twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Biskoth Review: கிச்சு கிச்சு மூட்டும் சந்தானம் பன்ச்.. எப்படி இருக்கிறது பிஸ்கோத்?

    By
    |

    Rating:
    2.5/5
    Star Cast: 2020-11-14
    Director: ஆர் கண்ணன்

    பிஸ்கட் நிறுவனம் நடத்தும் அப்பாவின் கனவை மகன் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான், சந்தானம் ஸ்டைல் பிஸ்கோத்!

    பிஸ்கட் தயாரிக்கும் ஆடுகளம் நரேனின் மகன், சந்தானம். பிஸ்கட் நிறுவனத்தை வளர்த்து ஒரு நாள், அதற்கு மேலாளராக வருவான் என்று நம்புகிறார் நரேன்.

    பாட்டி சவுகார் ஜானகி

    பாட்டி சவுகார் ஜானகி

    அவருக்குப் பிறகு அந்த நிறுவனத்தை நடத்துகிறார் நரேனின் நண்பர் ஆனந்தராஜ். அதில் பணிபுரியும் சந்தானம், அருகில் இருக்கும் அனாதை ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வருகிறார். அங்கிருக்கும் பாட்டி சவுகார் ஜானகி சொல்லும் கதை போல, சந்தானத்தின் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது. அப்பா நினைத்ததுபோல பிஸ்கட் நிறுவன மேலாளராக ஆனாரா என்பதுதான் கதை.

    விளக்கு வச்சுக்கலாமே

    விளக்கு வச்சுக்கலாமே

    சந்தானத்துக்கு ஏற்றக் கதை. 'விளக்கு வைக்கிற நேரத்துல வழக்கமா வந்திடறவ, இன்னும் வரலை' என்று சொல்ல, அதற்கு, 'அப்ப, அவங்க வந்த பிறகு விளக்கு வச்சுக்கலாமே', 'சன் நியூஸ் கேள்விபட்டிருக்கேன், அதென்னப்பா குட் நியூஸ்?', 'குபீர் சிரிப்பை அடக்கிய குற்றத்துக்காக...' என்பது போன்ற பன்ச்கள் சிரிப்போடு ரசிக்க வைக்கின்றன.

    கிச்சுகிச்சு மூட்டுகிறார்

    கிச்சுகிச்சு மூட்டுகிறார்

    வழக்கம்போல அவருக்கு இந்தப் பக்கம் மனோகர், அந்த பக்கம் மொட்டை ராஜேந்திரன். மற்றும் சந்தானம் படங்களில் வழக்கமாக வரும் சிவசங்கர் மாஸ்டர் உள்பட அந்த கோஷ்டி, காமெடி ஏரியாவை கவனித்துக் கொள்கிறார்கள். சில இடங்களில் தனக்கான கவுன்டர்களால் சிரிக்க வைக்கிறார் சந்தானம். சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். இது சவுகார் ஜானகிக்கு 400-வது படம். அதிக வேலை இல்லை. சந்தானத்துக்கு கதை சொல்லும் வேலைதான். அதை தனது அனுபவ முகபாவனைகளால் எளிதாக கடத்துகிறார்.

    ஸ்பூஃப் காட்சிகள்

    ஸ்பூஃப் காட்சிகள்

    ஆனந்த் ராஜ், அமைதியாக முதலாளி கெத்து காட்டி கவனிக்க வைக்கிறார். பரத் ரெட்டி கொஞ்சம் வில்லத்தனக் கோபத்தோடு முடித்துக்கொள்கிறார். 2 நாயகிகள். இருவருக்கும் அதிக வேலை இல்லை. பாகுபலி, 300 படங்களின் ஸ்பூஃப் காட்சிகள் ரசிக்க வைத்தாலும் இன்னும் அதைச் சிறப்பாக செய்திருக்கலாம்.

    பெட்டைம் ஸ்டோரீஸ்

    பெட்டைம் ஸ்டோரீஸ்

    ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு, கதைக்கு தேவையானதை கொடுத்திருக்கிறது. பின்னணி இசையில் ரதன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். அமெரிக்க ஃபேன்டஸி படமான, பெட்டைம் ஸ்டோரீஸ் கதையை அப்படி கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் செய்து தமிழுக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார்கள். காட்சிகள் அனைத்தும் அழுத்தமே இல்லாமல் செல்வதால், எதுவும் மனதில் தங்கவில்லை.

    English summary
    Biskoth review: Actor Santhanam's fantacy comedy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X