Blast Review: பிளாஸ்ட் விமர்சனம்.. அன்லிமிடேட் ஆக்ஷன் இருக்கு.. படம் எப்படி இருக்கு?
சென்னை: AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுபாஷ் கே ராஜா இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள படம் பிளாஸ்ட். ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, பவன், ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு பீனிக்ஸ் பிரபு ஸ்டண்ட் அமைத்துள்ளார். டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், படம் எப்படி இருந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
படத்தின் கதையை பொறுத்தவரையில் தொழிலதிபர் கொக்கென் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அமைச்சருக்கு ரூபாய் 1000 கோடி லஞ்சமாக தர முயற்சிக்கிறார். அதற்கு சிலரிடம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கிறார். ரூபாய் 1000 கோடியை ஒப்படைக்க நிழல் உலகில் நடைபெறும் சம்பவங்கள் கராத்தே மாஸ்டரான அர்ஜுனின் மகள் ப்ரீத்தி முகுந்தனை கொலை செய்ய வேண்டிய நிலைக்கு கதை நகர்கிறது. இதனால் ஒரு குடும்பமாக இணைந்து அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் கதையை பொறுத்தவரையில் மிகவும் சாதாரண பிளாட் போலத்தான் உள்ளது. ஆனால், திரைக்கதையில் இயக்குநர் சுபாஷ் கே. ராஜா திறம்பட செயல்பட்டுள்ளார். படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை ஒரு காட்சியைக் கூட, இது எதற்கு என்று யாரும் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு பார்த்து பார்த்து உருவாக்கி உள்ளார் என்று தான் கூற வேண்டும். அதேபோல் ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு படத்தின் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் பார்த்து பார்த்து உருவாக்கி உள்ளார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது என்பது வியக்கத்தக்க விஷயம் அல்ல. இந்த வயதிலும் அதே எனர்ஜியில் சண்டைக் காட்சிகளில் நடித்தது பாராட்டுக்குரியது. ஆனால் ரசிகர்களை மொத்தமாக சர்ப்ரைஸ் ஆக்கியது என்றால் அது அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் ஆக்ஷன் காட்சிகள் தான். அதிலும் ப்ரீத்தி முகுந்தன், காருக்குள் வைத்து செய்யும் சம்பவத்திற்கு எல்லாம் தியேட்டரே பிளாஸ்ட் என்றுதான் கூற வேண்டும்.
டாப் கியர்: படத்தின் முதல் பாதியிலேயே, ஒரு குடும்பமாக இணைந்து மூவரும் ரசிகர்களுக்கு வைக்கும் ஆக்ஷன் விருந்துக்கே படத்தின் டிக்கெட் விலை சரியாகிவிட்டது என கூறும் அளவுக்கு ஒர்த். முதல் பாதியில் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ஸ்லோ, அதன் பின்னர் டாப் கியரில் படம் நகர்ந்து கொண்டு உள்ளது. அதே விறுவிறுப்பில் இரண்டாவது பாதியும் நகர, மொத்த படமும் பிளாஸ்ட் என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. அதேபோல் அபிராமிக்கு கொடுக்கப்பட்ட ஒரு பில்டப் காட்சிக்கும் தியேட்டரில் அப்லாஸ்.

பலம்: படத்திற்கு மிகவும் பிளஸ் என்றால் அது, ரவி பஸ்ரூர் இசை தான். ப்ரீத்தி முகுந்த பறந்து பறந்து ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக காட்ட காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு இசையமைத்துள்ளார். அவரது இசை மொத்த படத்திற்கும் பெரிய பலம். ப்ரீத்தி முகுந்தனும் தனது கதாபாத்திரத்திற்கு ரொம்பவுமே சிரமப்பட்டு உள்ளார். படத்தின் ப்ரீ கிளைமாக்ஸில் விவேக் பிரசன்னாவுக்கு கொடுக்கப்பட்ட எலிவேஷன் காட்சிகள் எல்லாம் கூடுதல் சர்ப்ரைஸ்.
கிளைமாக்ஸ்: ஜான் கொக்கேன் தான் வில்லன் என்று காட்டப்பட்டாலும், அவரது கதாபாத்திரம் வலுவானதாக இல்லை. ஆனால், அர்ஜுன் சிதம்பரம், பவன் மற்றும் அவரது அடியாட்கள் டீம் என இவர்கள் தான் படம் முழுக்க வலுவான வில்லன் கதாபாத்திரங்களாக வலம் வருகிறார்கள். முதல் பாதியில் ஸ்கோர் செய்த திலீபனின் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம், இரண்டாம் பாதியில், தனது குடும்பத்தை வில்லன்கள் கடத்திவிட்டார்கள் என்ற போதும் பெஞ்ச் தேய்த்துக் கொண்டு இருக்கிறார்.
படம் எப்படி இருக்கு?: கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது தான் என்றாலும், அதற்கு முன்னர் ஓடிய இரண்டு மணி நேர படத்திற்கான சரியான ஃபினிஷிங்காக இல்லாதது குறைதான். மொத்ததில், ஆக்ஷனை மட்டுமே மைய்யமாக கொண்டு, தரமான திரைக்கதையுடன் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ள பக்கா ஆக்ஷன் படம். ஒர்த் டூ ரீ-வாட்ச்.


Click it and Unblock the Notifications