டோவினோ தாமஸின் நடிகர் படம் எப்படி இருக்கும்.. ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம்!
சென்னை: தென்னிந்தியளவில் கவனம்பெற்ற நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். இவர் மாயநதி, மின்னல் முரளி, 2018, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்துள்ளார். டோவினோ தாமஸ் நடிப்பில் நேற்று வெளியான நடிகர் திரைப்படம் குறித்து ப்ளு சட்டைமாறனின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
பிரபல நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் 1000க்கும் அதிகமான தியேட்டரில் நடிகர் திரைப்படம் நேற்று வெளியானது. நடிகர் லாலின் மகனான இயக்குனர் ஜீன் பால் லால் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், பாவனா, தியான் சீனிவாசன், அனூப் மேனன், ஷைன் டாம் சாக்கோ, அஜு வர்கீஸ், ஸ்ரீநாத் பாசி, லால், பாலு வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு நடிகர் திலகம் என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அடைமொழி என்பதால் பின்பு இப்பெயர் மாற்றப்பட்டது. முதலில் இப்படத்திற்கு நடிகர் திலகம் எனப் பெயரிட்டிருந்தனர். ஆனால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அடைமொழி என்பதால் பின்பு இப்பெயர் மாற்றப்பட்டது.
நடிகர் டோவினோ தாமஸ்: சினிமாவிற்குள் சினிமா என்பது தான் நடிகர் திரைப்படத்தின் கதை. இந்த படத்தின் ஹீரோவாக வரும் டோவினோ தாமஸ், படத்தில் பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். ஆனால், அவர் அர்ப்பணிப்பு, திறமை இல்லாமல் ஏதோ மேம்போக்காக படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால், பலரும் இவன் எல்லாம் ஒரு நடிகரா, நடிக்கவே தெரியாது ஏதோ லக்குல வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கிறான் என்று பலர் டொவினோ தாமசை விமர்சித்து வருகின்றனர்.
இதுதான் படத்தின் கதை: இந்த நேரத்தில் ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறார், அப்போது இயக்குநர் சொல்வது போல நடிக்காமல் ஏனோ தானோ என்று நடித்ததால் கடுப்பான இயக்குநர் டோவினோ தாமஸ் படத்தில் இருந்து தூக்கிவிடுகிறார். இதனால், சபதம் எடுத்த டோவினோ தாமஸ் முறையாக நடிப்பை கற்றுகொள்ள முடிவு செய்து அதில் முழுமூச்சுடன் ஈடுபடுகிறார். கடைசியில் டோவினோ தாமஸ் நடிப்பை கற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தான் நடிகர் படத்தின் கதை.
மைனஸ்: இந்த படத்தின் பிரச்சனை என்ன வென்றால், ஒரு படம் நல்ல படமாக இருக்க வேண்டும் என்றால், படத்தின் வில்லன ஸ்ட்ராங்கா இருக்கணும் இல்லனா கதை ஸ்ட்ராங்கா இருக்கணும். ஆனால் இந்த படத்தில் வில்லன் இல்ல, அதே போல, கதையில் ஹீரோவிற்கு நடிக்க வராது, மேலும் அவரின் வாழ்க்கையில் ஒரு சோகம் இருக்கு, இவை ரெண்டுமே கதையில் ஒட்டவே இல்லை. அதே போல படத்தின் இரண்டாம் பாதி மிகவும் ஆமைப்போல நகர்ந்தது.
பிளஸ்: மற்றபடி மலையாளத் திரைப்படத்தில் இருக்கும் எல்லா சிறப்பு அம்சமும் இந்த படத்தில் இருந்தது. அதே போல படத்தில் நடித்திருந்த அனைவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தது. டோவினோ தாமஸ் நல்ல நடிகராக இருந்த போதும் இந்த படத்தில் நடிக்க தெரியாதவர் போல நடிக்க வேண்டும் அந்த காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மொத்தத்தில் இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கொஞ்சம் ரீஸ்க் என்று தான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











