Blue Sattai Maran Miss You Review: மிஸ் யூ விமர்சனம்.. மேக்கிங் சூப்பர்ன்னு சொன்ன ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் நேற்று வெளியான மிஸ் யூ திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார். பொதுவாக புதிதாக வரும் கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன் பல பாசிட்டிவான விஷயம் சித்தார்த் படத்தில் இருப்பதாக சொல்லியுள்ள நிலையில், ரசிகர்கள் அப்போ படம் நல்லா இருக்கும் போலயே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தனது சொந்த தயாரிப்பிலேயே சித்தார்த் சித்தா படத்தை எடுத்து வெளியிட்டார். பாடல்கள் முதல் படம் வரை அனைவரையும் கவர்ந்தது.

miss you  review  blue sattai maran


இந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 2வது ஹீரோவாகவே சித்தார்த் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்த வாரம் மிஸ் யூ என்கிற படம் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருக்கிறது.

காதல் திரைப்படம்: நான் உன்னை பார்த்தேன், நீ என்ன பார்த்த என ரிப்பீட் வரிகளுடன் வெளியான மிஸ் யூ படத்தின் பாடல் ட்ரோல் செய்யப்பட்டாலும், நீண்ட நாளுக்குப் பிறகு சித்தார்த் நடிப்பில் ஒரு லவ் மூவி வருகிறதே என இளைஞர்கள் அந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆக்‌ஷன் மசாலா படங்களை எல்லாம் பார்த்து போரடித்த ரசிகர்களுக்கு லவ் சப்ஜெக்ட் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்கிங் சூப்பரா இருக்கு: மிஸ் யூ படத்தை தன்னை போல வருஷத்துக்கு பல படங்களை பார்க்கும் நபர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது என்றும் எப்போதாவது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும் படத்தை கடைசி வரை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க வைக்க முக்கிய காரணமே படத்தின் மேக்கிங் தான். நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் என ப்ளூ சட்டை மாறன் அளவுக்கு மீறிய பாசிட்டிவ் விமர்சனங்களை இந்த படத்துக்கு கொடுத்துள்ளார்.

சம்திங் மிஸ்ஸிங்: நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குநர் ராஜசேகர் திரைக்கதையில் அந்த சுவாரஸ்யத்தை கடத்த தவறிவிட்டார் என்றும் அதனால் தான் சம்திங் மிஸ்ஸிங் ஆன மாதிரியே படம் செல்வதாகவும் இந்த படம் மோசமான படம் அல்ல ஓகே ரகம் தான் என்றும் விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X