Karuppu Blue Sattai Maran Review: சூர்யாவின் கருப்பு ஹிட்டாக இது ஒன்னு போதும்.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

சென்னை: இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகி சூர்யா த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மே 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இந்த படத்தில் இரண்டு சுவாரஸ்யமான விஷயங்களைக் கையாண்டுள்ளார்கள், ஒன்று கோர்ட் ரூம் டிராமாவாக இருப்பது, மற்றொன்று சாமி படமாக இருப்பது. முதல் பாதியில் கூட படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, அதுவும் இந்திரன்ஸ் வரும் காட்சிகளும் கோர்ட் ரூம் காட்சிகளும் நன்றாகவே இருந்தது. அதன் பின்னர் சாமி வருகிறது, சாமி வந்த பின்னர் கோர்ட் ரூம் டிராமாக்கள் போகிறது. முதல் பாதியைப் பொறுத்தவரை ஓரளவுக்கு ஓ.கே.

Blue Sattai Maran Reviews Karuppu  Praises First Half  Slams Second Half of Suriya and RJ Balaji Film

அதுவும் முதல் பாதியில், RJ பாலாஜி கடவுளாக உள்ள சூர்யாவிடம், நீ கடவுளாக இங்கு இருந்து எல்லாம் செய்வது எளிது, ஆனால் மனிதராக இருந்து செய்வது தான் கஷ்டம், நீயும் மனிதராக இருந்து செய்து பார் தெரியும் என்று கூறும் காட்சி நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல, ஒரே நீதிபதி, ஒரே நீதிமன்றம், ஒரே வழக்கு என்பது போல ஒரே விஷயத்தையே காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

இரண்டாம் பாதியில் வந்த வழக்குகளும் சுவாரஸ்யமாக இல்லை. முதல் பாதியில் மனிதனை மனிதன் வென்றான் என்பது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் மனிதனை கடவுள் வென்றான் என்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது. இரண்டாம் பாதி முழுவதும் சூர்யா கடவுளாகவே வருகிறார். அதில் அவர் தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி, வில்லனை வீழ்த்துகிறார்.

Blue Sattai Maran Reviews Karuppu  Praises First Half  Slams Second Half of Suriya and RJ Balaji Film

ஹிட் ஆக்கிடுவாங்க: அது மட்டும் இல்லாமல், கதை எதை நோக்கி நகர்கிறது என்று தெரியவில்லை, அது தனது இஷ்டத்திற்கு சென்று கொண்டுள்ளது. ஏதேதோ படங்களின் ரெஃபரன்ஸ் எல்லாம் உள்ளே வருகிறது. திடீரென சிங்கம் சூர்யா எல்லாம் வருகிறார். கிளைமாக்ஸில் ஒரு கதாபாத்திரம் வருகிறது, அது சூர்யா மாதிரி இல்லை, கார்த்தி போல தெரிகிறது. படத்தில் வரும் கோர்ட் காட்சிகளும் அதற்காக வைக்கப்படும் வாக்குவாதங்களும் சுவாரஸ்யமாக இல்லை. இனி இந்த படத்திற்கு வரப்போகும் புரோமோசன் எல்லாம் அந்த ஊரில் 50 பெண்கள் சாமி ஆடினார்கள், இந்த ஊரில் 100 பெண்கள் சாமி ஆடினார்கள் என்று வீடியோக்கள் இணையத்தில் பகிர்ந்து படத்திற்கான புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடத்தி படத்தை ஹிட் ஆக்கிவிடுவார்கள்.

மண்டை பத்திரம்: எங்களைப் பொறுத்தவரையில் இந்த படத்தின் முதல் பாதி ஓ.கே, ஆனால் இரண்டாம் பாதி மிகவும் மோசம். அதேபோல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த படம் ஒர்க் அவுட் ஆகும், ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மண்டை பத்திரம்" என்று தனது விமர்சனத்தில் கூறியுளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X