அர்ஜுனின் பிளாஸ்ட்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனமும் பிளாஸ்ட்டா இருக்கே ப்பா.. கன்ஃபார்ம் ஹிட்டுதான்

சென்னை: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் சுபாஷ் இயக்கியிருக்கும் திரைப்படம் பிளாஸ்ட். நேற்று இப்படமானது தியேட்டர்களில் ரிலீஸானது. ஆக்ஷன் விரும்பிகளுக்கு படம் முழுவதும் இயக்குநர் சூப்பர் ட்ரீட் வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக படம் கன்ஃபார்ம் ஹிட் என்றே கருதப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்ட் படம் பற்றிய விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கிறார்.

கோலிவுட்டின் சூப்பர் சீனியர் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். கடந்த பல வருடங்களாக நடித்து வரும் அவர்; இப்போது பிளாஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

Blue Sattai Maran Reviews Arjun   s Blast     Like Drishyam 1 Made as an Action Thriller
Photo Credit:

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " இந்தப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாமல்தான் போய் அமர்ந்தோம். ஏனெனில் அர்ஜுன் ஒரு நல்ல படம் நடித்து பல நூறு வருடங்கள் ஆகிவிட்டன. படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்குள்ளாகவே இந்தக் கதை எதை நோக்கி போகிறது என்பதை ரசிகர்களுக்கு நன்றாகவே புரிய வைத்துவிட்டார்கள். அதற்கு பிறகு வந்த வில்லன் கதைதான் பழையது ஆகிவிட்டது. இதில் ஒரு வில்லன் மட்டும் இல்லை. ஐந்து, ஆறு வில்லன்களுக்கு கதை சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதில் ஒரு அரை மணி நேரம் வழக்கம்போல் சென்றுவிட்டது.

Also Read
சூர்யா வீட்டிலிருந்து விஜய்க்கு விழுந்த வாக்குகள் எத்தனை தெரியுமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே ப்பா
சூர்யா வீட்டிலிருந்து விஜய்க்கு விழுந்த வாக்குகள் எத்தனை தெரியுமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே ப்பா

ரொம்பவே பிரமாதம்: ஆனால் ஹீரோ குடும்பமும், வில்லன் க்ரூப்பும் சண்டை போட ஆரம்பித்த பிறகு படம் தீ பிடிக்க ஆரம்பித்துவிட்டது. எந்த இடத்திலும் சோர்வாகவே இல்லை. அடுத்து அடுத்து என்ன என்றுதான் ஆவலை தூண்டுகிறார்கள். இந்தக் கதையிலேயே சுவாரஸ்யமான ஏரியா எதுவென்றால், சம்பந்தமே இல்லாமல் ஒரு கராத்தே மாஸ்டரின் குடும்பம், கார்ப்பரெட் வில்லன், போலீஸ் அதிகாரி இவர்கள் மூன்று பேரும் ஒரு புள்ளியில் சேர்கிறார்கள். ஆனால் அந்த மூன்று பேருக்குமே தெரியாது நம் எதிரி யார் என்பது. அதை ரொம்பவே பிரமாதமாக செய்திருந்தார்கள்.

பல விஷயங்கள் நன்றாக இருக்கின்றன: படம் முழுவதும் சின்ன சின்ன விஷயங்கள் நன்றாகவே இருந்தன. அபிராமி யார் என்ற விஷயம், சண்டைக்கு நடுவே மூன்று பேரை கொலை செய்துவிட்டோம்; இவர்களை என்ன செய்வது; ஒளிந்திருக்கும் இரண்டு பேரை என்ன செய்வது என்ற வசனம் உள்ளிட்டவைகள் எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தன. இப்படி பல விஷயங்கள் நன்றாக இருக்கின்றன. படத்தில் ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனும் சூப்பராக இருந்தது. அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் எல்லாம் இந்த கேரக்டர்களுக்கு நன்றாகவே ஒத்துப்போனார்கள்.

லாஜிக் ஓட்டைகளும் உண்டுதான்: நன்றாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் முகம் சுளிக்கும்படி வைப்பது எதுவென்றால்; ஆங்காங்கே வரும் லாஜிக் ஓட்டைகள்தான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 20லிருந்து 30 போலீஸ்காரர்கள் இறந்திருப்பார்கள். ஆனால் அந்த வழக்கை காவல் துறையோ பிக்பாக்கெட் கேஸ் போல் டீல் செய்துகொண்டிருக்கும். இந்த மாதிரியான சின்ன சின்ன ஓட்டைகள் அதிகம் இருக்கின்றன.

குடும்பத்தோடு பார்க்கலாம்: இந்தப் படத்தில் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், இதில் மொக்கை லவ் சீன்களோ, யோகிபாபு மாதிரி மொக்கை காமெடி சீன்களோ இல்லை. மொத்தத்தில் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால்; திரிஷ்யம் 1 திரைப்படம் ஒரு ஆக்ஷன் படமாக இருந்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் இந்தப் படத்தை பார்க்கலாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X