For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டிரெண்டிங்கில் இருந்து அண்ணாத்த விமர்சனத்தை காணோம்.. யாரு பார்த்த வேலை என ப்ளூ சட்டை மாறன் கேள்வி!

  |

  சென்னை: அண்ணாத்த படத்திற்கு விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சன வீடியோ யூட்யூப் டிரெண்டிங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

  Recommended Video

  Annaatthe Review | Annatha Review by Poster Pakiri | Superstar Rajinikanth | Siva | Filmibeat Tamil

  பொதுவாக கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் படங்களை ப்ளூ சட்டை மாறன் படு மோசமாக கழுவி ஊற்றி விமர்சனம் செய்து வருவது வழக்கம்.

  நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் மிகவும் சுமாராக இருப்பதாக பல விமர்சனர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இவரது வீடியோ டிரெண்டிங்கில் இருந்து தூக்கப்பட என்ன காரணம் என கேட்டுள்ளார்.

  தலைவர் ரசிகர்களுக்கு உற்சாக அனுபவம்... அண்ணாத்த படம் குறித்து விக்னேஷ் சிவன் சிலிர்ப்பு தலைவர் ரசிகர்களுக்கு உற்சாக அனுபவம்... அண்ணாத்த படம் குறித்து விக்னேஷ் சிவன் சிலிர்ப்பு

  அடிவாங்கிய அண்ணாத்த

  அடிவாங்கிய அண்ணாத்த

  விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அடிவாங்கி உள்ளது. படம் சீரியல் போல இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்தின் உழைப்பை இயக்குநர் சிறுத்தை சிவா மோசமான திரைக்கதையின் மூலம் வீணடித்து விட்டார் என்றும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

  வச்சு செய்யும் விமர்சகர்கள்

  வச்சு செய்யும் விமர்சகர்கள்

  பொதுவாக புதிய கமர்ஷியல் படங்கள் மக்களை என்டர்டெயின் பண்ணாமல் சோதித்தால் ப்ளூ சட்டை மாறன் படு மோசமாக விமர்சித்து தள்ளி விடுவார். பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவருடன் பல முறை சண்டை போட்டுள்ளனர். ஆனால், அண்ணாத்த படத்தை பார்த்த அத்தனை விமர்சகர்களும் அந்த படத்தை ப்ளூ சட்டை மாறனை விட அதிகளவில் விமர்சித்துள்ளனர்.

  உச்சத்தில் வசூல்

  உச்சத்தில் வசூல்

  ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திற்கு சன் பிக்சர்ஸ் செய்த புரமோஷனை பார்த்து படம் ரிலீசாகும் முன்பாகவே முதல் 4 நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் புக்கிங் நடைபெற்று விட்டது. படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியானாலும் வேறு வழியில்லாமல் டிக்கெட் வாங்கியவர்கள் இந்த வாரம் முழுக்க அண்ணாத்த தீபாவளியை சகித்துக் கொண்டு அந்த படத்தின் வசூலை அதிகரிக்க காரணமாகி உள்ளனர் என கூறப்படுகிறது. வசூல் ரீதியாக படம் ஹிட் என தயாரிப்பு தரப்பும் இயக்குநரும் செம ஹேப்பியாக ட்வீட்டும் போட்டுவிட்டனர். சீக்கிரமே கேக் வெட்டி சக்சஸ் மீட்டும் நடைபெறும்.

  தூக்கிட்டாங்க

  தூக்கிட்டாங்க

  "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தமிழ் டாக்கீஸ்ல போட்ட அண்ணாத்த ரிவியூ ட்ரெண்டிங் 2வுல இருந்துச்சி. இப்ப காணும்? ஆனா அதுக்கு முன்ன போட்ட ஜெய்பீம், அதுக்கு அப்பறம் போட்ட எனிமியும் ட்ரெண்டிங்ல இருக்கு. யாரு பாத்த வேலைடா இது? பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்களே.. அதுதானா இது?" என சற்றுமுன் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

  அதுதான் காரணமா?

  அதுதான் காரணமா?

  அண்ணாத்த படத்தின் விமர்சனத்தில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதே அந்த படத்தின் புரமோஷனுக்காகத் தான் என்றும் முதியோர் மறுவாழ்வு நிதி உள்ளிட்ட வசனங்களை ப்ளூ சட்டை மாறன் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்தை தாக்கும் வகையில் பேசியதால் தான் அந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்து தூக்கப்பட்டு இருக்கலாம் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

  சன் பிக்சர்ஸ் வேலையா

  சன் பிக்சர்ஸ் வேலையா

  ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் வைரலாகி வருவது பிடிக்காமல் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த வேலையை ஒருவேளை பார்த்து இருக்குமோ என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தை மட்டும் விமர்சனம் செய்திருந்தால் நிச்சயம் அது தூக்கபட்டு இருக்காது என்றும் சிலர் ப்ளூ சட்டை மாறனுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

  திட்டும் ரசிகர்கள்

  திட்டும் ரசிகர்கள்

  வெறும் படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனத்தை வைத்தாலே உண்மையான ரசிகர்களுக்கு பிடிக்காது கண்டபடி திட்ட தொடங்கி விடுவார்கள். ரஜினிகாந்தை இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கும்படியாக ப்ளூ சட்டை மாறன் பேசினால் சும்மா விடுவார்களா? கமெண்ட் பக்கம் முழுவதும் ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  டிசம்பர் 3க்கு வெயிட்டிங்

  டிசம்பர் 3க்கு வெயிட்டிங்

  மேலும், விமர்சகரில் இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படம் வரும் டிசம்பர் 3ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அந்த படத்தை என்ன பண்றோம் பாரு என ப்ளூ சட்டை மாறனுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் சவால் விட்டு காத்திருக்கின்றனர்.

  English summary
  Blue Sattai Maaran tweeted his Annatthe review disappear from Youtube Trending and asks whose hand behind this stirs controversy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X