The Rajasaab Blue Sattai Review: 3 மணி நேரம்.. 3 ஹீரோயின்.. பிரபாஸை பார்த்து பயந்துட்டேன்.. ராஜாசாப் பாவம்!

சென்னை: அதே ஊர் ஒதுக்குப்புறம் ஒரு பேய் பங்களா அதற்குள் 3 ஹீரோயின்களுடன் பிக்னிக் போகும் பிரபாஸ். அமாவாசைக்கு மட்டுமே எட்டிப் பார்க்கும் பேய், லவ் சீனும் நல்லா இல்லை, காமெடியும் இல்லை, ஹாரரும் இல்லை, மொத்தத்துல கதையே இல்லாமல் ஒரு பான் இந்தியா ஹீரோவை வச்சு 3 மணி நேரம் டார்ச்சர் செய்துள்ளார் இயக்குநர் மாருதி என ப்ளூ சட்டை மாறன் பொளந்துக் கட்டியுள்ளார்.

வர வர பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் எல்லாம் உப்புமாவாகவே இருப்பதாக ரசிகர்கள் ஒரு பக்கம் சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு, கடந்த ஆண்டு வெளியான பொங்கல் ரிலீஸ் ஃப்ளாப் படங்கள் என பொங்கல் பண்டிகையை சினிமா உலகம் வீணடித்து வருவதாக கூறுகின்றனர்.

Blue Sattai Maran roasts Prabhas s The Rajasaab Movie in his review

இந்நிலையில், முதல் ஆளாக 8ம் தேதி நைட்டே தெலுங்கு வெர்ஷன் ப்ரீமியர் உடன் வெளியான தி ராஜாசாப் படத்தை பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் சூரமொக்கை படம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

3 மணி நேர சித்ரவதை: பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தை பார்த்துவிட்டு பலரும் 3 மணி நேர முப்பரிமாண சித்ரவதை என சொல்லி வந்த நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு படத்தை பிரபாஸ் கொடுத்து சாதனை படைத்துள்ளார் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அரத பழைய கதையை எடுத்துக் கொண்டு அதிலும் கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத படமாக கிண்டி வைத்துள்ளனர் என கிண்டலடித்துள்ளார்.

3 ஹீரோயின்களுடன் ரொமான்ஸ்: பேய் வீட்டில் 3 ஹீரோயின்களை மாற்றி மாற்றி பிரபாஸ் ரொமான்ஸ் செய்கிறார். அட்லீஸ்ட் அந்த காதல் கதை மற்றும் காட்சிகளாவது ரசிக்கும்படி இருந்ததா? என்றால் அதுதான் இல்லை. காமெடி படமாகவும் இல்லாமல், பேய் படமாக திகிலும் கொடுக்காமல் ரொம்பவே போரிங்கான மொக்கை படத்தை கொடுத்து பிரபாஸ் ரசிகர்களின் கோபத்திற்கு இயக்குநர் மாருதி ஆளாகி உள்ளார் என விளாசியுள்ளார்.

பிரபாஸை பார்த்து பயந்துட்டேன்: படத்தில் வரும் பேய் கூட டைம் கிடைச்சா வரேன் என்கிற ரேஞ்சுக்கு சின்னஞ்சிறுசுகள் ரொமான்ஸ் பண்ணட்டும் என விட்டு விட்டு ஆடிக்கு ஒருவாட்டியும் அமாவாசைக்கு ஒருவாட்டியும் வருவது போல வருகின்றன. அப்படி வந்தால் கூட நம்மை அவை பயமுறுத்தவில்லை. மாறாக பிரபாஸின் மோசமான மேக்கப் மற்றும் அவரது முகத்தை பட்டி டிக்கெரிங் பண்ண போட்ட சிஜி எஃபெக்ட் பார்த்து தான் பயந்துட்டேன் என பங்கம் பண்ணியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஜனநாயகனுக்கும் ஊமைகுத்து: படமே எந்த டைம் லைனில் நடக்கிறது என தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் எல்லாம் சென்சார் டைம் லைனை ஃபாலோ செய்து சென்சார் வாங்கிட்டாங்க. ஆனால், நம்ம ஜன நாயகனுக்கு அது கூட தெரியலையே பாஸ் என்னம்மோ போங்க. முதல் பாகமே மூச்சு மூட்ட வைத்து மொக்கைப் போட்ட நிலையில், இதுல 2வது பாகத்துக்கான சர்க்கஸ் படத்துக்கு வேற லீடு கொடுத்துருக்காரு, ரசிகர்கள் மீது கொஞ்சம் கூட கருணையே இல்லையா என ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தில் பொங்கி எழுந்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X