Blue Sattai Maran Annapoorani Review: நயன்தாராவோட அன்னபூரணி சுத்த போர்.. எதுவுமே செல்ஃப் எடுக்கல!
சென்னை: கார்த்தியின் 25வது படமான ஜப்பான் அவருக்கு காலை வாரி விட்டது போல நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்னபூரணி படத்தை பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த படத்தை வழக்கம் போல ப்ளூ சட்டை மாறன் சும்மா வச்சு செய்துள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஸ்போர்ட்ஸ் பட பாணி: எந்தவொரு ஸ்போர்ட்ஸ் படம் என்றாலும் அந்த படத்தின் கதை ஒன்றாகத்தான் இருக்கும். அதே கதையை அப்படியே காப்பி செய்து செஃப் கதையாக மாற்றி நிலேஷ் கிருஷ்ணா பரிமாற முயற்சித்துள்ளார். ஆனால், எல்லாமே ஃபேக்காக திணிக்கப்பட்டது போல இருப்பதால் அன்னபூரணி ருசிக்கவே இல்லை என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
கான்செப்ட்டே தப்பு: நயன்தாராவின் நடிப்பில் எந்தவொரு புதுமையும் இல்லை என்றும் அரைத்த மசாலாவையே அரைத்துள்ளனர் என்றும் படத்தின் கான்சப்ட்டே தப்பு என ப்ளூ சட்டை மாறன் போட்டு பொளந்துள்ளார். ஷங்கரின் உதவியாளரான அட்லீ ராஜா ராணி படத்தை எடுத்து ஹிட் கொடுத்த நிலையில், நிலேஷ் கிருஷ்ணாவால் அந்த மேஜிக்கை நிகழ்த்த முடியாமல் போய் விட்டது என்றும் படத்தை காப்பாற்ற எங்கேயும் அவர் மெனக்கெடவே இல்லை என்றும் விளாசி உள்ளார்.
ஒரு சமையல் குறிப்பு கூட இல்லை: சமையல் டிவி ஷோவை பார்த்தால் கூட சில புதிய சமையல் குறிப்பாவது பெண்களுக்கு கிடைக்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி கூட ஒரு விஷயத்தை நயன்தாரா தனது ரசிகைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டாரே என்றும் அந்த பக்கம் இதுக்கு மேல போய் ரிஸ்க் எடுக்கணும்னா எடுத்துக்கோங்க என அன்னபூரணியை டோட்டல் வாஷ் அவுட் செய்துள்ளார்.
மண்ணாங்கட்டி என்னாகுமோ?: பிளாக்ஷீப் டீமில் இருந்து ஏற்கனவே எடுத்த படங்கள் எல்லாம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், நயன்தாரா அடுத்து நடித்து வரும் மண்ணாங்கட்டி படம் என்ன ஆகும்? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











