Blackmail Review: ப்ளாக்மெயில் விமர்சனம்.. ஜி.வி. பிரகாஷுக்கு இந்த படமாவது கை கொடுத்ததா?

Rating:
3.0/5
Star Cast: ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி
Director: மு. மாறன்

சென்னை: ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ளாக்மெயில்' திரைப்படம், எதிர்பார்ப்புகளைத் தூண்டிய சஸ்பென்ஸ் திரில்லராக இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார். இது அவரது மூன்றாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தொடக்கத்திலேயே ஸ்ரீகாந்த் மற்றும் பிந்து மாதவி தம்பதியினரின் குழந்தை காணாமல் போகிறது. அதேசமயம், நாயகன் ஜி.வி. பிரகாஷ், ஒரு பார்சலைக் கொடுக்கச் சென்று தனது வாகனத்தைத் தொலைத்துவிடுகிறார். அந்த வண்டியில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததால், ஜி.வி. பிரகாஷ் மீது திருட்டுப் பழி சுமத்தப்படுகிறது. காணாமல் போன குழந்தைக்கும், ஜி.வி. பிரகாஷுக்கும் என்ன தொடர்பு என்பதைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது.

Blackmail Review in Tamil  GV Prakash  Teju Ashwini crime thriller movie gives some thrill

ப்ளாக்மெயில் படம் எப்படி இருக்கு?: மு. மாறன் தனது வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. இருப்பினும், கதாபாத்திர வடிவமைப்பிலும், உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் படத்திற்குப் பின்னடைவாக அமைந்துள்ளன. கர்ப்பிணி காதலியை காப்பாற்றப் போராடும் ஜி.வி. பிரகாஷ், குழந்தை வரம் வேண்டி தவிக்கும் ரமேஷ் திலக், குழந்தையைத் தொலைத்த ஸ்ரீகாந்த் என ஆண் கதாபாத்திரங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்புகள் ஸ்ட்ராங்காக காட்சி படுத்தியிருந்தாலே இந்த பிளாக்மெயில் பிளாக்பஸ்டர் படமாக மாறியிருக்கும்.

பிளஸ்: குழந்தையைக் கடத்தத் துடிக்கும் லிங்கா, காதலியைக் காப்பாற்றப் போராடும் ஜி.வி. பிரகாஷ், முதலாளியைப் பழிவாங்க நினைக்கும் தொழிலாளி எனப் பல கிளைக் கதைகள் இருந்தாலும், அதை ஒரு புள்ளிக்குள் திரைக்கதையாக மாற்றும் போது கதை பல இடங்களில் தடுமாறுகிறது. சில காமெடி காட்சிகள் ஆங்காங்கே ரசிகர்களை கிச்சு கிச்சு மூட்டுகிறது. படத்தின் இசை, ஒளிப்பதிவு நல்லாவே கை கொடுத்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் தனது நடிப்பால் கடைசி வரை படத்தை தாங்கி பிடிப்பது பெரிய பலம்.

மைனஸ்: தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்டு உருவாக்கப்பட்டு வருவது ஒரு ஆறுதல் தான் என்றாலும், இன்னமும் அவருக்கு டார்லிங் படத்தை போல ஒரு வெயிட்டான வெற்றிப் படம் அமையவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்ரீகாந்த் மற்றும் பிந்து மாதவி ஜோடியின் நடிப்பு படத்துக்கு சில இடங்களில் கை கொடுத்துள்ளது.

ஜி.வி. பிரகாஷின் காதலியாக தேஜு அஸ்வினி நல்ல தேர்வு. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் அவர் தனது பங்குக்கு நல்லாவே ஸ்கோர் செய்துள்ளார். கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ப்ளாக்மெயில் படத்தில் கடைசி வரை ஏகப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் இடம்பெற்றாலும், சுவாரஸ்ய குறைபாடு காரணமாக பெரிதாக படத்தை ரசிக்க முடியவில்லை. த்ரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த பிளாக்மெயில் நல்ல திரை அனுபவத்தை கொடுக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X