Youth Blue Sattai Maran Review: கென் கருணாஸ் பாஸ் ஆகிட்டாரு.. ’யூத்’ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள 'யூத்' திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியானது. துரந்தர் 2 திரைப்படம் தமிழில் வெளியாகாத நிலையில், பல தியேட்டர்களில் அதன் காட்சிகள் ரத்தாகின. இந்நிலையில், தைரியமாக தனது 'யூத்' படத்தை இறக்கிய கென் கருணாஸுக்கு பாக்ஸ் ஆபீஸில் ஜாக்பாட் அடித்துள்ளது.

இயக்குநராகவும் ஹீரோவாகவும் முதல் படத்திலேயே அதிக வசூலை ஈட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்துக்கு பல இடங்களில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் எப்படி கழுவி ஊற்றப்போகிறாரோ என பலரும் நினைத்த நிலையில், அவரும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

Blue Sattai Maran praises Ken Karunas s  Youth  Movie in his Review
Photo Credit:

நீங்க பழைய ப்ளூ சட்டை மாறனே கிடையாது என்றும் வரிசையாக துரந்தர் 2 மற்றும் யூத் படங்களுக்கு இப்படி பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துருக்கீங்களே என ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர்.

ப்ளூ சட்டை மாறனின் 'யூத்' விமர்சனம்: கென் கருணாஸின் 'யூத்' படத்தின் முதல் பாதி ரொம்பவே சொதப்பலாகவே உள்ளது. வரிசையாக பெண்கள் வந்து இவரை காதலிப்பதும், பிரேக்கப் செய்வதுமாகவே கதை நகர்கிறது. இடைவேளை காட்சி கூட பெரிய சொதப்பலாகவே எடுத்து வைத்துள்ளார். ஆனால், 2வது பாதியில் குடும்பத்தையும் அங்கே நடக்கும் கஷ்டமான சூழலையும் கிளைமேக்ஸ் காட்சியையும் சென்டிமென்ட்டாக எடுத்துச் சென்று படத்தை பாஸ் ஆக்கிவிட்டார் கென் கருணாஸ் என ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

முதல் பாதி சொதப்பல்: 2வது பாதியில் எமோஷனல் காட்சிகளை எப்படி வைத்து படத்தை காப்பாற்றினாரோ அதே போல முதல் பாதியிலும் சரியான இடங்களில் எமோஷனல் காட்சிகளை கரெக்ட்டாக வைத்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பாகவே வந்திருக்கும். ஆனால், முதல் படத்திலேயே ஹீரோவாகவும் இயக்குநராகவும் கென் கருணாஸ் பாஸ் ஆகிவிட்டார் என்று பாராட்டியுள்ளார்.

இந்த வாரம் கல்லா கட்டும்: நாளை ரம்ஜான் மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து வசூல் வேட்டையை யூத் படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய தொகையை வசூல் செய்து படம் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்று விடும் என்கின்றனர். வித் லவ், தாய் கிழவி படங்களை போல பெரிய வசூலை ஈட்டுமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X