Dhurandhar 2 Blue Sattai Review: மோடி வர சீன் குபீர் சிரிப்பு.. துரந்தர் 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் நேற்று சிறப்புக் காட்சி திரையிடப்பட்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என நாடு முழுவதும் துரந்தர் 2 படத்தை பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் இது முழுக்க முழுக்க பாஜக சார்பு படம் என்று ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

இந்து - முஸ்லிம் பகை மற்றும் இந்தியா - பாகிஸ்தான் பகையை வளர்க்கும் பல படங்களில் துரந்தர் 2 படம் முதல் இடத்தையே பிடித்து விட்டது என்றும் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். Demonitization அறிவிப்பை வெளியிட்டு ஒரே நாளில் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என மோடி அறிவிக்க காரணமே பாகிஸ்தானின் கள்ள நோட்டு சதிதான் என துரந்தர் 2 படத்தில் முட்டுக் கொடுத்திருப்பதை பார்த்தால் குபீர் சிரிப்பு வருகிறது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் சொல்லியுள்ளார்.

Blue Sattai Maran gives Positive review to Ranveer Singh s Dhurandhar 2 and lightly trolls Modi
Photo Credit:

ஆனால், அதே நேரம் துரந்தர் 2 படமாக எப்படி இருக்கிறது என அவர் கொடுத்துள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஃபர்ஸ்ட் பார்ட் பார்த்துடுங்க: துரந்தர் 2 படத்தை முதல் பாகமாக வெளியிட்டு இருந்தால் கூட படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், துரந்தர் திரைப்படம் படமாக நன்றாக வந்ததற்கு காரணமே அந்த படத்தின் மெயின் வில்லனான அக்‌ஷய் கன்னா நடித்த ரஹ்மான் டக்கெயிட் கதாபாத்திரம் தான். துரந்தர் 2ம் பாகத்தை பார்ப்பதற்கு முன்பாக கண்டிப்பாக முதல் பாகத்தை பார்த்து விட வேண்டும். இல்லை என்றால் படத்தை ஃபாலோ செய்ய முடியாது என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

ஆரம்பமே அசத்தல்: துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் எப்படி பாகிஸ்தானுக்கு ஸ்பையாக செல்கிறார் என்பதை இறுதியில் தான் சில டீசர் போல காட்டியிருப்பார்கள். ஆனால், துரந்தர் 2 படத்தின் துவக்கத்திலேயே ஜஸ்கிரிட் சிங் யார்? அவன் ஏன் தூக்குத்தண்டனை கைதியாக சிறைக்குச் செல்கிறான். அவனது குடும்பத்துக்கு என்ன ஆகிறது என அனைத்தையும் டீட்டெயிலா காட்டிய விதத்தில் படம் ஆரம்பத்திலேயே அசத்துகிறது என ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.

4 மணி நேரம் உட்கார வச்சிட்டாங்க: 2வது பார்ட் படம் என்றால் அரைத்த மாவையே அரைப்பார்கள் என நினைத்தேன். ஆனால், 4 மணி நேரம் சின்ன சின்ன வில்லன்களை வைத்துக் கொண்டே ஆதித்யா தர் சீட்டில் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார். ஏற்கனவே வந்த அனைத்து ஸ்பை த்ரில்லர் படங்களிலும் இருந்த அதே பழைய சீன் தான் என்றாலும் ஸ்க்ரீன்பிளே மூலம் படத்தை தேற்றிவிட்டனர். ரன்வீர் சிங்கின் அசுரத்தனமான நடிப்புக்காகவே துரந்தர் 2 தூள் கிளப்புகிறது என பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். ப்ளூ சட்டை மாறனிடம் இருந்து இப்படியொரு பாசிட்டிவ் விமர்சனம் வந்ததை ரசிகர்களே நம்ப மறுத்து இது ஃபேக் வீடியோவா அல்லது உண்மையான வீடியோவா என டபுள் செக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X