TN 2026 Review : உப்புமா படம்.. ‘TN 2026‘ ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: நடிகர் தம்பி ராமையாவின் கதை, வசனத்தில் அவருடைய மகன் உமாபதி ராமையா இயக்கி இருக்கும் திரைப்படம் 'TN 2026'. கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி குழுமம் தயாரித்து இருக்கும் இப்படத்தில், நட்டி நட்ராஜ், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் என மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று தியேட்டரில் வெளியான இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ப்ளூ சட்டைமாறன் விமர்சனம்: TN 2026 திரைப்படத்தின் கதை என்னவென்றால், ஆயிரம் ஏக்கர் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் ஜமீன்தாராக தம்பிராமையா இருக்கிறார். அவரிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் புதிதாக ஒரு ஹீரோ வந்து இருக்கிறார். அவர்தான் அடுத்த எம்ஜிஆர் என சொல்கிறார்கள். தம்பிராமையா தீவிர எம்ஜிஆர் ரசிகன் என்பதால், அந்த ஹீரோவை சந்தித்து பேசுகிறார். மேலும், வளர்ந்து வரும் நடிகரான அவருக்கு பணத்தை செலவு செய்து, சொந்த செலவில் பணத்தை தயாரித்து நட்டியை ஒரு பெரிய ஹீரோவாக ஆக்குகிறார். நட்டி பெரிய ஹீரோவாக நன்றாக வளர்ந்து விட்டதால், அவரை ஒரு அரசியல்வாதியாக மாற்றி மீட்டர் போட நினைக்கிறார் தம்பிராமையா அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் TN 2026 திரைப்படத்தின் கதை.

படத்தின் கதை: இந்த திரைப்படத்தினுடைய ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது போதே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதற்குக் காரணம் இந்த படம் விஜய் பற்றியும், விஜய்யின் அரசியல் வருகை பற்றியும் கிண்டலடிக்கும் படம் என அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திட்டித்தீர்த்தனர். ஆனால், பட குழுவினர் விஜய் எவ்வளவு பெரிய ஆள் அவரை நாங்கள் கிண்டல் அடிக்கும் வகையில் படம் எடுப்போமா என மறுத்தனர். ஆனால், படத்தைப் பார்க்கும்போது படத்தில் ஹீரோ விஜய் போலவே இருக்கிறார். விஜய் போலவே காஸ்டியூம், அவர் போலவே பாடி லாங்குவேஜூடன் வருகிறார்.
ஒரே குழப்பம்: அதோடு மட்டுமல்லாமல் ஜன நாயகன் திரைப்படம் எப்படி சென்சார் பிரச்சனையில் சிக்கியதோ, அதேபோல, இந்த படத்தினுடைய ஹீரோவான நட்டியின் படமும் சென்சார் பிரச்சனையில் சிக்குகிறது. மேலும், த்ரிஷா விவகாரம் போன்ற விஷயம் படத்தில் வந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஆழமாக சொல்லாமல் மேம்போக்காக விஜய்யை தொட்டும் தொடாமல் படத்தில் விஜய்யை பற்றி டீப்பாக எதையும் சொல்லாமல், இரண்டையும் சேர்த்து வைத்து குழப்பி படத்தை எடுத்து வைத்து இருக்கிறார்கள்.
உப்புமா படம்: ஒன்று விஜய்யை பற்றி பாசிட்டிவாகவோ அல்லது நெகட்டிவாகவோ படம் எடுத்து இருக்க வேண்டும். அல்லது விஜய் போன்ற ஒரு மனிதரை மனதில் வைத்துக் கொண்டு படம் எடுத்திருக்க வேண்டும். மொத்தத்தில் இந்த படம் ஒரு உப்புமா படம் போல உள்ளது விஜயை வைத்து படம் எடுத்து நல்லா கல்லா கட்டலாம் என நினைத்து படத்தை எடுத்தார்களே தவிர, மக்கள் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை எடுக்காமல் படம் பார்த்த அனைவரையும் கும்மாங்குத்து குத்தி அனுப்பி இருக்கிறார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











