந்த படத்தில் நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? என கேட்கும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார். இன்று வெளியாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கிறது? என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Birthmark Review in Tamil: Shabeer Kallarakkal and Mirnaa Menon top notch performs saves the film

பர்த்மார்க் கதை: கார்கில் போருக்கு பின்னர் சில வீரர்கள் 'post war trauma' எனும் பாதிப்பில் சிக்கி மனதளவில் பல சிக்கல்களை சந்தித்தனர். அதில், ஒரு ராணுவ வீரராக பர்த்மார்க் படத்தில் ஷபீர் கல்லரக்கலை காட்டுகின்றனர். டேனியலாக ஷபீரும் அவருடைய மனைவி ஜெனிஃபராக மிர்ணாவும் நடித்துள்ளனர். கர்ப்பமான மனைவியை இயற்கை முறையில் பிரசவம் பார்க்கவும் தனக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும் தன்வந்திரி குழந்தைபேறு கிராமத்திற்கு தனது மனைவியை அழைத்துச் செல்கிறார் நாயகன். ஒரு கட்டத்தில், அந்த குழந்தைக்கு நாம தான் அப்பாவா? என்கிற சந்தேகம் அவருக்குள் துளிர்விட தனது மனைவியின் பிரசவத்தை சுக பிரசவமாக மாற்றினாரா? அல்லது மனைவியை என்ன செய்தார் என்பது தான் இந்த பர்த்மார்க்கின் கதை.

ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்: வித்தியாசமான கதையை இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் எடுத்துக் கொண்டு மேக்கிங்கிலும் திரைக்கதையிலும் படத்தை கடைசி வரை வித்தியாசமாக ஒரு புதிர் போலத்தான் சொல்லப் போகிறேன் என மெனக்கெட்டு செய்திருப்பது பாராட்டுக்களை அள்ளுகிறது. ஆனால், இது வெகுஜன ரசிகர்களை கவருமா? அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துமா? என்கிற கேள்வியையும் அதே சமயம் எழுப்புகிறது.

Birthmark Review in Tamil: Shabeer Kallarakkal and Mirnaa Menon top notch performs saves the film

பிளஸ்: சிவகார்த்திகேயனின் அமரன் போன்ற படங்களில் ராணுவ வீரர்களை ஒரு ஹீரோவாக மாஸாக காட்டலாம். ஆனால், ஒரு போரில் பல கொலைகளை செய்து விட்டு திரும்பும் ஒரு மனிதனின் குற்ற உணர்ச்சிகள் அவனுக்குள் என்னவெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தும், அதிலும், தேவையற்ற சந்தேகம் கிளம்பும் போது அவன் எப்படி ராட்சசனாக மாறுகிறான் என ஷபீர் கல்லரக்கலை பயன்படுத்திய விதம் படத்திற்கு பெரிய பலம். அவருக்கு இணையாக நடிகை மிர்ணா கர்ப்பிணிப் பெண்ணாகவே கடைசி வரை நடித்திருப்பது வேறலெவல்.

மைனஸ்: 4 பிரிவுகளாக இந்த படத்தை இயக்குநர் எடுத்து இருக்கிறார். வித்தியாசமான முயற்சி மற்றும் நடிகர்களின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் முழுக்க சுவாரஸ்யம் மட்டும் முற்றிலும் மிஸ் ஆகிறது. படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது திருப்தியில்லாத உணர்வு எழத்தான் செய்கிறது. வித்தியாசமான படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்கள் தாராளமாக ஒருமுறை இந்த பர்த்மார்க்கை பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X