Michael Review: மைக்கேல் ஜாக்சன் ஏன் அமெரிக்க வெற்றிக் கழகத்தை ஆரம்பிக்கல.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஆண்டனி ஃபுகுவா இயக்கத்தில் மைக்கேல் ஜாக்சனின் மருமகன் ஜாஃபர் ஜாக்சன் மைக்கேல் ஜாக்சனாக நடித்துள்ள 'மைக்கேல்' (Michael) திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியானது. இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனத்திலும் விஜய்யை கிண்டல் செய்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என்றும் படத்தில் குட்டி மைக்கேல் ஜாக்சனாக நடித்த சிறுவனின் நடிப்பு பிரம்மாதம் என பாராட்டி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

Blue Sattai Maran roasts Vijay in his Michael Movie Review

எங்கே தமிழ் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பது போல மைக்கேல் படத்தையும் கழுவி ஊற்றுவார் என எதிர்பார்த்தால், அவரது ரசிகர்களுக்காக விஜய்யின் தவெகவை மட்டும் ட்ரோல் செய்துள்ளார்.

மைக்கேல் படம் எப்படி இருக்கு?: ஜாஃபர் ஜாக்சன் நடித்த மைக்கேல் படத்தின் டிரைலர் வந்தபோதே படம் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், படம் நேற்று வெளியாகி உலகளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று பட்டையை கிளப்பி வருகிறது. அப்பாவின் கண்டிப்பான வளர்ப்பு தான் மைக்கேல் ஜாக்சனை இந்தளவுக்கு சாதனை உயரத்தை எட்ட வைத்தது என்கிற கதையை எடுத்துக் கொண்டு இயக்குநர் படத்தை செதுக்கியுள்ளார் என ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.

பிளஸ் மற்றும் மைனஸ்: படத்தில் நடித்த சிறுவன் அப்படியே மைக்கேல் ஜாக்சனின் குழந்தை பருவத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். மைக்கேல் ஜாக்சனாக நடித்த மருமகன் முதலில் செட் ஆகவில்லை. ஆனால், படம் போக போக மைக்கேல் ஜாக்சனே நடித்தது போல தனது நடிப்பாலும் நடனத்தாலும் மிரட்டிவிட்டார். படத்தில் ஒரு மருத்துவனை சீன் வரும் 10 நிமிடங்கள் போர் அடிக்குது. அப்பாவை வில்லனாக காட்டியிருக்கத் தேவையில்லை இது போன்ற சில மைனஸ்கள் இருந்தாலும் படத்தை தாராளமாக பார்க்கலாம். இதுவொரு பக்கா தியேட்டரிக்கல் மெட்டீரியல் என பாராட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Blue Sattai Maran roasts Vijay in his Michael Movie Review

விஜய்யை கலாய்த்து: மைக்கேல் ஜாக்சன் மீது செம கோவம் வந்துடுச்சு, அவர் எங்கே போனாலும் கூட்டம் வருகிறது. உடனடியாக அவர் என்ன பண்ணியிருக்கணும் அமெரிக்க வெற்றிக் கழகம் என ஒரு கட்சியை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கி அமெரிக்க அதிபராக மாறியிருக்கணும். ஆனால், அதையெல்லாம் பண்ணாமல் சும்மா கடைசி வரை பாட்டுப் பாடிக் கொண்டும், டான்ஸ் ஆடிக்கொண்டும் கிடைத்த செல்வாக்கை வேஸ்ட் பண்ணிவிட்டார் என மறைமுகமாக விஜய்யை கலாய்த்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X