Blue Sattai Maran: ஆடு ஜீவிதம் படத்தில் இதுதான் பெரிய குறை.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம்!

சென்னை: ஆடு ஜீவிதம் படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது ஸ்டைலில் நெகட்டிவ் ரிவ்யூவை அள்ளி தெளித்து இருக்கிறார். ஆடு ஜீவிதம் படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் அடுக்கியிருக்கிறார்.

மேலும், போகிற போக்கில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு ஏன் விமர்சனம் கொடுக்கவில்லை என்பதையும் நக்கலாக தனது ஸ்டைலில் பேசி மாஸ் காட்டியிருக்கிறார்.

Blue Sattai Maran notified mistakes in Prithviraj s Aadujeevitham in his review

பிருத்விராஜ், அமலா பால் நடித்து பிளஸ்ஸி இயக்கி உள்ள ஆடு ஜீவிதம் படம் கொஞ்சம் சரியாக எடுத்திருந்தாலும் ஆஸ்கர் விருது பெற்ற அந்த படத்துக்கு நிகரான படமாக உருவாகியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: ஆடு ஜீவிதம் படத்திற்காக பிருத்விராஜ் கடுமையாக நடித்துள்ளார். மிகைப்படுத்தப்படாத நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது. பாலை வனம் என்றால் சிஜியில் எடுக்காமல், ராஜஸ்தானில் வைத்து மேட்ச் செய்து வெறுப்பேற்றாமல் சவுதி அரேபியாவில் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், ஜார்டான் போன்ற இடங்களில் உண்மையான இடத்திற்கே படக்குழு சென்று தத்ரூபமாக இப்படியொரு படத்தைக் கொடுத்திருப்பது சூப்பரான விஷயம் என பாசிட்டிவ் சைடு பற்றி பேசியுள்ளார்.

படத்தில் என்ன பிரச்சனை: ஆடு ஜீவிதம் படம் ஆஸ்கர் படம் அளவுக்கு வந்திருக்க வேண்டிய படம். ஆனால், இந்த படத்தை நான் லீனியராக சொல்லாமல் லீனியராக எடுத்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும் என்று தனது கருத்தைக் கூறியுள்ளார். மேலும், கொஞ்சம் கொஞ்சமாக நஜீப் படும் கஷ்டங்களை சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அவரது பிரச்சனைகளையே காட்டுவது படத்துடன் கனெக்ட் ஆக முடியவில்லை என ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

உண்மை கதை: நஜீப் என்பவர் சவுதி அரேபியாவில் சிக்கிக் கொண்டு அடிமையாக்கப்பட்டு அங்கிருந்து தப்பித்து வந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் தான் இது. உங்க இஷ்டத்துக்கு கதையை மாற்ற முடியாது ப்ளூ சட்டை என மாறனை பிருத்விராஜ் ரசிகர்கள் பிராண்டி வருகின்றனர்.

Blue Sattai Maran notified mistakes in Prithviraj s Aadujeevitham in his review

ஆஸ்கர் படம் அளவுக்கு: ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 12 இயர்ஸ் ஆஃப் ஸ்லேவ் படத்தின் கதையும் இதே போலத்தான் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். அந்த படத்தில் நாயகனின் வலி நமக்கு கனெக்ட் ஆகும். ஆனால், இங்கே அது கொஞ்சம் மிஸ்ஸிங். அதில், கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இந்த படமும் அந்த படம் அளவுக்கு வந்திருக்கும். ஆனால், பிருத்விராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பை போட்டு நடித்துள்ளார் என்றும் இந்த படத்தை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம் என்றும் ப்ளூ சட்டை மாறன் கலவையான விமர்சனத்தையே கொடுத்துள்ளார்.

மஞ்சுமெலை மிஞ்சுமா?: மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான பிரேமலு 100 கோடி வசூலும், பிரமயுகம் 80 கோடி வசூலும் ஈட்டிய நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் 200 கோடி வசூல் ஈட்டியுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வசூலை ஆடு ஜீவிதம் மிஞ்சுமா? என்கிற கேள்விதான் தற்போது மலையாள திரையுலகில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X