Blast X Review - அர்ஜுன் நடித்திருக்கும் பிளாஸ்ட் எக்ஸ் விமர்சனம்.. படமே பிளாஸ்ட்தானாம்

சென்னை: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பிளாஸ்ட். சுபாஷ் கே.ராஜ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே அமோக ஆதரவை பெற தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிந்திருக்கிறார்கள். அவைகளை இதில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருப்பவர் அர்ஜுன். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர்; இப்போதும் அவ்வப்போது ஹீரோவாக கலக்கிவருகிறார். அந்தவகையில் இப்போது பிளாஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ப்ரீத்தி முகுந்தன், விருமாண்டி அபிராமி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லரே பிளாஸ்ட் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பற்ற வைத்தது.

Blast X Review  Arjun   s Action Entertainer Wins Praise From Fans on Day 1
Photo Credit:

எப்படி இருக்கு படம்?: இன்று அந்தப் படம் தியேட்டர்களில் ரிலீஸானது. அதீத ஆர்வத்தோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களை படக்குழுவினர் ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும். ஹீரோவுக்கு மட்டுமின்றி இரண்டு ஹீரோயின்களுக்குமான சண்டை காட்சிகளும் பட்டாசாக இருக்கின்றன என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படம் முழுக்க சண்டை காட்சிகள் அவ்வளவு இருந்தாலும் ஒன்றுகூட உறுத்தவில்லை என்பதும் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. முதல் காட்சி முடிவிலேயே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கிவிட்டன.

Also Read
கருப்பு படத்தின் மெகா ஹிட்.. ரஜினிகாந்த் அழைத்து ஆர்.ஜே.பாலாஜியிடம் சொன்னது இதுதான்
கருப்பு படத்தின் மெகா ஹிட்.. ரஜினிகாந்த் அழைத்து ஆர்.ஜே.பாலாஜியிடம் சொன்னது இதுதான்

பிளாஸ்ட் எக்ஸ் விமர்சனம்: இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் சிலர் படம் பற்றிய தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார்கள். படம் பார்த்த ரசிகர் ஒருவர், "நல்ல கமர்ஷியல் என்ட்டெர்டெயினராக படம் இருக்கிறது. படத்தின் திரைக்கதை நல்ல விறுவிறுப்பாக இருக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் போல்டான ஃபெர்ஃபார்மன்ஸை கொடுத்திருக்கிறார். அர்ஜுன் எனர்ஜி இன்னும் குறையவில்லை. ஆக்ஷன் லவ்வர்களுக்கு இந்தப் படம் செம ட்ரீட்" என புகழ்ந்திருக்கிறார்.

செம ஆக்ஷன் பேக்: இன்னொரு ரசிகர், 'பிளாஸ்ட் - முதல் பாதி முழுக்க ஆக்ஷன் பேக்கேஜ். இரண்டாவது பாதியும் அப்படித்தான். தேவையில்லாத சீன்கள் எதுவும் இல்லைல். வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருக்கிறது. வீட்டில் நடக்கும் சண்டை காட்சிகள் அட்டகாசம். குடும்பத்தோடு இந்த ஆக்ஷன் படத்தை பார்த்து ரசிக்கலாம்' என தெரிவித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்க்ரீன் ப்ளே: படம் பார்த்த இந்த ரசிகர், 'மாஸ் ஆக்ஷன் என்ட்டெர்டெயினர். பலமான சண்டை காட்சிகள் அற்புதமான கமர்ஷியல் வைபோடு இருக்கின்றன. அபிராமி மற்றும் நடித்திருப்பவர்கள் தரமான பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருக்கிறார்கள்.

ப்ரீத்தி முகுந்தன் அனைவரையும் தனது நடிப்பால் இம்ப்ரெஸ் செய்கிறார்" என புகழ்ந்திருக்கிறார். இப்படி இதுவரை படம் பார்த்த அனைவருமே படத்தை ஆஹா ஓஹோவென்று கொண்டாடிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: blast arjun அர்ஜுன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X