ஜவ்வு மாதிரி இழுக்குது.. அம்மாவ போய் யாராவது.. ’ரத்னம்’ படத்தை துவைத்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, முரளி ஷர்மா, கௌதம் மேனன், ராமச்சந்திரா ராஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த வாரம் வெளியான ரத்னம் திரைப்படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
ரத்னம் திரைப்படத்தில் நான்கு சண்டை இயக்குநர்கள் உருவாக்கிய சண்டைக் காட்சிகள் அனைத்தும் தரமாக இருப்பதாக பாராட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஆனால், வெறும் சண்டைக் காட்சிகள் மட்டுமே ஒரு படத்தை வெற்றி படமாக மாற்றி விடுமா என்கிற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.
மார்க் ஆண்டனி வெற்றி: விஷால் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில் எனிமி திரைப்படம் அவருக்கு ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது. அந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு முதன்முறையாக 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய படமாக மாறியது.
எஸ்.ஜே சூர்யா காரணமா?: பல ஆண்டுகளுக்கு பிறகு விஷால் படம் வெற்றி அடைந்த நிலையில், அதற்கு காரணம் விஷால் இல்லை என்று எஸ்.ஜே. சூர்யா தான் என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன. இந்நிலையில், இந்த வாரம் வெளியான ரத்னம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். முதல் நாளிலேயே தியேட்டர்கள் கூட்டமாக இல்லாத நிலையில், முதல் வாரம் வசூல் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: நல்ல படங்களையே வச்சு செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் விஷாலின் ரத்னம் படம் கிடைத்தால் சும்மாவா விடுவார் என்பது போல அவரது விமர்சனம் பட்டைய கிளப்பியுள்ளது. யாராவது அம்மாவை போய் காதலிப்பார்களா? கதையே தப்பா இருக்கிறது என ஆரம்பத்திலேயே கிளீன் போல்ட் செய்து விட்டார்.
விஷாலுக்கு அம்மாவாக பிரியா பவானி சங்கர்: விஷாலுக்கு ஜோடியாகவும் விஷாலுக்கு அம்மாவாகவும் நடிகை பிரியா பவானி சங்கர் ரத்னம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே இதுதான் என பலரும் விமர்சித்து வரும் நிலையில், ஆரம்பத்திலேயே ஹரி சொதப்பி விட்டார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார். மேலும் படம் எங்கேயும் சுவாரசியமாக இல்லாமல் ஜவ்வு போல இழுத்துக்கொண்டு செல்வதால் போர் அடிக்கிறது என்றும் கூறியுள்ளார். விஜய் ஆண்டனி போல விஷாலும் ப்ளூ சட்டை மாறன் உடன் சண்டை போடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதனை பிரஸ் மீட்டில் துரத்தி அடித்ததை போல ப்ளூ சட்டை மாறனுக்கும் விஷால் ஏதாவது பதிலடி கொடுப்பாரா என்றும் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர். ஆக்ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











