லீடர் போர் அடிக்காம போகுது.. ஆனால், இதுதான் மைனஸ்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்து இருக்கும் திரைப்படம் லீடர். இந்த படத்தில் ஆண்ட்ரியா, ஷாம், விடிவி கணேஷ், லால் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் குறித்து ப்ளூ சட்டைமாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

ப்ளூ சட்டைமாறன்: லீடர் திரைப்படத்தினுடைய கதையில் தூத்துக்குடியில் இருக்கும் துறைமுகத்தில் சமூக விரோதமான செயல்கள் நடப்பது. அந்த பகுதி இன்ஸ்பெக்டராக இருக்கும் ஆண்ட்ரியாவுக்கு தெரியவருகிறது. ஆனால், அதை ஆதாரத்துடன் கண்டுபிடிக்க முடியாமல் ஆண்ட்ரியா தவித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் ஆண்ட்ரியாவின் அப்பா, அந்த துறைமுகத்தில் வில்லனுடன் நெருங்கி பழகக் கூடிய ஒருவனால் தான், அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும் என சொல்கிறார்.

Leader  review  legend saravana
Photo Credit:

லெஜண்ட் சரவணணின் லீடர்: அப்போது தான் படத்தினுடைய ஹீரோவான லெஜண்ட் சரவணன், மனைவியை பறிகொடுத்துவிட்டு குழந்தையை பாசனத்தை கொட்டி வளர்த்து வருகிறார். அவர் மெக்கானிக்காக இருப்பதால், தூத்துக்குடி ஹார்பரில் இருக்கும் கார்களை இவர் சரி செய்து கொடுக்கிறார். இதனால், வில்லனுடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்படுகிறது. இதை தெரிந்து கொண்ட ஆண்ட்ரியா, லெஜண்ட் சரவணனை சந்தித்து ஹார்பர்ல இருக்கும் கண்டெய்னர்ல ஓட்டு கெட்கும் மிஷினை வைக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால், சரவணன், செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

படத்தின் கதை: ஆண்ட்ரியா மெக்கனிக்கை சந்தித்து பேசிய விஷயம் ஹார்பரில் இருக்கும் வில்லனுக்கு தெரியவர, எதுக்காக இன்ஸ்பெக்டர் உன்னை சந்தித்தார், என்ன பேசினார், என்ன கேட்டாங்க என வில்லன் மிரட்டுகிறான். அப்போது லெஜண்ட் சரவணன், உங்க வண்டில ட்ராக்கிங் டிவைஸ் வைக்க சொன்னாங்க நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என சொல்கிறார். இதை நம்பாத வில்லன், லெஜண்ட் சரவணனின் மகளை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுகிறார். அதன் பின் என்ன ஆனது என்பது தான் லீடர் படத்தின் கதை.

ஓகே ரக படம்: படத்தின் முதல் பாதி எந்தவித சேதாரமும் இல்லாமல் நல்ல விறுவிறுப்பாக வேகமாக சென்றது. நாம பயந்த அளவிற்கு படம் மோசமாக இல்ல? ஆனா, ரெண்டாவது பகுதியில் சீனுக்கு சீனு ட்விஸ்ட் வைக்கிறேனு சொல்லி, படத்துல லட்சக்கணக்கான ட்விஸ்ட்டிடை வச்சி இருக்காங்க, அவை அனைத்தும் சுவாரசியமே இல்லாத மொக்கையான ட்விஸ்ட். இந்த படத்தில் சந்தோஷமான விஷயம் என்ன என்றால், முதல் படத்தை விட ரெண்டாவது படத்துல அண்ணாச்சி நன்றாக நடித்திருக்கிறார். போன படத்தில் ரொமான்ஸ், குசும்பு செய்து ட்ரோல் மெட்டிரீயலானார். அதுதான் தன்னுடைய மைனஸ் என புரிந்து கொண்டு, இந்த படத்தில் அதை செய்யவில்லை.

பெரிய முன்னணி நடிகர் நடிக்க வேண்டிய கதையில் லெஜெண்ட் சரவணன் நடித்து, நிறைய செலவு செய்து இருக்கிறார். ஆனால், முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும் இரண்டாம் பாதியிலும் இருந்து இருந்தால், இது ஒரு 'ஓகே' ரக திரைப்படமாக இருந்திருக்கும். நல்ல வாய்ப்பு இருந்தும் இயக்குனர் அதை மிஸ் செய்து விட்டார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X