இது கூட ஷங்கருக்கு தெரியல! இரண்டு பாகத்துல முடிக்க வேண்டிய கதை! இந்தியன் 2 படமே ஒரு.. ப்ளூ சட்டை

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்து அதன் போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் முடிவதற்கு முன்னரே இந்தியன் 2 படத்தினை இயக்கும் பணிகளை துவங்கியிருந்தார் ஷங்கர். இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் ஆகியோரை ஒரே நேரத்தில் இயக்குவது மட்டும் இல்லாமல் இரண்டு படங்களும் மெஹா ஹிட் ஆகி, மாபெரும் வெற்றியைப் பெற்ற படங்கள் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Blue Sattai Maran  Indian 2  Kamal Haasan  Shankar                           2

இந்தியன் 2 படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோ பாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் நேற்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

ட்ரெண்டிங்: இதனால் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் தெலுங்கில் படத்தின் டைட்டிலான பாரதியடு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதேபோல் இந்தியன் 2 என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்தது. படத்திற்கு தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் புரோமோஷன் செய்யப்பட்டது. இதனால் இந்தியன் 2 ஃபீவர் வெளிநாடுகளிலும் தொற்றிக்கொண்டது எனலாம்.

ப்ளூ சட்டை மாறன்: பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தியன் 2 படத்திற்கு தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதில், 28 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் தொடங்குகின்றது. படத்தின் தொடக்க காட்சிகள் மிகவும் சிறப்பாக தொடங்கப்பட்ட கதையை, ஷங்கர் தொலைத்து வைத்துள்ளார். ஷங்கர் அப்டேட் ஆகாமல் அவுட் டேட்டடான படத்தினை எடுத்து வைத்துள்ளார். பூமர் தனமாக ஒரு படத்தை எடுத்து வைத்துள்ளார். ஒவ்வொரு சண்டைக் காட்சியும் அரை மணி நேரத்திற்கு மேல் வருகின்றது. இறுதியாக லஞ்சம் வாங்கியவைனிடம் பேசுவது எல்லாம் வர்மக்கலை புத்தகத்தை விற்பனை செய்பவர்போல் டயலாக் அமைக்கப்பட்டுள்ளது.

இது கூட ஷங்கருக்குத் தெரியல: இந்தியன் என்றால் தப்பு செய்த தனது மகனையே கொலை செய்வார் என்பதுதான். ஆனால் இரண்டாம் பாகத்தில் கதையே முன்னுப்பின் முரணாக உள்ளது. இது கூட தெரியாம ஷங்கர் இந்த படத்தை எடுத்து வெச்சு இருக்காரு. 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் தாத்தா திரும்பவும் வருகின்றார் என்றால் அதற்கான முதிர்ச்சியும் தளர்ச்சியும் இருக்கவேண்டும் தானே. ஆனால் இந்த படத்தில் இந்தியன் தாத்தா கொஞ்சம் கூட பயிற்சி இல்லாமல் சக்கர வண்டியில் செல்கின்றார், ஓடுகின்றார், பறக்கின்றார்.

தேவையில்லாத கெட்டப்புகள்: படத்தில் தேவை இருக்கோ இல்லையோ ஐந்து முதல் ஆறு கெட்டப்புகளில் கமல் வருகின்றார். ஒட்டுமொத்த படத்திலும் கேமரா, ஆர்ட் டைரக்‌ஷன், இந்தியன் படத்தின் பின்னணி இசை இந்த படத்திலும் வருவதால் அதுவும் நன்றாக உள்ளது. மறைந்த கலைஞர்களின் குரல் மற்றும் காட்சிகள் ஏ.ஐ தொழில் நுட்பத்தில் செய்திருந்தனர். அது நன்றாக இருந்தது. ஊழல், லஞ்சம், விதி மீறல் எங்கு நடந்தாலும் அதனை தட்டிக் கேட்பதுதான் இந்தியன். ஆனால் இரண்டு பாகத்தில் முடிக்க வேண்டிய கதையை மூன்று பாகத்திற்கு எடுத்து வைத்துள்ளதே ஊழல்தான்” என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X