ஹரிஷ் கல்யாணுக்கு இருக்குற அறிவு கூட கவினுக்கு இல்லையே.. ஸ்டார் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்

சென்னை: பாலிவுட்டில் தமிழ் படங்களை ரீமேக் செய்துக் கொண்டும் தமிழ் இயக்குநர்களுக்கு பட வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், கவின் நடிப்பு கற்றுக்கொள்ள மும்பைக்கு செல்வது எல்லாம் சரியான காமெடி என்றும் படத்திலிருந்து சீனை தூக்கி விட்டால் கூட எந்த ஒரு ஜம்ப்பும் இருக்காது என ஆரம்பத்திலேயே அடி வெளுத்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கடந்த வாரம் வெளியான அரண்மனை 4 படத்துக்கும் ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தார். ஆனால், அதையும் மீறி படத்தை தியேட்டரில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

Blue Sattai Maran gives full negative to Kavin s Star movie


இந்நிலையில், நேற்று வெளியான ஸ்டார் படத்தையும் தாறுமாறாக விமர்சித்து தள்ளி இருக்கிறார். மேலும், போகிற போக்கில் விஜய் ஆண்டனியையும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கலாய்த்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அப்பாவால் சினிமாவில் நடிகனாக முடியாத நிலையில், மகனை எப்படி நடிகனாக மாற்றுவது என்கிற போராட்டத்தில் தந்தை இருக்கிறார். சிறுவயதிலிருந்தே நடிகனாக வேண்டும் என ஆசைப்படும் நாயகன் எப்படி ஹீரோ ஆனான் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஆனால், அதை விட்டுவிட்டு முதல் பாதி முழுக்க ஒரு ஹீரோயினுடன் சுற்றுவது, இரண்டாம் பாதியில் இன்னொரு ஹீரோயினுடன் சுற்றுவது கடைசியில் அச்சச்சோ கதையை மறந்து விட்டோமே என கிளைமாக்ஸில் மீண்டும் கதைக்குள் வருவது என இயக்குநர் இளன் படமே எடுக்க தெரியாமல் எடுத்து வைத்துள்ளார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் விளாசி தள்ளி உள்ளார்.

ஹரிஷ் கல்யாண் எஸ்கேப்: இளன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த ஹரிஷ் கல்யாண் தான் முதலில் இந்த ஸ்டார் படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பின்னர் தான் கவின் இந்த படத்தில் இணைந்து நடித்தார். டாடா படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு ஸ்க்ரிப்ட் அறிவு இருக்கு என நினைத்தோம். ஆனால் இந்த படத்தை பார்த்தால், கவினை விட ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல கதையறிவு உள்ளது என கலாய்த்துள்ளார்.

விஜய் ஆண்டனியையும் விடல: இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தானே ப்ளூ சட்டை மாறன் ஏன் விஜய் ஆண்டனி குறித்து பேசுகிறார் என ரசிகர்களே குழம்பும் அளவுக்கு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதற்காக மும்பையில் பிரபல நடிகரிடம் என் நடிப்பு கற்றுக்கொள்ள ஹீரோ கவின் செல்லும் காட்சி எல்லாம் காமெடியாகத்தான் உள்ளது என்றும் தமிழ்நாட்டில் இல்லாத நடிப்பு பயிற்சி பட்டறைகளா? இங்கே இல்லையென்றால் கூட பக்கத்தில் உள்ள கேரளாவுக்கு செல்லலாம். மும்பைக்கு செல்வது ஏன்? அங்கே உள்ள நடிகர்களே நடிக்க தெரியாமல் விஜய் ஆண்டனி போல வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர் என பாலிவுட் நடிகர்களையும் விஜய் ஆண்டனியையும் சேர்த்து வைத்து கலாய்த்துள்ளார்.

எதை கட் பண்ணாலும்: மேலும், படத்தில் முதலில் வரும் ப்ரீத்தி முகுந்தன் போர்ஷனை கட் செய்தாலும் படத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. அதே போல இரண்டாவதாக ஜிமிக்கி என வரும் அதிதி போஹங்கர் போர்ஷனை கட் செய்தாலும் படம் ஜம்ப் ஆகாது. அதே போல மும்பையில் நடிக்க கற்றுக் கொள்வதாக சென்று விட்டு ஒரு ஸ்டார் ஷேப் க்ரூப்பில் படுத்துக் கொண்டு சிரிக்கும் காட்சிகளை கட் செய்தாலும் படம் ஜம்ப்பாகாது என ப்ளூ சட்டை மாறன் மொத்தமாக படமே சரியில்லை என விளாசித்தள்ளியுள்ளார். டிரெய்லரை பார்த்து விட்டு முதல் நாள் படத்துக்கு போனவன் எல்லாம் டிரெய்லர் கட் பண்ணவனை வெறிகொண்டு தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X