பல படங்களை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படம் எப்படி இருக்கு?

சென்னை: விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படம் பல தடைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Anti Indian Movie Review | Yessa ? Bussa ? | Blue sattai Maaran | Filmibeat Tamil

படத்திற்கு கலவையான விமர்சனங்களே குவிந்து வருகின்றன.

பல படங்களை கழுவி ஊற்றி விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியும் பாராட்டியும் வருவதையும் இங்கே காண்போம்.

ஆன்டி இண்டியன் கதை

ஆன்டி இண்டியன் கதை

பாட்ஷா எனும் பெயரில் ப்ளூ சட்டை மாறன் அரசியல் கட்சிகளுக்கு போஸ்டர் ஒட்டுபவராக நடித்துள்ளார். அவரை கொலை செய்து விடுகின்றனர். அந்த உடலை அடக்கம் செய்வதில் நடக்கும் மத பிரச்சனையை மையமாக வைத்து இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் இயக்கி உள்ளார்.

டெக்னிக்கல் குறைபாடு

டெக்னிக்கல் குறைபாடு

கதை ரீதியாகவும் வசன ரீதியாகவும் படம் வலிமையுடன் இருந்தாலும் டெக்னிக்கல் சைடு ரொம்பவே படம் வீக்காக ஒரு ஷார்ட் பிலிம் படத்தை பார்க்கும் அனுபவத்தை தருவதாக ஏகப்பட்ட நெட்டிசன்கள் விமர்சித்து ப்ளூ சட்டை மாறனை வறுத்து எடுத்து வருகின்றனர்.

தலைவா நீ ஜெயிச்சுட்ட

தலைவா நீ ஜெயிச்சுட்ட

விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எனும் இயக்குநர் இளமாறனின் ஆன்டி இண்டியன் படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. தலைவா நீ ஜெயிச்சுட்ட என ப்ளூ சட்டை ரசிகர்கள் ஆன்டி இண்டியன் படத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஊரே கழுவி ஊத்துது

ஊரே கழுவி ஊத்துது

"ஒரு படம் வந்தா review பண்றேன் சொல்லி அவன் மட்டும் தான் கழுவி ஊத்துவான், இன்னைக்கு அவன் படத்தை ஊரே கழுவி ஊத்துது" என படம் ரொம்ப மொக்கை என நெகட்டிவ் விமர்சனங்களை நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் குவித்து வருகின்றனர்.

ஓவர் பில்டப்

ஓவர் பில்டப்

ரொம்ப போரா இருக்கு படம்.. இந்த படத்துக்கு எதுக்கு அவ்ளோ பெரிய பில்டப்.. 5க்கு வெறும் 1 மார்க் தான் கொடுக்க முடியும் என இந்த நெட்டிசன் ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்தை விமர்சித்து தள்ளி உள்ளார்.

ஒண்ணுமே இல்லை

ஒண்ணுமே இல்லை

"இந்த படத்தோட கதையை பாத்தீங்கனா.கதையில ஒரு எழவும் இல்லனு யாரும் சொல்லிடகூடாதுனு ஒரு எழவையே கதையா எடுத்து வச்சிருக்காங்க.. சில படத்த தியேட்டர்ல ஒரு தடவையாது பார்த்துடலாம் ஆனா இதையெல்லாம் OTT ல விட்டா கூட உட்காந்து பார்க்க முடியாது போல அப்படி ஒரு எழவா இந்த எழவு இருக்குது" என அரண்மனை படத்தை ஒரு 'இது' என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்ததை போலவே இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ஒரு தடவை பார்க்கலாம்

ஒரு தடவை பார்க்கலாம்

"ஒரு தடவ பாக்கலாம். நல்லா இருக்கு படம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, எல்லாம் ஒரு ஆளே பன்னிருக்காப்படி" என இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. நெகட்டிவ் விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறனே தனது ட்விட்டர் பக்கத்தில் எடுத்துப் போட்டு நல்லா புரமோஷன் பண்ணுங்க என்று சொல்லி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X